மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்

pulikesi part 2ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்கத் தொடங்கினர்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென்று தயாரிப்பு நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் பிரச்னை எழுந்தது.

எனவே படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டார் வடிவேலு.

இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. வடிவேலு முறைப்படி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராததால் சுமார் ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அதனை அவரிடமிருந்து சங்கம் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டது. இதன் மீது இருதரப்பிலும் கருத்து கேட்டு பிரச்னைக்கு முடிவு காண முயன்றனர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலையிட்டும் சமரசம் ஏற்படவில்லை.

தற்போது வடிவேலு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

Overall Rating : Not available

Related News

Latest Post