ரெண்டா.? எப்பவும்ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி; சுஹாசினியை கண்டித்த இளையராஜா

rajinikanth and ilayarajaஇளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை வெகு விமரிசையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னையில் 2 நாட்களாக நடத்தியது.

இன்று பிப்ரவரி 3ஆம் தேதி இதன் இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ரஜினி, கமல், ஷங்கர், விக்ரம், விஜய்சேதுபதி, கார்த்தி மற்றும் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், மோகன்பாபு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மலையாள சினிமாவில் இருந்து டைரக்டர் சித்திக், நடிகர் நரேன் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் மேடையேறினார்.

அப்போது சுஹாசினி பேசும்போது… இரண்டு சூப்பர் ஸ்டார்கள் மேடையில் உள்ளனர். ஒருவர் இசை சூப்பர் ஸ்டார் இளையராஜா மற்றொருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றார்.

உடனே இடைமறித்த இளையராஜா அவர்கள்… ஏம்மா.. மேடையேறிட்ட என்ன வேனாலும் பேசுவீங்களா? சினிமான்னா அது ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது எப்பவுமே ரஜினிதான் என்று சுஹாசினியை கண்டித்து பேசினார் இளையராஜா.

Overall Rating : Not available

Latest Post