JUST IN திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு..; கமல் வாழ்த்து

JUST IN திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு..; கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini kamalசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே கௌரவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் :

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.”

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

மநீம தலைவரும் ரஜினியின் நண்பருமான கமல்ஹாசனும் தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அதில்…

“உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது.

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.

என கமல் தெரிவித்துள்ளார்.

Kamal wishes to Rajini on Dadasaheb Phalke Award

JUST IN இந்தியாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினி தேர்வு..; தமிழகத்தில் 3வது நபர்!

JUST IN இந்தியாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினி தேர்வு..; தமிழகத்தில் 3வது நபர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth (2)சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே கௌரவித்துள்ளது.

இதனை அடுத்து இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் :

“இந்தியத் திரைத்துறை வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டுக்கான 2019 ‘தாதா சாகேப் பால்கே’ விருதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியராக அவரது பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நடுவர் குழுவில் இருந்த ஆஷா போன்ஸ்லே, சுபாஷ்கை, மோகன்லால், சங்கர், பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு நன்றி.”

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், வினோத் கன்னா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

கோலிவுட்டில் (தமிழகத்தில்) நடிகர் திலகம் சிவாஜி கணேசன்(1996), இயக்குநர் சிகரம் பாலசந்தர் (2010) ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இந்த விருதினைப் பெறும் 3வது நபர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Superstar Rajinikanth to be bestowed with Dada Saheb Phalke award

எலெக்சனுக்கு ஸ்பெஷல் பஸ்..: ஓட்டு போட விரும்பாத மக்கள்.. ரிசர்வேஷன் மோசம்..!

எலெக்சனுக்கு ஸ்பெஷல் பஸ்..: ஓட்டு போட விரும்பாத மக்கள்.. ரிசர்வேஷன் மோசம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

special bus on election day (1)ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் 100% மக்கள் வாக்களிக்க வேண்டும் என அரசும் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துக்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

நாளை (ஏப்ரல் 1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த அறிவிப்பு வந்தும் முன்பதிவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.

அதாவது இதுவரை 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

www.tnstc.in.tnstc செயலி மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Special buses arranged on election day in TN

தேர்தல் பிரச்சார கடைசி் நாளில் பிரச்சாரம் 2 மணி நேரம் நீட்டிப்புக்கு அனுமதி.; ஏன் தெரியுமா?

தேர்தல் பிரச்சார கடைசி் நாளில் பிரச்சாரம் 2 மணி நேரம் நீட்டிப்புக்கு அனுமதி.; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

election commission of india (2)ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதற்கு முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12:00 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனை கணக்கில் கொண்டு தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என தமிழக தலைமை தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மேலும் திண்டுக்கல் லியோனியின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கூறினார்.

இத்துடன் திமுக எம்.பி.தயாநிதி மாறனின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளதாகவும் தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Election commission extends timing for campaign on last day

மிகப்பெரிய படத்தில் இருப்பது பாக்கியம்..; விஜய் படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின் ஆனந்தம்

மிகப்பெரிய படத்தில் இருப்பது பாக்கியம்..; விஜய் படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy 65 (1)சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தை இயக்கிய நெல்சன் தற்போது விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

இன்று இந்த படப்பூஜை சென்னையில் நடைபெற்றறது.

இதில் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் நாயகி பூஜா ஹெக்டே வரவில்லை.

இந்நிலையில், மலையாள நடிகையான அபர்ணா தாஸ், தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்து பதிவிட்டுள்ளார்.

‘தளபதி 65’ எனும் மிகப்பெரிய படத்தில் ஒரு அங்கமாக இருப்பது என் பாக்கியம்” என தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள அபர்ணா தாஸ்.

தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

Manoharam fame Malayalam Actress Aparna Das joins Thalapathy 65 team

கொரோனா 2வது அலை : தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனா 2வது அலை : தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona second wave in tamil nadu (2)கடந்தாண்டு 2020 மார்ச் முதல் ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

முதலில் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

தற்போது பொதுத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் கடந்த 2 வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகளவில் பரவி வருகிறது.

எனவே தேர்தலுக்கு பிறகு எந்த சமயத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தமிழக அரசு, அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் ஆலோசனையின் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, மற்ற பல நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் உள்ள விதிகள்படி செயல்பட உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.

65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட கூடாது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TN extends lock down till April 30

More Articles
Follows