சுந்தர்.சி-ஜீவா-ஜெய் இணையும் கலகலப்பு2; ஹீரோயின்களும் மாற்றம்

சுந்தர்.சி-ஜீவா-ஜெய் இணையும் கலகலப்பு2; ஹீரோயின்களும் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nikki galrani catherine theresaசுந்தர் சி இயக்கத்தில் 2012ல் வெளியான படம் கலகலப்பு.

விஜய் எபிநேசர் இசையமைத்த இப்படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம், மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நல்ல வசூல் லாபத்தை பெற்றுத் தந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சுந்தர் சி உருவாக்கவுள்ளார்.

இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த கலைஞர்களை முற்றிலுமாக மாற்றியுள்ளார்.

இதில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா உள்ளிட்டோர் நடிக்க, ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

வருகிற அக்டோபர் 4ஆம் தேதி இதன் சூட்டிங் தொடங்கவுள்ளதாம்.

இதனையடுத்த சங்கமித்ரா படத்தை சுந்தர் சி இயக்குவார் என கூறப்படுகிறது.

Jai and Jeeva in lead roles for Sundar Cs Kalakalappu 2

ஹாலிவுட் படத்திற்காக கெட்-அப்பை மாற்றிய சிம்பு

ஹாலிவுட் படத்திற்காக கெட்-அப்பை மாற்றிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu aks str new lookமணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

ஏஆர். ரஹ்மான் இசையைமக்கும் இப்படத்தில் சிம்பு உடன் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, துல்கர் நடிக்க, நாயகிகளாக ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்நிலையில் சிம்பு புதிய தோற்றத்தில் உள்ள ஒரு படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இது மணிரத்னம் இயக்கவுள்ள படத்திற்கான புதிய கெட் அப் என கூறப்படுகிறது.

மேலும் சிம்பு இயக்கி நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்திலும் இந்த கெட்டப்பில் தோன்றுவார் என தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்திற்காக தனது உடல் எடையை 15 கிலோ குறைத்துள்ளராம் சிம்பு.

2017 அக்டோபரில் ஹாலிவுட் படமும் 2018 ஜனவரியில் மணிரத்னம் படமும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SIR aka Simbu changed Stunning new look for the Mani Ratnam movie

மெர்சல் டீசர் வெளியிட விஜய்க்கு உதவி செய்த தனுஷ்.?

மெர்சல் டீசர் வெளியிட விஜய்க்கு உதவி செய்த தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush helped vijay team to release Mersal Teaserஅட்லி, விஜய் கூட்டணில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் டீசர் கடந்த செப். 21ஆம் தேதி மாலை வெளியானது.

இது தற்போது பார்வையாளர்கள் எண்ணிக்கையில் யூடிப்பில் உலக சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இந்த டீசர் சரியான நேரத்தில் வெளியாக தனுஷ்தான் காரணமாக இருந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்க இதற்கு விடை சொல்லாமல் தயாரிப்பாளர்கள் தாமதம் செய்தனர்.

இதற்கு பின்னணியில் பெப்சி ஸ்டிரைக் காரணமாக இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்போது டப்பிங் பணிகளும் பாதிக்கப்பட்டு இருந்ததாம். அப்போது தன் ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ள தனுஷ் கூறி உதவி செய்தாராம்.

இதனால்தான் மெர்சல் டீசர் சரியான நேரத்தில் வெளியானது என சொல்லப்படுகிறது.

Dhanush helped vijay team to release Mersal Teaser

மாரி2 படத்தில் தனுஷின் வில்லனை படக்குழுவினர் அறிவித்தனர்

மாரி2 படத்தில் தனுஷின் வில்லனை படக்குழுவினர் அறிவித்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tovino Thomas to play antagonist in Dhanushs Maari 2பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்த படம் மாரி.

அனிருத் இசையமைத்த இப்படத்தில் விஜய்யேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தமாஸ் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அடுத்த அக்டோபர் மாதம் முதல் மாரி2 படத்தில் தனுஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.

Tovino Thomas to play antagonist in Dhanushs Maari 2

tovino thomas maari 2

நடிகை திவ்யாவை மணக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்

நடிகை திவ்யாவை மணக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk suresh with vidhya

சலீம், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே. சுரேஷ்.

பின்னர் பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை படம் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

தற்போது வேட்டை நாய், பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் தான் திருமணம் செய்யப்போகும் நடிகையை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார்.

சன்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சுமங்கலி சீரியலில் நடித்து வரும் திவ்யாவை மணக்கவிருக்கிறார்.

இவரும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது பாசம் வந்துவிட்டதாக கூறினார்.

ஆனால் இது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமே. விரைவில் திருமண தேதியை அறிவிப்பேன் என்றார்.

விரைவில் இல்லறத்தில் இணையவுள்ள மக்களை உங்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.

Producer cum Actor RK Suresh to enter wedlock with Actress Dhivya

‘ஆண்டவர்’ கமலை ஆதரிப்பேன்; ‘கடவுள்’ ரஜினியை ஆதரிக்கமாட்டேன்… ஆர்.கே.சுரேஷ் அதிரடி

‘ஆண்டவர்’ கமலை ஆதரிப்பேன்; ‘கடவுள்’ ரஜினியை ஆதரிக்கமாட்டேன்… ஆர்.கே.சுரேஷ் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk suresh stillsதாரைப் தப்பட்டை, மருது உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ்.

தற்போது நிறைய படங்களில் தனி நாயகனாக நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரஜினி, கமல் மற்றும் அரசியல் பற்றி பேசினார்.

அப்போது தான் அரசியல் பின்னணியிலிருந்து வந்ததால், நானும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்றார்.

மேலும் தனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் அவர் எனக்கு கடவுள் போன்றவர்.

ஆனால் அவர் அரசியலில் தெளிவான முடிவை எடுக்கவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக அரசியல் குறித்து பேசி வருகிறார்.

கமல் சரியான முடிவுகளை எடுத்து வருகிறார். ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய உடனே முதல்வர் ஆனவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அவரே வந்து கமலை சந்திக்கிறார் என்றால் அவரின் அனுகுமுறையானது எப்படியானது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

எனவே கமல் கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் முதல் ஆளாக அவரை ஆதரிப்பேன்.” என்றார்.

கமலை ஆண்டவர் என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருவது தாங்கள் அறிந்த ஒன்றுதான்.

I support Kamal and wont support Rajini in Politics says Producer RK Suresh

More Articles
Follows