ரஜினி-கமலுக்கு அடுத்து தனுஷ்-சிம்புவை வைத்த கஸ்தூரி ராஜா.; அப்போ விஜய் – அஜித்.?

ரஜினி-கமலுக்கு அடுத்து தனுஷ்-சிம்புவை வைத்த கஸ்தூரி ராஜா.; அப்போ விஜய் – அஜித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1990-களில் வெளியான ‘ஆத்தா உன் கோவிலிலே’ படத்தில் நாயகனாக நடித்தவர் ரவி ராகுல்.

அதன் பின்னர் தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார் ரவி ராகுல்.

இவர் தற்போது சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் ரவி ராகுலின் குரு வும் நடிகர் தனுஷ் செல்வராகனின் தந்தையுமான கஸ்தூரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் மேடையில் பேசும்போது…

“சின்ன பட்ஜெட் படங்களை மீடியாவும் மக்களும் ஆதரிக்க வேண்டும். என்னை பார்க்க நிறைய இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் வருகிறார்கள்.

ஆனால் அவர்கள் எல்லாம் பெரிய நடிகர்களின் கால்ஷீட் காக காத்திருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

ஒரு நடிகருக்கு காத்திருப்பதனால் பல மாதங்கள் பல ஆண்டுகள் ஓடிவிடும். அந்த நேரத்தில் சின்ன சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கலாம்.

கலைப்புலி தாணு எஸ் ஆர் பிரபு உள்ளிட்டோர் சின்ன படங்களை தயாரிக்க முன்வர வேண்டும்.

ரஜினி கமல் எல்லாம் ஒரு காலத்தில் புது முகங்கள் தானே. அது போலதானே தனுஷ் சிம்புவும்..

நினைத்தால் இனிக்கும் பட காலங்களில் ரஜினி கமல் புது முகங்கள் தானே.. துள்ளுவதோ இளமை காலத்தில் தனுஷ் புது முகம் தானே.” என பேசினார்.

பொதுவாக ரஜினி கமல் வரிசையில் பெயரை சொன்னால் அடுத்ததாக விஜய் அஜித் பேரை தான் பலரும் குறிப்பிடுவார்கள்.

ஆனால் ரஜினி கமல் பெயர்களை பலமுறை உச்சரித்தும் அஜித் விஜய் பெயரை ஒருமுறை கூட குறிப்பிடவில்லை.

அதற்கு அடுத்து தனுஷ் சிம்பு பெயரை மட்டுமே குறிப்பிட்டிருந்தார் கஸ்தூரிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆத்தா உன் கோவிலிலே’ பட நாயகன் ரவி ராகுல் இயக்குனராகிறார்.; சித்தார்த் நடிக்கிறார் https://www.filmistreet.com/cinema-news/aatha-un-kovilile-hero-ravi-rahul-turns-director/

காமெடியன் போண்டா மணிக்கு உதவிய ரியல் ஹீரோஸ் விஜய்சேதுபதி – தனுஷ்

காமெடியன் போண்டா மணிக்கு உதவிய ரியல் ஹீரோஸ் விஜய்சேதுபதி – தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பட மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார் போண்டா மணி.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து புகழ் பெற்றார்.

‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட படங்கள் இவர் பெயர் சொல்லும்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றிய தகவலை இவரின் சக நடிகர் பெஞ்சமின் ஒரு வீடியோ பதிவிட்டு திரையுலகினர் போண்டா மணிக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவரை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் முழு செலவையும் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என உறுதியளித்துள்ளார் அமைச்சர்.

நடிகர் வடிவேலு தன்னால் இயன்ற உதவியைச் செய்வேன் என உறுதியளித்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி ரூ.1லட்சம் கொடுத்து போண்டாமணிக்கு உதவியிருந்தார்.

இந்த நிலையில் போண்டா மணிக்கு ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார் நடிகர் தனுஷ்.

இதற்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் போண்டா மணி.

‘படிக்காதவன்’ படத்தில் தனுஷ் விவேக் உடன் இணைந்து நடித்திருந்தார் போண்டா மணி என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை வெறுப்பேற்றும் தனுஷ்.; தனுஷை வெறுப்பேற்றும் சிலம்பரசன்.?

சிவகார்த்திகேயனை வெறுப்பேற்றும் தனுஷ்.; தனுஷை வெறுப்பேற்றும் சிலம்பரசன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரு படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி போட்டவர் பிரியங்கா மோகன்.

மேலும் டாக்டர் படத்தை இயக்கியவர் நெல்சன். இதனையடுத்து சிவகார்த்திகேயனுடன் நெருக்கம் காட்டி வந்தார் பிரியங்கா மோகன்.

இந்த நிலையில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிரியங்காவை தனக்கு ஜோடியாக போட்டு கொண்டு சிவகார்த்திகேயனை வெறுப்பேற்றி வருகிறார் தனுஷ்.

இந்த நிலையில் தனுஷை வெறுப்பேற்றும் விதமாக சிவகார்த்திகேயன் புதிய நட்பு பாராட்டி வருகிறார் சிலம்பரசன்.

சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் சிம்புவுடன் இணைந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இது மட்டுமில்லாமல் நேற்று சென்னை லீலா பேலஸில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

பொதுவாக இது போன்ற விழாக்களுக்கு படக்குழுவை சேர்ந்தவர்கள் மட்டுமே வருவார்கள்.

ஆனால் இதில் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அவர் சிம்புவுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார்.

இந்த விழாவில் மகத் கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்களும் VTK விழாவில் கலந்து கொண்டனர்.

ஆனால் கூல் சுரேஷ் கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெந்து தணிந்தது காடு’ வெற்றி: சிம்பு – கௌதம் மேனனுக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஐசரி கணேஷ்

‘வெந்து தணிந்தது காடு’ வெற்றி: சிம்பு – கௌதம் மேனனுக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஐசரி கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்காக பத்திரிகையாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர் படக்குழுவினர்.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் எனவும், முதல் பாகத்தை விட பிரமாண்டமாக பான் இந்தியா படமாக இருக்கும் எனவும் கூறியிருந்தார் ஐசரி.

இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 24ல் சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெ. த. கா. பட வெற்றி விழாவை கொண்டாடினர்.

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் சுந்தர் சி நடிகர் வைபவ் மகத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர் கௌதம் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார் ஐசரி கணேஜ். இந்த பைக்கின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என்கிறார்கள்.

நடிகர் சிம்புவுக்கு 1 கோடி மதிப்பிலான சொகுசு கார் ஒன்றையும் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார்.

இந்த புகைப்படங்ள் சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி கொண்டிருக்கிறது.

கூடுதல் தகவல்…

‘விக்ரம்’ பட வெற்றியை கொண்டாடும் விதமாக அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ்க்கு 80 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்தார் கமல்ஹாசன். மேலும் அந்த படத்தின் உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசளித்தார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

After the massive success of #VTKBlockbuster Producer @IshariKGanesh has gifted a high-end #ToyotaVellfire luxury car to @SilambarasanTR_ & a motor bike to @menongautham at #VTKSuccessMeet yesterday! ??
#VendhuThanindhathuKaadu #SilambarasanTR l #filmistreet l @Actor_SimbuFC https://t.co/JbQ7qzPYRp

‘துணிவு’ படத்திற்காக ஜோடியுடன் பாங்காங் பறந்தார் நடிகர் அஜித்

‘துணிவு’ படத்திற்காக ஜோடியுடன் பாங்காங் பறந்தார் நடிகர் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வரும் ‘துணிவு’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். போனிகபூர் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் சூட்டிங்க்கு ஓய்வு கொடுத்துவிட்டு லடாக் பகுதிகளில் தனது பைக் குழுவினர் சுற்றுப.பயணம் செய்தார் அஜித்.

இது தொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித், மஞ்சு வாரியர் பாங்காக் புறப்பட்டு சென்றுள்ளனர்.

தற்போது இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

பாங்காக் நாட்டில் அதிரடியான பைக் ஸ்டன்ட் காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர் வினோத்.

பாங்காங் ஷூட்டிங் உடன் ‘துணிவு’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என கூறப்படுகிறது.

இதன் பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை துவங்கி அடுத்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய்யின் ‘வாரிசு’ அப்டேட் : சாங் ரெண்டு.. ஃபைட் ரெண்டு.. அவ்ளோதான்.!

விஜய்யின் ‘வாரிசு’ அப்டேட் : சாங் ரெண்டு.. ஃபைட் ரெண்டு.. அவ்ளோதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் தமன் இசையில் விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’

இதில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உட்பட பலர் நடிக்க தில் ராஜு தயாரித்து வருகிறார்.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் குடும்ப செண்டிமெண்ட் படமாக வளர்ந்து வருகிறது.

‘வாரிசு’ பட சூட்டிங்கின் போது விஜய் ராஷ்மிகா எடுத்த செல்ஃபி இணையத்தில் வைரலானது.

அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் இப்படத்தின் சூட்டிங் முடிவடைய உள்ளது என்ற தகவலை நாம் ஏற்கெனவே நம் ஃபிலிம் ஸ்ட்ரீட் தளத்தில் பார்த்து இருந்தோம்.

இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

நாளை செப்டம்பர் 25ஆம் தேதி ‘வாரிசு’ படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது.

இதில் மீதமுள்ள இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் இரண்டு சண்டை காட்சிகளையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இத்துடன் ‘வாரிசு’ படத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து அடுத்த வருடம் 2023 பொங்கல் தினத்தில் ‘வாரிசு’ படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

——–
#Varisu / #Vaarasudu last schedule starts tomorrow. 2 action sequences & 2 songs left for the wrap. ???

Gear up for a grand #VarisuPongal 2023

@actorvijay @directorvamshi @SVC_official
@iamRashmika @MusicThaman @realsarathkumar @prakashraaj #Prabhu
@JSKapoor1234 @khushsundar https://t.co/EdxQP0PdZh

More Articles
Follows