இருட்டு அறையில் முரட்டு குத்து தலைப்பை எதிர்க்கும் ரோசக்கார தெலுங்கர்கள்

IAMk‘ஹரஹர மஹாதேவகி’ என்ற அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் அடல்ட் ஆபாசப் படத்தை எடுத்தார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தை

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

இதில் கவுதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் இளைஞர்களிடையே பாப்புலராக பேசப்பட்டாலும் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

திரையுலகினரிடையே கலவையான எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்தது.

இந்நிலையில் எப்போதும் தெலுங்கு மார்கெட்டை குறிவைக்கும் ஞானவேல்ராஜா இப்படத்தை அங்கு வெளியிட முயற்சி செய்து வருகிறார்.

தமிழில் இடம்பெற்ற அதே டைட்டில் அர்த்தப்படி தெலுங்கில் பதிவு செய்தார்.

அதாவது ’சீக்காட்டி கதிலோ சீத்தாகுத்துடு’ என்ற அந்த டைட்டிலில் பதிவிட அங்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி மறுத்துவிட்டதாம்.

‘இப்படியெல்லாம ஒரு சினிமாவுக்கு டைட்டில் வைப்பீங்க? இது ரொம்ப கேவலமாக இருக்கு. இதை இங்கு அனுமதிக்கமாட்டோம்’ என்று கூறிவிட்டார்களாம்.

எனவே தலைப்பை மாற்ற இருட்டு அறையில் ஆலோசனை செய்கிறார்களாம் இந்த முரட்டு குத்து அணியினர்.

Overall Rating : Not available

Latest Post