தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் சீசன் 4 வரை கமல் தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். கமல் இல்லை என்றால் இந்த நிகழ்ச்சி தமிழில் இப்படியொரு வரவேற்பை நிச்சயம் பெற்றிருக்காது.
கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மாதம் தான் பிக்பாஸ் 4 தொடங்கியது. அக்டோபர் 4ல் தொடங்கி 2021 ஜனவரி 17ம் தேதி வரை நடந்தது.
இந்தாண்டும் கொரோனா தொற்று அச்சத்தால் பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவதில் தாமதம் ஆகிறது.
தற்போது லோகேஷ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
கமலே தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி பகத்பாசில் நரேன் காளிதாஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.
தற்போது விக்ரம் படத்தின் அவுட்டோர் காட்சிகளை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.
இதன் பின்னர் செட் போட்டு காட்சிகளை படமாக்கவுள்ளனர்.
விக்ரம் சூட்டிங் நடக்கும் இதே தளத்தில் பிக்பாஸ் 5 படப்பிடிப்பும் நடக்கவுள்ளதாம். இவை இரண்டும் இவிபி ஸ்டுடியோவில் செட் அமைத்து படமாக்க உள்ளனர்.
எனவே ஒரே தளத்திற்கு சென்று பிக்பாஸ் & விக்ரம் இரண்டு சூட்டிங்கையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறாராம் உலகநாயகன்.
இப்போ சொல்லுங்க.. ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க கமல் திட்டம் போடுகிறார் தானே..
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்பது கூடுதல் தகவல்.
Kamal Haasan’s super plan for 2 of his projects