தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2022 ஆண்டு ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின விழா அன்று மிக குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் ஒன்றை தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு விண்வெணியில் ஏவ உள்ளனர்.
இந்த மாணவர்கள் தான் உலகிலேயே குறைவான எடைகொண்ட சாட்டிலைட்டை தயாரிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சாட்டிலைட்டில் கூடுதல் சிறப்பாக இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இளையராஜா பாடும் பாடலை ஒலிக்க திட்டமிட்டுள்ளன்ர.
அதாவது சுதந்திர விழாவின்போது விண்ணில் ஏவப்படும் சாட்டிலைட்டில் இளையராஜா பாடலை ஒலிக்க செய்ய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த பாடல் சுவானந்த் கிர்கிரே கைவண்ணத்தில் ஹிந்தியில் உருவான பாடலாகும்.
தற்போது இளையராஜா இந்த பாடலை தமிழ் மொழியில் பாடியுள்ளார்.
இஸ்ரோ உதவியுடன் இந்த விண்வெளியில் இசை சாதனை இளையராஜா சிறப்பிக்க உள்ளார்.
மாணவர்களின் இந்த முயற்சி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடமும் ஆலோசித்துள்ளனர்.
நாட்டிற்காக இந்த பாடல் எனது பங்களிப்பாக இருக்கட்டும் என சம்பளம் எதுவும் வாங்காமல் தேசப்பற்றோடு இசையமைத்து பாடி கொடுத்துள்ளார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 75 ஆண்டுகள் நிகழ்ந்த இந்தியாவின் புதுமைகளையும், இனிவரும் காலங்களில் நம் இந்தியா உலகின் நம்பர் ஒன் தேசமாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய பாடலாக இது இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
ஜெய்ஹிந்த்..
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போல வருமா..?
அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கு ஈடாகுமா..
என்ற இளையராஜா பாடல் வரிகள் தான் இப்போது நினைவுக்கு வருகிறது.
Isaignani Ilayaraja s music in space?






