ஆர்.கே.சுரேஷிடம் சிக்கிக் கொண்ட ‘ஒயிட் ரோஸ்’ கயல் ஆனந்தி

ஆர்.கே.சுரேஷிடம் சிக்கிக் கொண்ட ‘ஒயிட் ரோஸ்’ கயல் ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன், எளிமையான, இயல்பான, பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

இப்போது இயக்குநர் சுசி கணேசனின் முன்னாள் அசோசியேட்டாக இருந்தவரும் இந்தப் படம் மூலம் அறிமுக இயக்குநராகும் ராஜசேகர் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையான ‘ஒயிட் ரோஸ்’ படத்தில் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் மையக்கதை பற்றி இயக்குநர் ராஜசேகர் கூறும்போது, …

“ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் நிச்சயம் இருக்கும். அது நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களை விட ஆபத்தானது என்று பலர் கூறுவதை நாம் கேள்விப்படுகிறோம்.

கயல் ஆனந்தி

ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் என்று இறுதி வரை பல திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிக்கல் திரில்லராக இந்தப்படம் இருக்கும்.

படத்தின் முன்னணி கதாபாத்திரங்களைப் பற்றி மேலும் அவர் கூறுகையில்…,

“கயல் ஆனந்தி பல படங்களில் தனது அழகான நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ளார். ஆனால், இது அவரது சினிமா பயணத்தில் நிச்சயம் ஒரு சிறந்த படமாக இருக்கும்.

ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். அவர் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களை நடுங்க வைப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். இதில் பார்வையாளர்கள் அவரின் வேறு வெர்ஷனைப் பார்ப்பார்கள்.

இன்னும் பல முக்கிய நடிகர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்” என்றார்.

ஒயிட் ரோஸ்

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

எழுத்து, இயக்கம்: ராஜசேகர்,
தயாரிப்பு: ரஞ்சனி,
இசை: ஜோஹன் ஷெவனேஷ்,
ஒளிப்பதிவு: இளையராஜா வி,
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
கலை: டி.என். கபிலன், ஸ்டண்ட்ஸ்: ‘பீனிக்ஸ்’ பிரபு & ‘ராம்போ’ விமல்,
நடனம்: லீலாவதி,
ஆடை வடிவமைப்பு: ஏ. சுபிகா,
ஒலி வடிவமைப்பு & ஒலிக்கலவை: லக்ஷ்மி நாராயணன் ஏ.எஸ்.,
VFX: Hocus Pocus,
படங்கள்: எஸ் மோகன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா D’One,
பப்ளிசிட்டி டிசைன்: Zoe Studios,
நிர்வாக மேலாளர்: பி தண்டபாணி,
லைன் புரொடியூசர்: சேதுராமன்

ஒயிட் ரோஸ்

Kayal Anandhi RK Suresh starrer White Rose

இயக்குனர் மிஷ்கினை போன்றவர் வெப் இயக்குனர் ஹாரூன்.. – கார்த்திக் ராஜா

இயக்குனர் மிஷ்கினை போன்றவர் வெப் இயக்குனர் ஹாரூன்.. – கார்த்திக் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாரூன் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் நட்டி நடித்துள்ள படம் ‘வெப்’. வலை.

இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது…

நான் தமிழுக்கு அடிமை. ஹீரோயின்கள் அழகாக தமிழ் பேசியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நட்டியுடன் அவர் அறிமுகமான நாளை உட்பட 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன் இயக்குனர் மிஷ்கின் போல ஒரு சிலர்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார்கள் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஹாரூணும் ஒருவர்” என்றார் .

இயக்குனர் ஹாரூண் பேசும்போது…

, “நல்ல படைப்புகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி.

பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது.

அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும்.. கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார்.

நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100% எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.

Director Haroon is like Mysskin says Karthikraja

ஒரு படத்தின் வியாபாரத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் உதவாது – தனஞ்ஜெயன்

ஒரு படத்தின் வியாபாரத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் உதவாது – தனஞ்ஜெயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாரூன் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் நட்டி நடித்துள்ள படம் ‘வெப்’. வலை.

இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது..

“நடிகர் நடிகைகள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் அது வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட வேலைகளை ரத்து செய்துவிட்டு அவர்கள் வருவதற்கு சிரமமாக கூட இருக்கலாம்.

அதனால் தங்கள் விழா பற்றி முறையான அறிவிப்பை முன்கூட்டியே படக்குழுவினர் அவர்களுக்கு தெரிவித்து விட்டால் அவர்களுக்கும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். படம் நல்ல படமாக இருந்தால் நிச்சயமாக இப்போது ஒதுங்கிப்போனவர்கள் எல்லாம், நாளை சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல், ஓடிபி என வியாபாரம் பேச தேடி வருவார்கள்.

சினிமா தயாரிக்க வருபவர்கள் கனத்த இதயத்துடன் தான் வர வேண்டும் தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக உதவியாக இருக்குமே தவிர அவர்களின் வியாபார விஷயங்களில் நிச்சயமாக பொறுப்பெடுத்துக் கொள்ள முடியாது.

ஒருவேளை படம் தோல்வி அடைந்தாலும் வருத்தப்படக்கூடாது. தவறுகளை எப்படி களைவது என அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அதை சரி செய்ய வேண்டும். நடிகர் நட்டி அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடிக்க இருக்கிறார். வரும் நாட்களில் அவர் உலக அளவில் பேசப்படுவார்” என்று கூறினார்.

Producer council will not help in movie business

தயாரிப்பாளருக்கு டார்ச்சர் கொடுக்கும் நடிகர்களை ஒதுக்க வேண்டும்.. – கே ராஜன்

தயாரிப்பாளருக்கு டார்ச்சர் கொடுக்கும் நடிகர்களை ஒதுக்க வேண்டும்.. – கே ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாரூன் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் நட்டி நடித்துள்ள படம் ‘வெப்’. வலை.

இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது…

“நடிகர் நட்டி இருக்கும் இடம் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். அவருடன் நான் பகாசுரன் என்கிற படத்தில் இணைந்து சில நாட்கள் நடித்தபோது, அவரது அற்புதமான குணத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன் .

ஒழுக்க நெறி கொண்ட நடிகர் அவர். தயாரிப்பாளருக்கு துரோகம் செய்கின்ற, டார்ச்சர் கொடுக்கின்ற எந்த ஒரு நடிகர் என்றாலும் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். கடந்த ஒரு வருடமாக சின்ன படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். லவ் டுடே, டா டா, குட் நைட், போர் தொழில் என அந்த வரிசையில் இந்த வெப் படமும் இடம் பெறும்” என்று கூறினார்.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா கூறும்போது…

“யாருக்கும் தெரியாத விஷயம் இந்த படத்தின் இயக்குனர் ஹாரூண் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். நட்டியை சமூகம் என்று தான் நான் கூப்பிடுவேன்.

காரணம் அவரை பார்க்க செல்லும் போதெல்லாம் எப்போதும் நான்கு ஐந்து நண்பர்கள் அவருடன் இருப்பார்கள். எல்லோரும் அவர் கஷ்டப்பட்ட காலத்தில் இருந்தே உடன் இருந்த நண்பர்கள். அப்படி பழைய நண்பர்களை அரவணைத்து செல்வது வெகு சிலர் மட்டுமே. இந்த படத்தின் டைட்டான வலை என்பது பற்றி சொல்ல வேண்டும் என்றால் உங்களை லட்சம் பேர் இப்போது கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்ஷனோட இருக்கும் ஆபத்துதான் இந்த வலை” என்று கூறினார்.

We should avoid torture actors says K Rajan

ஜீனியஸ் இசையமைப்பாளர்களில் கார்த்திக் ராஜாவும் ஒருவர்.. – ஆர்.வி. உதயகுமார்

ஜீனியஸ் இசையமைப்பாளர்களில் கார்த்திக் ராஜாவும் ஒருவர்.. – ஆர்.வி. உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாரூன் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் நட்டி நடித்துள்ள படம் ‘வெப்’. வலை.

இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது…

“நடிகர் நட்டி தேர்ந்தெடுக்கும் கதைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. கார்த்திக் ராஜா ஜீனியஸ் இசையமைப்பாளர்களில் ஒருவர். அவர் சிறுவயதாக இருந்தபோதே நான் அவரிடம் சின்னக்கவுண்டர் படத்தின் கதையை கூறியிருக்கிறேன்.

நான் இயக்கிய உறுதிமொழி படத்திற்கு டிரைலரை உருவாக்கும்போது அப்போது கார்த்திக் ராஜாவும் திலீப் என்கிற பெயரில் இருந்த ஏ..ஆர் ரகுமானும் தான் அதை செய்து கொடுத்தனர்.

அதன்பிறகு பொன்னுமணி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கார்த்திக் ராஜா இசையமைத்து கொடுத்தார்.” என்று கூறினார்.

RV Udhayakumar speaks about Karthikraja and Rahman

ஹீரோயின் வரலேன்னா படம் ஹிட்டுதான்.; ரேகா நாயர் கணிப்பு

ஹீரோயின் வரலேன்னா படம் ஹிட்டுதான்.; ரேகா நாயர் கணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாரூன் இயக்கத்தில் கார்த்திக் ராஜா இசையில் நட்டி நடித்துள்ள படம் ‘வெப்’. வலை.

இந்த படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ரேகா நாயர் பேசும்போது…

“ஹீரோயின் வரவிலைலை என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அதனாலேயே படமும் ஹிட் ஆகிவிடும். ஹீரோயினும் பிரபலமாகி விடுவார். நட்டி சாரைப் பொறுத்தவரை அவர் ஒரு ஞானி. அது அவர்களுடன் பேசி பழகியவர்களுக்கு தான் தெரியும். நட்டி எல்லோருக்குமே வாய்ப்புகளை தேடி கொடுக்கிறார். தயாரிப்பாளரின் பெயரிலேயே முனி இருப்பதால் நிச்சயமாக காத்து கருப்பு அண்டாது.

நடிகர் முரளி இங்கே வருத்தப்பட்டதை பார்க்கும்போது அவர் இத்தனை வருடங்களாக இன்னும் முள் பாதையிலேயே நடந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. விரைவில் அவருக்கு வெல்வெட் பாதையில் நடக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

Rekha nair speaks about Heroine absent in movie promotion

More Articles
Follows