ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் *தேவ்* பட டப்பிங் தொடங்கியது

ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் *தேவ்* பட டப்பிங் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi in devபிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படம் ”தேவ்“.

இப்படத்தில் கார்த்தி- க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இப்படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது. நாயகன் கார்த்தி முதல் நாளான இன்று டப்பிங் பேசி துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நாளை கார்த்தி மற்றும் படக்குழு குலு மணாலிக்கு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்கிறது.

ஏற்கனவே தேவ் படக்குழுவினர் குலு மணாலியில் படப்பிடிப்புக்கு செல்லும் வழியில் அங்கே கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் மற்றும் நில சரிவு காரணத்தால் படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்ப வந்தது நாம் அறிந்த ஒன்று.

அங்கே எடுக்கப்படாமல் விட்டுப்போன காட்சிகளை தற்போது மீண்டும் அங்கே படமாக்க உள்ளனர். அதை தொடர்ந்து படத்தின் முக்கியமான சேசிங் கட்சிகளும், மிகப்பிரமாண்டமான சண்டை காட்சியும் இமய மலையில் படமாகிறது.

புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இச்சண்டைக்காட்சிகளுக்கு சண்டை பயிற்சி அன்பறிவ். தற்போது நடைபெறும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 12 நாட்கள் குலுமணாலி மற்றும் இமய மலைகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதோடு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்குகிறது.

சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, வாய், பஞ்சகனி, குலுமணாலி, குல்மார்க், இமாலயா, உக்ரைன், லீவின் அண்ட் கியூ, உலகின் உயரமான மலை பிரதேசமான கார் தா ஹாயின் போன்ற பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

புலியை தத்துதெடுத்து ரூ.2.20 லட்சம் செலவிடும் சிவகார்த்திகேயன்

புலியை தத்துதெடுத்து ரூ.2.20 லட்சம் செலவிடும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

skதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் வாழும் அனு என்ற வெள்ளைப்புலியை தத்தெடுத்துள்ளார்.

இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழா மக்களுக்கு வன உயிரினங்களை பாதுகாத்தல் மற்றும் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புலி மற்றும் சிங்கத்தின் உணவுக்காக நாளொன்றுக்கு 1196 ரூபாய் செலவாகும், இதே போன்று இதர விலங்குகளுக்கு அதன் உணவிற்கேற்ப நாளொன்றிற்கான செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்ற பெண் வெள்ளைப் புலியை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்,

அதற்கான ஆவணத்தை அவர் பூங்கா இயக்குனர் எஸ்.யுவராஜிடம் வழங்கினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்; பிரபலங்கள் ஆதரவு

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்; பிரபலங்கள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Singer Chinmayi accuses lyricist Vairamuthu of sexual harassment‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பாடி பிரபலமானவர் சின்மயி.

இதனைத் தொடர்ந்து ‘சரசர சாரக்காற்று’ ‘கிளிமஞ்சரோ’ பாடல்களும் அவருக்கு புகழை தேடித்தந்தன.

ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்கள் இசையில் ஏராளமான பாடல்களை பாடி இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

அவரது சமீபத்திய பேட்டியில்…

சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது வைரமுத்து அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு பயம் வந்தது.

அவரது அலுவலகத்திலும் இரண்டு பெண்களை முத்தமிட முயற்சித்தார்.

என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேலாவது பேசுவார்கள் என நம்புகிறேன். வைரமுத்துவின் அதிகார பலத்தால் வெளியே பேச தயங்குகிறார்கள். அரசியல் ரீதியாகவும் அழுத்தம் வரலாம்.

விளம்பரத்துக்காக நான் இதை சொல்லவில்லை. எனக்கு இனிமேல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று கூட தெரியவில்லை. ஆனாலும் இதை யாராவது பேசத்தான் வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

சின்மயிக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த், நடிகை சமந்தா உள்ளிட்டவர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

சின்மயி புகாருக்கு வைரமுத்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

அதில், “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சில நிமிடங்களிலேயே, வைரமுத்து ஒரு பொய்யர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பாடகி சின்மயி.

Siddharth ✔ @Actor_Siddharth
Multiple women are speaking out against Kavignar #Vairamuthu. Without judging anyone, they must be heard. When somebody of @Chinmayi’s stature who has so much to lose, stands by the accusers, that’s huge! There will be investigation. First step #ListenToTheAccuser #MeToo #Timesup

Singer Chinmayi accuses lyricist Vairamuthu of sexual harassment

Samantha Akkineni‏Verified account @Samanthaprabhu2
Dear @23_rahulr and @Chinmayi I know the both of you for ten years now . I don’t know two more brutally honest people .It is this attribute of yours that I value most in our friendship . I love you with all my heart and what you say is the TRUTH !! #istandwithchinmayi

சர்கார் அப்டேட்ஸ்: தமிழக உரிமை 65 கோடி; சென்னை உரிமை 7 கோடி!

சர்கார் அப்டேட்ஸ்: தமிழக உரிமை 65 கோடி; சென்னை உரிமை 7 கோடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தை போலவே கேரளா மற்றும் ஆந்திராவில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.

கேரளாவில் தமிழிலேயே திரையிடப்படுகிறது.

தெலுங்கு பதிப்புக்கான பாடல்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘சர்கார்’ பட தமிழக வெளியீட்டு உரிமையை 65 கோடிக்கு மெர்சல் பட நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

மேலும் இந்த நிறுவனம் அதை ஏரியாவாரியாக பிரித்து விற்று வருகிறது.

அதன்படி, சென்னை நகரத்தின் வெளியீட்டு உரிமையை ரூ. 7 கோடிக்கு அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார்.

விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களின் சென்னை நகர உரிமையை பெற்றவர் அபிராமி ராமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் மஹத்-யோகிபாபு

சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் மஹத்-யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahat and Yogibabu teams up with Simbu in Sundar C directionதெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அத்தரண்டிகி தாரேதி’ என்ற படத்தை தமிழில் லைகா நிறுவனம் ரீமேக் செய்து வருகிறது.

இப்படத்தை சுந்தர். சி இயக்க நாயகனாக நடிக்கிறார் சிம்பு.

தெலுங்கில் சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணீதா வேடத்தில் கேத்தரீன் தெரசா நடிக்கிறார். நதியா நடித்த ஹீரோவின் மாமியார் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வரும் வேளையில் முக்கிய கேரக்டரில் மஹத்தும் யோகி பாபுவும் இணைந்து இருக்கிறார்களாம்.

Mahat and Yogibabu teams up with Simbu in Sundar C direction

*கொம்பன்* பட வில்லன் தயாரிப்பில் புட் பால் ப்ளேயராக நிவின் பாலி

*கொம்பன்* பட வில்லன் தயாரிப்பில் புட் பால் ப்ளேயராக நிவின் பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivin Pauly plays lead Arun Gopi to direct biopic on football icon IM Vijayanகேரளாவை சேர்ந்த ஐ.எம். விஜயன் அவர்கள் ‘கொம்பன்’, திமிரு, ‘கெத்து’ ஆகிய படங்களில் வில்லனாக ரசிகர்களை மிரட்டியவர்.

இவர் வில்லனாக நடித்தாலும் அடிப்படையில் இவர் ஒரு புட்பால் பிளேயர் ஆவார். “அர்ஜுனா விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்று புட்பால் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் இவர்.

இந்நிலையில் தன்னுடைய விளையாட்டு வாழ்க்கை மற்றும் அனுபவங்களை மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இதற்காக ‘பிக் டாடி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது நண்பர்களுடன் இணைந்து துவங்கியுள்ளார் ஐ.எம்.விஜயன்.

இந்த படத்தில் புட்பால் ப்ளேயராக நிவின்பாலி நடிக்க, ‘ராம்லீலா’ பட இயக்குனர் அருண்கோபி இயக்குவார் என சொல்லப்படுகிறது.

Nivin Pauly plays lead Arun Gopi to direct biopic on football icon IM Vijayan

More Articles
Follows