ஓடோடி பார்க்க வந்த ரசிகரை அறைந்து தள்ளிய கமல்ஹாசன்

ஓடோடி பார்க்க வந்த ரசிகரை அறைந்து தள்ளிய கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal slams his fan at public place Video goes viralஉலகநாயகன் கமல்ஹாசன் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

அவரை நாம் நேரில் பார்க்க மாட்டோமோ? என பல ரசிகர்களும் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன் நண்பர் ரமேஷ் அரவிந்துடன் ஒரு இடத்திற்கு சென்று வந்துள்ளார்.

கமலின் வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு பெருமளவில் திரண்டுள்ளனர்.

அப்போது கமலை பார்த்த ஒரு ரசிகர் ஆர்வமிகுதியால் அவர் அருகில் வந்துள்ளார்.

ஆனால் கமல் அவரை அறைந்து தள்ளிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ ஒரு தற்போது இணையங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இது கமல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal slams his fan at public place Video goes viral

kamal slams

பைனான்சியர் அன்புசெழியனுக்கு ஆதரவாக டி.இமான் வாய்ஸ்

பைனான்சியர் அன்புசெழியனுக்கு ஆதரவாக டி.இமான் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

d immanஅசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு எதிராக பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.
மற்றொரு பக்கம் சரத்குமார், விஜய் ஆண்டனி, தேவயானி உள்ளிட்ட சிலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இமான் அவர்களும் தன் ஆதரவு குரலை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில்…
வெள்ளைக்கார துரை, மருது படங்களில் பணிபுரிந்த போது தயாரிப்பாளர் அன்புசெழியனை தெரியும்.
எனக்கு பல நேரங்களில் ஆதரவாக பேசியுள்ளார். எனது பணிகளை பாராட்டியுள்ளார்.
மற்றவர்கள் அவரை நெகட்டிவ்வாக சித்தரித்து வருகின்றனர்.
ஆனால் என்னுடைய பார்வையில் அவர் நல்லவர். அன்பாக நடந்துக் கொள்பவர்தான். நட்பு பாராட்டுபவர்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அன்புச்செழியன் இல்லன்னா அஜித்-விஜய் படங்கள் கிடையாது : ராஜகுமாரன்

அன்புச்செழியன் இல்லன்னா அஜித்-விஜய் படங்கள் கிடையாது : ராஜகுமாரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director raja kumaran and anbu chezhiyanபிரபல தயாரிப்பாளர் அன்புசெழியன் கொடுத்த கந்துவட்டி பணத்தை கேட்ட விவகாரத்தால் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

எனவே அன்புசெழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால், சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அன்புசெழியன் நல்லவர், அவர் மீது தவறில்லை என விஜய் ஆண்டனி, தேவயாணி, இயக்குனர் ராஜகுமாரன், தயாரிப்பாளர்கள் தானு, டிசிவா, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ராஜகுமாரன் பேசும்போது…

தமிழ் சினிமாவில் தயாராகும் பாதி படங்கள் அவருடைய பணத்தில்தான் தயாராகிறது.

அவர் பணமில்லாமல் அஜித், விஜய் படங்கள் கூட உருவாகாது. அவரே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவுகிறார்.

படத்தின் வெளியீட்டு சமயத்திலும் அவர் பல பேருக்கு உதவி செய்து வருகிறார்.” என்று பேசினார்.

நாச்சியார் டீசர் சர்ச்சை; பாலா-ஜோதிகா மீது பாய்ந்தது வழக்கு

நாச்சியார் டீசர் சர்ச்சை; பாலா-ஜோதிகா மீது பாய்ந்தது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baal and jyothikaஇளையராஜா இசையில் பாலா உருவாக்கியுள்ள படம் நாச்சியார்.

இதில் நாயகனாக ஜிவி. பிரகாஷ் நடிக்க, கதையின் நாயகியாக ஜோதிகா நடித்துள்ளார்.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் ஜோதிகா பேசிய அந்த தே….. என்ற கெட்ட வார்த்தைதான்.

இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இப்படத்தை இயக்கிய பாலா மற்றும் அந்த கெட்ட வார்த்தையை பேசிய ஜோதிகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

பெண்மையை இழிவுப்படுத்தும் கெட்ட வார்த்தை பயன்படுத்தியாகவும், பொது வெளியில் ஆபாசமாக பேசிய குற்றத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாம்.

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்துமாதவி

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்துமாதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bindhu madhavi and arulnithiநீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் சார்ந்த கதையை படமாக்கவுள்ளார் கரு.பழனியப்பன் என்பதை பார்த்தோம்.

அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என பெயரிட்டுள்ளனர்.

தற்போதுள்ள இந்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக பிந்து மாதவி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிந்து மாதவி கூறும்போது,

“நல்ல கதையாகவும் நல்ல கேரக்டராகவும் அமைய காத்திருந்தேன். அப்படி எனக்கு அமைந்த படம் ‘புகழேந்தி எனும் நான்’.

இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் நாயகி கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது.

மேலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு.பழனியப்பன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

அன்புசெழியனுக்கு ஆதரவளித்த விஜய்ஆண்டனியை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்

அன்புசெழியனுக்கு ஆதரவளித்த விஜய்ஆண்டனியை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karu Pazhaniappan statement against Vijay Antony in AnbuChezhiyan Finance issueபிரபல பைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

இது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், சரத்குமார், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் அன்புசெழியனுக்கு ஆதரவாக பேசினர்.

மேலும் அன்புசெழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் கருத்துக்கு எதிராக இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கரு பழனியப்பன்‏ @karupalaniappan

விஜய் ஆண்டனி…
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!

விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார் கரு.பழனியப்பன்.

Karu Pazhaniappan statement against Vijay Antony in AnbuChezhiyan Finance issue

More Articles
Follows