தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது 25 படங்களை நெருங்கி கொண்டிருக்கிறார் ரவி.
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தன் திறமையான நடிப்பை கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.
இவரது பெரும்பாலான படங்கள் அனைத்தும் தயாரிப்பாளருக்கு லாபத்தையே கொடுத்துள்ளது.
பேராண்மை, மிருதன், தனி ஒருவன், சந்தோஷ் சுப்ரமணியம், போகன், நிமிர்ந்து நில், அடங்கமறு என வெற்றிப் படங்களை கொடுத்து வந்த இவரது வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் கோமாளி.
இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. தற்போது வரை 6 நாட்களில் ரூ. 25 கோடியை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இப்படத்தை ஹசரி கணேஷ் தயாரிக்க, ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.
இதில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால், யோகிபாபு, சாரா, சம்யுக்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Jayam Ravis Comali collected Rs 25c in 6 days