ஆறே நாட்களில் 25 கோடியை அள்ளிய ‘கோமாளி’ நடிகர்

ஆறே நாட்களில் 25 கோடியை அள்ளிய ‘கோமாளி’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravis Comali collected Rs 25c in 6 daysஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது 25 படங்களை நெருங்கி கொண்டிருக்கிறார் ரவி.

தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தன் திறமையான நடிப்பை கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

இவரது பெரும்பாலான படங்கள் அனைத்தும் தயாரிப்பாளருக்கு லாபத்தையே கொடுத்துள்ளது.

பேராண்மை, மிருதன், தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம், போகன், நிமிர்ந்து நில், அடங்கமறு என வெற்றிப் படங்களை கொடுத்து வந்த இவரது வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் கோமாளி.

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. தற்போது வரை 6 நாட்களில் ரூ. 25 கோடியை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தை ஹசரி கணேஷ் தயாரிக்க, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

இதில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால், யோகிபாபு, சாரா, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Jayam Ravis Comali collected Rs 25c in 6 days

இந்திய கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்ட மைதான்

இந்திய கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்ட மைதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்குகின்றனர.

தேசிய விருது பெற்ற படமான ‘பாதாய் ஹோ’வின் அமித் ரவீந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கயுள்ளார். திரைக்கதை சைவின் குவாட்ரோஸ் மற்றும் வசனங்களை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளனர். “மைதான்” போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணாவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு

சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)உலக திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது.
நமக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால்
மற்றும் யாஷ் ஆகியோரும் இப்படத்தைத் தயாரித்து இயக்கியதுடன், தனியொரு மனிதனாகத் தோன்றி, முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் பார்த்திபனின் வானளாவிய சாதனையை வாயார வாழ்த்திப் புகழ்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பார்த்திபனின் அபாரமான இந்த முயற்சி, உலக அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். எனவே சப் டைட்டிலுடன் படத்தை ஆஸ்கார் விருது தேர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தன் வாழ்துச் செய்தியில்,ஏற்கெனவே ஒற்றைப் பாத்திரமாக படம் முழுவதும் வந்த ராபர்ட் ரெட்ஃபோர்ட், டாம் ஹார்டி ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களின் வரிசையில் பார்த்திபனும் இணைந்து விட்டது நிதர்சனமாகத் தெரிகிறது என்று கூறியிருக்கிறார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நண்பர் பார்த்திபனின் தனித்துவம் மிக்க திரைப்பட சோதனை முயற்சி இது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தி நடிகர் ஆமிர்கான், வழக்கத்துக்கு மாறான மிகப் புதிய முயற்சி இது. இதைப்பற்றி பேசுவதற்கே பரவசமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ், யாருமே பயணப்படாத புதிய பாதையில் பயணப்படுவது பார்த்திபனுக்கு கைவந்த கலை. எங்களைப் போன்ற நடிகர்கள் செய்ய பயப்படுவதை அவர் எளிதாகச் செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கர், இதுதான் தனி மனித சாதனை. ஓத்த செருப்பு சைஸ் 7 என்ற தலைப்பே ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த செருப்பு யாருடையது என்பதைத் தெரிந்து கொள்ள முயலும்போது ஆர்வம் அதிகரிக்கிறது என்றார்.
ஆஸ்கர் விருதுக்கு முழு தகுதியுள்ள இந்தப் படத்திற்கு ஏற்கெனவே ஆஸ்கர் விருதை வென்ற புரொடக்ஷன் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் தன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்.

ராம்ஜி ஒளி்ப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் ஓத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.சத்யா பின்னணி இசைக் கோர்பு செய்திருக்கிறார். சுதர்சன் படத்தொகுப்பு செய்திருக்கும் இப்படத்துக்கு அகடமி விருது வென்ற ரசூல் பூக்குட்டி கலை இயக்குநராகவும், அம்ரித் ப்ரீத்தம் சவுண்ட் டிசைனராகவும் பொறுப்பற்றிருக்கின்றனர். பாடல்களை விவேகா எழுதியிருக்கிறார். இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்
புகைப்படங்கள் – விஷ்ணு
இணை இயக்கம் – கிருஷ்ணமூர்த்தி
பப்ளிசிட்டி டிசைனர்- டி.கண்ணதாசன்
மக்கள் தொடர்பு சுரேஷ் – சந்திரா-ரேகா (D’one)
IGENE- (D.I)
Whitee Lottus- (VFX)

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேம்ஸ் சார்பில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது.
மேலும் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7வரை சிங்கப்பூரில் நடக்கும் தெற்கு ஆசிய சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்வது குறிப்பிடத் தக்கது.

நாட்டு நடப்பைப் பிரதிபலிக்கும் ராமாயண பாத்திரம் ‘ தண்டகன் ‘

நாட்டு நடப்பைப் பிரதிபலிக்கும் ராமாயண பாத்திரம் ‘ தண்டகன் ‘

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன .அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘தண்டகன்’. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால் உணர முடியும்.

இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன் இயக்கியிருக்கிறார். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர் . தொழில் துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்க வந்துள்ளார்.

படத்தின் கதை என்ன?

தண்டகன் என்பவனின் தீய குணம் கொண்ட ஒருவனால் பல கொடூரமான செயல்கள் மூலம் இந்த சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்பதை மிக சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்த தண்டகன் திரைப்படம். பார்ப்பவர்களை ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாமல் மிகவும் விறுவிறுப்பான படமாக அமைந்துள்ளது என பட குழுவினர் தெரிவித்தனர்.

இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள் . ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி ,ஆதவ், ராம் , வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவு தளபதி ரத்னம், இசை – ஷ்யாம் மோகன், எடிட்டிங் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சி – பில்லா ஜெகன், நடனம் – ஸ்ரீசெல்வி , மக்கள் தொடர்பு – சக்தி சரவணன்.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கை மோகன் ராஜன் எழுத ஒன்றை இயக்குநர் எழுதி இருக்கிறார்.

சிக்கலான ஒரு கதையை எளிமையான திரைக்கதை மூலம் சுவாரசியப் படுத்திருக்கிறார் இயக்குநர். சலிப்புக்கும் தொய்வுக்கும் இடமில்லாத விறுவிறுப்பான திரைக்கதையால் பார்ப்பவர்களைக் கவரும் படமாக உருவாகி வருகிறது ‘தண்டகன்’. இப்படத்தை விரைவில் திரையில் வெளியிட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தோல்வியில் இருந்து மீள்வார்களா சூர்யா & சிவகார்த்திகேயன்

தோல்வியில் இருந்து மீள்வார்களா சூர்யா & சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Sivakarthikeyan expecting big victory கடந்தாண்டு 2018ல் விக்னேஷ் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார் சூர்யா. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்தாண்டு 2019ல் செல்வராகவன் இயக்கிய என்ஜிகே படமும் மாபெரும் தோல்வியை கொடுத்துள்ளது.

எனவே அடுத்து ரிலீசாகவுள்ள காப்பான் (செப்டம்பர் 20ஆம் தேதி) படத்தை பெரிதும் நம்பியிருக்கிறாராம்.

இவரைப்போல் சிவகார்த்திகேயனும் இரண்டு தோல்வி படங்களை கொடுத்துவிட்டு வெற்றிக்காக காத்திருக்கிறார்.

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய இரண்டு படங்களும் தோல்வியை தழுவியதால் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தை எதிர்பார்த்து இருக்கிறார்.

பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படமும் செப்டம்பரில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Suriya and Sivakarthikeyan expecting big victory

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் நடிகை வாணி போஜன்

விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் நடிகை வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Serial Actress Vani Bhojan committed 3 big movies டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

இவர், தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வருகிறார். ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வைபவ் நடிக்கவுள்ள ஒரு படத்திலும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கவுள்ள மற்றொரு படத்திலும் நடிக்கவிருக்கிறாராம்.

மேலும் நிரோஜன் என்பவர் இயக்கத்தில் அருண் பாண்டியனின் ஏ-பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

Serial Actress Vani Bhojan committed 3 big movies

More Articles
Follows