தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார் இளையராஜா.
அப்போது அவர் கைவசம் தேங்காய், விபூதி உள்ளிட்ட கோயில் பிரசாதப் பொருட்கள் இருந்துள்ளன.
விமான நிலைய அதிகாரிகள் இளையராஜாவை சோதனையிட்ட போது இந்த பிரசாத பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரது குடும்பத்தாரை காத்திருக்க வைத்துள்ளனர்.
இதன் கார்த்திக் ராஜா இந்த நிகழ்வை போட்டோ எடுத்துள்ளார்.
அதன்பின்னர் ஏற்பட்ட சில பரபரப்புகளுக்கு பின்னர் பிரசாதப் பொருட்களை எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.