முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசைப்பட்ட ஜோதிகா

jyothikaவித்யா பாலன் நடிப்பில் இந்தியில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘துமாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டிரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, மூன்று நாட்களில் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து தமிழ் சினிமாவையே திகழ்ப்பில் ஆழ்த்தியது.

லக்‌ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், விதார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் யோகி பாபு, சிம்பு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடேட், கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் கோ.தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம்குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படம், வரும் நவம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. டிக்கெட் ரிசர்வேசன் நாளை (நவ.15) தொடங்குகிறது.

இந்நிலையில், ஹெலோ எப்.எம்-க்கு ஜோதிகா அளித்திருக்கும் பேட்டியில் படம் குறித்து பேசியதோடு, தனது திருமண வாழ்க்கை, கணவர் சூர்யா, தனது ரீ எண்ட்ரி குறித்தும் பேசியிருக்கிறார்.

அப்போது, ஜோதிகாவிடம் “நிருபராக நீங்கள் யாரை பேட்டி எடுக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டதற்கு, “மறைந்த முன்னாள் முதல்வரை பேட்டி எடுக்க ஆசை” என்று பதில் அளித்தவர், தற்போது அது சாத்தியமில்லை, என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘காற்றின் மொழி’ படத்தில் தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருப்பதோடு, பாடல் பாடியதோடு, மிமிக்ரியும் செய்திருக்கிறாராம்.

கணவன் – மனைவி பந்தத்தைப் பற்றியும் பெண்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் அதே சமயம் பெறியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள ‘காற்றின் மொழி’ அனைவரையும் கவரும் மொழியாக இருக்கும் என்றும் ஜோதிகா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Overall Rating : Not available

Related News

Latest Post