கிராமத்தை தத்து எடுத்து கழிவறையை சுத்தம் செய்யும் கமல்

kamal haasanநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை அறிவித்துவிட்டு அதன் வளர்ச்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது செயல்களை செய்து பொது மக்களை அதிகளவில் கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தை தத்து எடுத்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டத்தை நடத்தி, அதில் கமல் பேசியதாவது:

வெற்றி பெற முடியும் என நினைக்கும் பாதையில் நாங்கள் பயணித்து வருகிறோம்.

எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காக, கிராமங்களை தத்தெடுக்கவில்லை.

8 கிராமங்களை இப்போது தத்தெடுக்கிறோம். மக்களின் ஆதரவு இருந்தால், 12 ஆயிரம் கிராமங்களை தத்தெடுக்க முடியும்.

நான் உங்களில் ஒருவனாக வந்திருக்கின்றேன். இன்றிலிருந்து இது எங்களது கிராமம். அதிகத்தூரில் 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும்.

அதிகத்தூரில் நீர் சேகரிக்கும் வழிகள் ஏற்படுத்தி தரப்படும். கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்வது நமது பொறுப்பு.

கழிப்பறை கட்டி முடித்த 2வது நாள் வந்து, அதனை சுத்தமாக வைத்து கொள்வது குறித்து நானே உதவி செய்வேன்

அதிகத்தூர் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும்.

ஏரிகள் புணரமைக்கப்பட்டு, சிறிய அணைகள் மற்றும் மடைகள் அதிகத்தூரில் உருவாக்கப்படும். இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்தையும் இனி நாங்கள் செய்து தருகிறோம்.

எது முடியுமோ அதனை நாங்கள் செய்வோம். செய்ய முடியாததை, செய்வது குறித்து உங்களிடம் ஆலோசனை கேட்போம்.

இன்னும் நிறைய ஊர்களுக்கு அதை செய்ய வேண்டும் என்பது எங்களது ஆசை. மற்ற கிராமங்கள் வரை, எங்களை கொண்டு சேர்ப்பது உங்களது கடமை.” என்று கமல் பேசினார்.

Overall Rating : Not available

Latest Post