தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவையொட்டி அவருக்கு சென்னையில் உள்ள முக்கிய சாலையில் திமுக ஆட்சியின் போது சிலை வைக்கப்பட்டது.
ஆனால் இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக பொதுநலன் வழக்கு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சாலையில் உள்ள சிலையை அகற்றி, சிவாஜி மணி மண்டபத்தில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.
எனவே கோர்ட் உத்தரவுபடி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது.
இந்த செயலை சிவாஜி ரசிகர்கள் மற்றும் முக.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட சில பிரபலங்கள் கண்டித்தனர்.
இதுகுறித்து கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
Kamal HaasanVerified account @ikamalhaasan
சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதைக் எந்த நாளும் காப்போம் அரசுக்குமப்பால் என் அப்பா.
சிவாஜி உயிரோடு இருந்தபோதே கமலை தன் மூத்த பிள்ளை என்று கூறியதும், பிரபுவும், ராம்குமாரும் கமலை எங்கள் அண்ணன் கூறிவருவதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
மெரினாவில் சிவாஜி சிலை அகற்றப்பட்ட பிறகு அந்த இடத்தில் சில சிவாஜி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal said another Sivaji Statue should be created