ரஜினி-கமல் அரசியல் எண்ட்ரீ; கம்பேர் செய்யும் கஸ்தூரி

Kasthuri compared Rajini Kamal political entry

தமிழக அரசை விமர்சித்து சில அறிக்கைகளை வெளியிட்டதால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் கமல்ஹாசன்.

எனவே அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் தினம் தினம் வருகின்றனர்.

கமல் பேசுவது அவரது உரிமை. ஆனால் அவருக்கு எதிராக புகார்கள் தொடுக்கப்பட்டால் நான் அவர் பின்னால் இருப்பேன் என்றார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால்.

அதுபோல் நடிகை கஸ்தூரியும் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது….

அரசியலை மட்டுமே கமல் விமர்சித்து வருகிறார்.
ஆனால் அதை விடுத்து அவரை அரசியலுக்கு வந்து பார்த்தால் தெரியும் என சீண்டிக்கொண்டே இருந்தால், அவர் அரசியலைக் கற்றுக் கொண்டு வந்து அரசியலில் ஜெயித்து காட்டுவார்.” என்றார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கையில்…

ரஜினி யோசிக்கிறார். யோசிக்கிறார். யோசித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆழம் தெரியாமல் காலை வைக்கக்கூடாது என நினைக்கிறார்.

இறங்கினால்தானே ஆழம் தெரியும் என்று நான் நினைக்கிறேன்.

இறங்கி பார்ப்போம். மண் ஒட்டினால் தட்டி விட்டு எழுவோம் என நான் நினைக்கிறேன்.

ஆனால் அவர் இருக்கும் உயரம் வேறு. அதனால் இவர் இவ்வளவு யோசிக்கிறார் என நினைக்கிறேன்.” என தன் சமீபத்திய பேட்டியில் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி பேசினார்.

Overall Rating : Not available

Latest Post