தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக சினிமாவே போற்றும் ஓர் உன்னத கலைஞர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சினிமாவில் ஏற்காத வேடமில்லை.. பார்க்காத தொழிலில்லை என்றே கூறலாம்.
எந்த வேடத்தையும் அர்ப்பணிப்புடன் செய்பவர் கமல்ஹாசன். 230+க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து வந்த கமல் தற்போது வேறு ஒரு நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
பிரபாஸ், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ப்ராஜெக்ட் கே’.
இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க அஸ்வின் தத் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.
இதுவரை இந்திய சினிமாவில் எடுக்கப்படாத பட்ஜெட் இந்த படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு 12.01.2024 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் கமல் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக 3 வாரங்கள் கமல் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக கமலின் சம்பளம் மட்டும் 150 கோடி எனக் கூறப்படுகிறது.
Kamal Haasan plays baddie in super star film