ரஜினி வழியில் கார்த்தி..; தல-தளபதிக்கு கிடைக்காதது இவருக்கு கிடைக்குமா.?

ரஜினி வழியில் கார்த்தி..; தல-தளபதிக்கு கிடைக்காதது இவருக்கு கிடைக்குமா.?

தமிழ் சினிமாவை உலகளவில் சேர்த்தவர்களில் பெருமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் சாரும்.

இவரது படங்களுக்கு தமிழ்நாடு இந்தியாவை போல உலக நாடுகளிலும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஜப்பானில் தர்பார் படம் வசூல் வேட்டையாடியது. அண்மையில் வெளியான அண்ணாத்த படமும் உலகளவில் 200 கோடியை நெருங்கியுள்ளது.

இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்ட படம் என்றால் அது ரஜினிகாந்த் மீனா நடித்த ‘முத்து’ படம் தான்/

முத்து படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு அந்த நாட்டில் வெளியாகி மாபெரும் வரவேற்றை பெற்றது.

தற்போது வரை அங்குள்ள ரசிகர்கள் ரஜினியை டான்சிங் மகராஜா என்றும் மீனாவை டான்சிங் மகாராணி என்றுதான் அழைப்பார்கள். “தில்லானா தில்லானா…” பாடலுக்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்தது.

இந்திய பிரதமராக மன்மோகன் சிங் இருந்த காலத்தில் ரஜினி பற்றி ஜப்பான் பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார். தன் நாட்டு நடிகருக்கு இங்கு இப்படியொரு வரவேற்பா? என வியந்து பேசியிருக்கிறார்.

அன்றிலிருந்து இன்று வரை ரஜினி படங்களுக்கென்றே ஜப்பானில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் ரஜினி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டான கைதி படமும் ஜப்பான் மொழியில் வெளியாகவுள்ளது.

இந்த படம் வருகிற நவம்பர் 19-ந்தேதி கைதி டில்லி என்ற பெயரில் அங்கு ரிலீசாகிறது.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் அஜித் படங்களுக்கு எடுக்காத முயற்சியை கார்த்தி படத்திற்கு எடுத்துள்ளனர்.

நம் நடிகர்கள் ஜப்பானில் கொடி நாட்டினால் நமக்கு பெருமைதானே… கைதி பட வரவேற்பை பொறுத்திருந்து பார்ப்போம்.

Karthi’s super hit film to release in Japan

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *