*கடைசி எச்சரிக்கை* படக்குழுவுக்கு கைகொடுத்த கலைப்புலி தாணு

*கடைசி எச்சரிக்கை* படக்குழுவுக்கு கைகொடுத்த கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaipuli S Thanu launched Kadaisi Echarikkai movie teaserசுகுமார் கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் டீசரை இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு வாழ்த்தினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

முன்னதாக கடைசி எச்சரிக்கை படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பு வடிவமைப்பை இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் வெளியிட்டார். இந்தப் படத்தின் தலைப்பும் டிசைன்களும் மீடியா உலகில் பெரும் ஆர்வத்தைக் கிளப்பியிருந்தன.

இந்த நிலையில் படத்தின் டீசரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் கலைப்புலி தாணு.

டீசரைப் பார்த்த பிறகு அவர் பேசுகையில், “இன்று உலகம் மிக ஆபத்தான சூழலில் உள்ளது. இன்றைய சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியுள்ளது கடைசி எச்சரிக்கை. அனைவரும் பார்க்க வேண்டிய படம். இயக்குநர் சுகுமார் கணேசனுக்கு வாழ்த்துகள்,” என்றார்.

படத்துக்கு வி சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். AIS. நோபல் ராஜா இசையமைத்துள்ளார். கலை: ஏ மாரியப்பன், வி சீனிவாசன் தயாரித்துள்ளார். மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர். கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார் சுகுமார் கணேசன்.

Kalaipuli S Thanu launched Kadaisi Echarikkai movie teaser

ரஜினியின் *பேட்ட* உலக உரிமையை வாங்கினார் டத்தோ மாலிக்

ரஜினியின் *பேட்ட* உலக உரிமையை வாங்கினார் டத்தோ மாலிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malik Streams Corporation bagged World theatrical rights of Pettaசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’.

இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது.

இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’, ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’விஐபி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது.

மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது.

வெளிநாடு வெளியீடு உரிமையை பெற்ற மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையை (இந்தியா தவிர்த்து) பெற்றுள்ளதாக அந்நிறுவன உரிமையாளர் ’டத்தோ’மாலிக் தெரிவித்துள்ளார்.

Malik Streams Corporation bagged World theatrical rights of Petta

30 நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் *காசுரன்*

30 நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் *காசுரன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

30 Friends united and produced Kaasuran Movie‘டமால் டுமீல்’ படத்தை இயக்கிய ஸ்ரீ, எஸ்.ஆர்.ஜே. இருவரும் இணைந்து காசுரன் படத்தை தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீ நாயகனாகவும், அங்கனா ஆர்யா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

உமரா நிவாசன், லாரன்ஸாக அவினாஷ், மாயாவாக கவிதா ராதேஷியாம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காசுக்கு ஆசைப்படும் காசுரர்களைப் பற்றிய கதை இது. பணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்பதுதான் இந்தக் ‘காசுரன்’ படத்தின் கதைக் கரு.

கதையின் நாயகன் சிவா ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். ஜெஸ்ஸியின் தந்தை லாரன்ஸிற்கு சிவாவை பிடிக்காமல் போக, அவனைத் தன் செல்வாக்கை வைத்து பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் அடைக்கிறார்.

சிவா மனமுடைகிறான். ஜெஸ்ஸியும் தன் அப்பாவை வெறுக்கத் துவங்குகிறாள். பல வருடங்கள் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்த சிவா உமர் என்கிற ரவுடியின் துணையில் லாரன்ஸிடம் இருந்து பணம் பறிக்க நினைக்கிறான்.

இதில் சிவா செய்த திட்டம்தான் என்ன.. உமர் சிவாவிடமிருந்து அந்தப் பணத்தைத் திருட என்ன செய்தான்.. ஜெஸ்ஸி இந்தத் திட்டத்தில் எப்படி மாட்டிக் கொண்டாள்.

சிவாவின் இத்திட்டம் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேரை பாதித்தது.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இத்திரைப்படம் 30 நண்பர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி அவர்களால் தயாரிக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்கம் – ஜித்தா மோகன், ஒளிப்பதிவு – இ.பராந்தகன், இசை – பிரணவ் கிரிதரன், படத் தொகுப்பு – புவனேஷ் மணிவண்ணன், பாடல்கள் – ஜெ மற்றும் மனோஜ் பிரபாகர், சண்டை இயக்கம் – ஜி, நடனம் – லலிதா ஷோபி, கலை இயக்கம் – எஸ்.எஸ்.சுசீ தேவராஜ், மக்கள் தொடர்பு – நிகில்.

30 Friends united and produced Kaasuran Movie

மஜீத் இயக்கத்தில் விமல்-டயானா சாம்பிகா இணையும் *தி புரோக்கர்*

மஜீத் இயக்கத்தில் விமல்-டயானா சாம்பிகா இணையும் *தி புரோக்கர்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vimal and Diana Champika starring The Broker‘தமிழன்’, ‘பைசா’, ‘டார்ச் லைட்’ படங்களை இயக்கிய இயக்குநர் மஜீத் அடுத்து இயக்கும் படம் ‘தி புரோக்கர்’.

கான்பிடன்ட் பிலிம் கேஃப் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் நாயகனாக விமல் நடிக்கிறார். நாயகியாக டயானா சாம்பிகா நடிக்கிறார்.

மேலும், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, வினோத், தம்பி ராமையா, மயில்சாமி, மற்றும் காமெடி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பற்றிப் பேசிய இயக்குநர் மஜீத், “இது திருமணத்துக்குப் பெண் பார்க்கும் தரகர் சம்பந்தப்பட்ட கதை.

திருமணம் சார்ந்த பின்னணியில் படம் உருவாவதால் கலகலப்புக்கும் விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை.

நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுக்க காமெடி திருவிழாவாக இருக்கும். நம்பி வாங்க; சந்தோஷமா போங்க..” என்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.

Vimal and Diana Champika starring The Broker

the broker tamil movie

Breaking அஜித்-இமான் கூட்டணியின் விஸ்வாசம் பாடல்கள் ரிலீஸ் தேதி

Breaking அஜித்-இமான் கூட்டணியின் விஸ்வாசம் பாடல்கள் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Viswasam songs will be released on 16th December 2018100 படங்களுக்கு இசையமைத்துள்ள இமான் தன் 101வது படமான விஸ்வாசம் படத்தில்தான் அஜித்துடன் இணைந்துள்ளார்.

அஜித்தின் பேவரைட் டைரக்டர் சிவா இப்படத்தை இயக்கியுள்ளார்.

சத்யஜோதி தயாரித்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

அடுத்த வருடம் 2019ல் பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளதால் படத்தின் 2 பாடல்களை அண்மையில் வெளியிட்டனர்.

அடிச்சு தூக்கு என்ற பாடலை அடுத்து வேட்டி கட்டு என்ற பாடலை நேற்று டிசம்பர் 15ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியிட்டனர்.

இதனையடுத்து இன்று டிசம்பர் 16ஆம் தேதி அனைத்து பாடல்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Ajith Viswasam songs will be released on 16th December 2018

புதிய இயக்குனர்களே எனக்கு பெரிய ஹிட் கொடுத்தனர்..: ஜெயம் ரவி

புதிய இயக்குனர்களே எனக்கு பெரிய ஹிட் கொடுத்தனர்..: ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New directors gave me lot of hit movies says Jayam Ravi at Adangamaru Press meetஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மிகவும் பிரமாண்டமான செலவில் தயாரித்திருக்கும் படம் ‘அடங்க மறு’.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், ராஷி கண்ணா நாயகியாகவும் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசையமைக்க, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார்.

கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “கடந்த ஆறு வருடங்களில், நான்கு படங்களில் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறேன். அவர் ஒரு இயக்குநர்களின் நடிகர், தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுபவர்.

ஒரு இயக்குநர் தான் நினைத்த விஷயங்களை மிகச்சரியாக திரையில் கொண்டு வருவது ஒரு சிறந்த ஆளுமைத் தன்மை கொண்டவர்..” என்றார்.

நடிகர் சம்பத்ராஜ் பேசும்போது, “இயக்குநர் கார்த்திக் எனக்கு கடந்த பத்து வருடங்களாக பழக்கம். சரண், அமீர், மிஷ்கின் ஆகியோரிடம் பணி புரிந்தவர். இதிலேயே அவர் படம் எந்தளவுக்கு தரமானதாக இருக்கும் என்பது தெரிந்து கொள்ளலாம். ஜெயம் ரவி படப்பிடிப்பில் அதிகம் பேசமாட்டார்.

ஆனால், ஒரு வரி பேசினாலும் ஒட்டு மொத்தக் குழுவையே சிரிக்க வைப்பார். அந்தளவு நகைச்சுவை உணர்வு உடையவர். ‘அடங்க மறு’ படத்துடன் எத்தனை படம் ரிலீஸ் ஆனாலும், இந்த படம் தனித்து நிற்கும் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்றார்.

நாயகி ராஷி கண்ணா பேசும்போது, “இந்த ‘அடங்க மறு’ தமிழில் என்னுடைய இரண்டாவது படம், என்னை தமிழ் சினிமாவில் வரவேற்ற அனைவருக்கும் நன்றி. என்னுடைய சொந்த கம்பெனி படத்தில் நடித்த மாதிரிதான் உணர்ந்தேன், அந்த அளவுக்கு என்னை பார்த்துக் கொண்டனர் தயாரிப்பாளர்கள்.

ஜெயம் ரவியின் குணம்தான் அனைத்து கதாநாயகிகளுடன் அவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைய காரணம். இயக்குநர் கார்த்திக் கதையை சொன்னபோது, அவரின் சிந்தனையை நினைத்து வியந்து போனேன். பெண்கள் கதாபாத்திரங்களை மிக உயர்வாக வடிவமைத்திருக்கிறார்..” என்றார்.

படத்தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, “ஒவ்வொரு படமுமே எனக்கு ஒரு வாய்ப்பு என்றுதான் நினைக்கிறேன். அந்த வகையில் இந்த படம் மிக முக்கியமான விஷயம். கார்த்திக் என் வாழ்வில் மிகவும் ஸ்பெஷல். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

இயக்குநர் என் மேல் வைத்த நம்பிக்கை அளப்பரியது. ஜெயம் ரவிக்கு சமூக அக்கறை இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். என் இரண்டு வயது குழந்தை நாயகி ராஷி கண்ணாவை ‘பார்பி டால்’ என அழைக்க்கிறார். அந்த வகையில் எல்லோருக்கும் பிடித்த நாயகியாக இருக்கிறார் ராஷி…” என்றார்.

நடிகர் அழகம் பெருமாள் பேசும்போது, “நான் சினிமாவுக்கு வந்து 27 வருடங்கள் ஆகிறது. ஆனாலும், ஒரு சில படங்களில் வேலை செய்யும் போதுதான் அந்த படம் ஜெயிக்கும், சிறந்த படமாக இருக்கும் என்ற உள்ளுணர்வு வரும்.

அப்படி ஒரு உணர்வு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது. ஜெயம் ரவி தொடர்ந்து நல்ல, குடும்பப் பாங்கான படத்தில் நடிக்க வேண்டும். உங்களிடம் எல்லோரும் அதை மிகவும் விரும்புகிறார்கள்…” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசும்போது, “ஒரு இயக்குநர் நமக்கு சுதந்திரம் கொடுத்து வேலை பார்க்க விடும்போதுதான் புதுவித இசை கிடைக்கிறது. இயக்குநர் கார்த்திக் மிகவும் நல்ல மனிதர், எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார்.

இந்தப் படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் நிற்கும். சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் படமாக இருக்கும். ஜெயம் ரவி படத்தின் பாடல்கள் எப்போதுமே சூப்பர் ஹிட்.

இந்த படத்தில் 4 பாடல்கள், அதில் ‘சாயாலி’ பாடல் முதல் இடத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் மிகவும் பாஸிடிவ்வான படம்…” என்றார்.

இயக்குநர் கார்த்திக் தங்கவேலு பேசும்போது, “நான் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பேயே இயக்குனராக வேண்டியது, ஆனால் தள்ளி போட்டுக் கொண்டே இருந்தேன்.

ஒரு நாள் இந்தக் கதையை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மேடத்திடம் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க. பிடிச்சா பண்ணலாம் என்றார்.

நான் முதலில் துணை இயக்குநராக என் பணியைத் துவக்கியது இதயத் திருடன் படத்தில் ஜெயம் ரவியியுடன்தான். கடைசியாக ஆதி பகவன் படத்தில் முடித்ததும் அவரிடம்தான்.

கடந்த மூன்று வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை. நான் எழுதியிருந்த கதை ரொம்பவே ராவாக இருந்தது, அதன் பிறகு 40 காட்சிகளை மாற்றி எழுத வேண்டியிருந்தது.

ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள். எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர்.

நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியைவிட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும்போதுதான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது.

விஜி சார் வசனம் படத்துக்கு மிகப் பெரிய பலம், இந்த படத்தோடு ரிலீஸ் ஆகும் எல்லா படமும் நல்லா ஓடணும்…” என்றார்.

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசும்போது…

“இந்தப் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே திறமைசாலிகள், அனுபவசாலிகள். கார்த்திக் இந்த கதையை என்னிடம் சொன்னபோது நான் வியந்து போனேன்.

சீரியலில் பெண்களை மையப்படுத்திய கதைகளைத்தான் தேர்ந்தெடுப்போம். அந்த மாதிரி பெண்கள் பிரச்சினையை மையப்படுத்திய இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஜெயம் ரவி மாதிரி நல்ல கருத்துக்களை படத்தில் சொல்ற நடிகர்கள் நடிச்சாத்தான் நல்லா இருக்கும் என முடிவெடுத்தோம்.

இந்த படம் பேசும் கருத்துக்கள் எல்லோரையும் சிறப்பாக சென்றடையும்…” என்றார்.

படத்தின் நாயகன் ஜெயம் ரவி பேசும்போது…

“ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்புதான் நாங்க பேசணும். ரிலீஸூக்கு பிறகு ரசிகர்கள்தான் பேசணும். நாங்க பேசக் கூடாது.

எனக்கு மிகப் பெரிய ஹிட் படங்களை கொடுத்தது எல்லாமே புது இயக்குநர்கள்தான். அந்த வகையில் கார்த்திக்குக்கு இந்த படம் அமையும். முதல் படத்தில் இருந்து இன்றுவரை எனக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தே வந்திருக்கிறார்.

சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளராக முதல் படம். கேட்டதைவிடவே அதிகமாக செய்து கொடுத்தவர். ராஷி கண்ணா சமூகத்துக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்பவர்.

ஒரே நேரத்தில் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் நல்ல இசையை கொடுக்கிறார் சாம். ஒரு படத்தின் முதல் முகவரியே டீசர், ட்ரைலர்தான், அதை கட் செய்றதுல ரூபன் ஒரு கிங்.

‘எம்.குமரன்’ படத்துக்கு விஜிதான் வசனம் எழுதினார், மிகப் பெரிய வெற்றி. அடுத்து இந்த படத்துக்குத்தான் எழுதியிருக்கிறார்.

நிச்சயம் பெரிய ஹிட் ஆகும். ஒரே படத்துக்குள் பல முக்கிய கதாபாத்திரங்களை வைத்து, எல்லாமே மனதில் நிற்கும் வகையில் எழுதியிருப்பதுதான் இதன் சிறப்பு.

ஜீவா சாருக்கு பிறகு சத்யன் ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு ரொம்பவே பிடித்தது.

இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் ‘அடங்க மறு’. வரும் 21-ம் தேதி வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெறணும், அப்போதுதான் தமிழ் சினிமா நல்லா இருக்கும்…” என்றார்.

இந்தச் சந்திப்பில் நடிகர்கள் கஜராஜ், மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, சுப்பு பஞ்சு, முனீஷ்காந்த், கலை இயக்குநர் இளையராஜா, வசனகர்த்தா விஜி, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

New directors gave me lot of hit movies says Jayam Ravi at Adangamaru Press meet

More Articles
Follows