தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கும் தேவ் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
கிரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
இவர் கார்த்தியுடன் ஏற்கெனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்.
மேலும் நவரச நாயகன் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யா சற்றுமுன் ட்விட்டரில் வெளியிட்டார்.
Karthis Dev first look poster launched by Suriya