கமல்-விக்ரம் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

கமல்-விக்ரம் இணையும் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and vikramசினிமாவுக்குக்காக தன்னையே வருத்தி நடிகர்களில் மிக மிக முக்கியமானவர்கள் கமல், விக்ரம் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர்கள் இருவரும் பரமக்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்களாம்.

இப்படத்தில் விக்ரம் நடிக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தை கமலின் உதவியாளரும் தூங்வனம் பட இயக்குநருமான ராஜேஷ் எம் செல்வா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அப்பா நீங்க கரெக்டா நடிங்க; ஜெயம்ரவிக்கு சொல்லிக் கொடுத்த ஆரவ்

அப்பா நீங்க கரெக்டா நடிங்க; ஜெயம்ரவிக்கு சொல்லிக் கொடுத்த ஆரவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam ravi with his sonசக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜீனன், ரமேஷ்திலக் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் டிக் டிக் டிக்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெயம்ரவி பேசியதாவது…

‘முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை.

இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். பிறகு நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அதே போல் இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் நம்பிக்கை வந்தது. எங்கள் நடிப்பை அது எளிதாக்கியது.

இதில் என் மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் ஒரு நாள் இயக்குநர் இது போல் ஒரு கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன். ம் நடிக்கலாம் என்றான். அதற்கு டான்ஸ் தெரியவேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான் அவனுடைய இந்த ஆட்டிடியுட் படக்குழுவினரை கவர்ந்தது.

எப்போது ஒரு மணி நேரம் கூட ஒரு இடத்தில் உட்கார மாட்டான். ஆனால் எல்லோரும் நடிக்கும் காட்சியை மானிட்டரில் பார்த்துக் கொண்டே இருப்பான்.

ஒரு காட்சியில் நீங்கள் சரியா நடிக்கவில்லை. வசனம் மறந்து விட்டீர்கள் என்று கூறி இப்படி நடிங்க என்று எனக்கு கற்றுக் கொடுத்தான்’ என்றார்.

ஜெயம்ரவி மகனுக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ்

ஜெயம்ரவி மகனுக்கு பாட்டியாக நடிக்க ஆசைப்படும் நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Pethurajஇமானின் இசையில் 100வது படமாக உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’.

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி உடன் அவரது மகன் ஆரவ் ரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற ஜனவரி 26ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் பேசியதாவது…

ஒரு வித்தியாசமான பட அனுபவத்தை இப்படம் தந்துள்ளது. படம் நன்றாக வந்துள்ளது.

ஜெயம் ரவியின் மகன் இதில் நடித்துள்ளார். அவன் வளர்ந்து பெரிய நடிகராக வந்தபின் அவருக்கு பாட்டியாக நான் நடிப்பேன்.” என்றார்.

அரசியலுக்கு வரும் ரஜினி-கமல்-விஷாலுக்கு சூர்யா வாழ்த்து

அரசியலுக்கு வரும் ரஜினி-கமல்-விஷாலுக்கு சூர்யா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth kamal vishalவிக்னேஷ்சிவன் இயக்கத்தில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பட நாயகன் சூர்யா பேசியதாவது…

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேற வேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார், கமல் சார், விஷால் உள்ளிட்டவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்க வேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.

எப்படி ஒவ்வொரு டைரக்டரும், ஒவ்வொரு தயாரிப்பாளரும் எனக்கு முக்கியமோ, அதேபோல் ஒவ்வொரு படத்திலும் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் முக்கியம்.

ரசிகர்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி.

என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள், எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது.

1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கபட்டது என்றாலும், அதை மையாக வைத்து தான் ஸ்பெஷல் 26 என்ற படம் உருவானது. முற்றிலும் வேறு ஒரு பாதையில் கதை செல்கிறது.

முதல் சந்திப்பில் இருந்து `தானா சேர்ந்த கூட்டம்’ என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது.

7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று என் படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் என்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது, அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்” என்றார் சூர்யா.

பொம்பள கமல் ரம்யாகிருஷ்ணன்; ஆம்பள மனோரமா தம்பிராமையா… : விக்னேஷ்சிவன்

பொம்பள கமல் ரம்யாகிருஷ்ணன்; ஆம்பள மனோரமா தம்பிராமையா… : விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vignesh Shivanஸ்டுடியோ கீரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது…

`தானா சேர்ந்த கூட்டம்’ சிறப்பாக உருவாக காரணம் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான்.

நான் `ஸ்பெஷல் 26′ படத்தின் உரிமையை வாங்கி, அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து, புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன்.

உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா. சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன்.

இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள். கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர், பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில் தான் இருக்கிறீர்கள்.

ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசன் மாதிரி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடியவர். இவரை பொம்பள கமல்ஹாசன் என்று கூறலாம்.

அதேபோல் தம்பி ராமையா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். இவரை ஒரு ஆம்பள மனோரமா என்று கூறலாம். அந்த அளவுக்கு அவர் பிசியாக நடித்து வருகிறார்.

அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.” என்றார்.

தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா பேசியதாவது…

`தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு என்னுடைய பங்களிப்பை என்னால் சரியாக கொடுக்க முடியவில்லை.

அனைத்தையும் பொறுத்துக்கொண்ட சூர்யா, விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு நன்றி. இன்னைக்கு இருக்கக்கூடிய கால சூழ்நிலையில் நல்லவனாக வாழ்வதை விட வல்லவனாக வாழ வேண்டியுள்ளது.

இனிமேல் என்னோடு இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் முடிவுகளை வாழ்கையில் நான் எப்போதும் எடுக்க மாட்டேன்.

இது ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் என்றாலும் ஒரு நேரடி தமிழ் படத்துக்கு என்ன உழைப்பு தேவையோ அதைவிட பல மடங்கு உழைப்பை விக்கி இந்த படத்துக்கு கொடுத்துள்ளார்.

அயன் படத்தில் வருவது போல் எனர்ஜியான சூர்யாவை இப்படத்தில் பார்க்கலாம் என்றார் ஞானவேல் ராஜா.

விக்னேஷ்சிவனை பிரதர் பிரதர் என அழுத்தமாக அழைத்த கீர்த்திசுரேஷ்

விக்னேஷ்சிவனை பிரதர் பிரதர் என அழுத்தமாக அழைத்த கீர்த்திசுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vignesh shivan and keerthy sureshஸ்டுடியோ கீரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையைமத்துள்ள இப்படத்தை பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பட நாயகன் சூர்யா, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பட நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது… நான் சூர்யாவின் ரசிகை. இன்று அவருடன் நடித்துவிட்டேன். என்றார்.

மேலும் பட வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை பலமுறை பிரதர் பிரதர் என்று அழுத்தமாக அழைத்தே பேசினார்.

அதன்பின்னர் பேசிய விக்னேஷ்சிவன் பயப்படாதீங்க சிஸ்டர், நீங்க பாதுகாப்பத்தான் இருக்கீங்க” என்றார்.

என்ன ரகசியமோ? என்ன நடந்துச்சோ..?

More Articles
Follows