சுயசரிதை எழுத மாட்டேன்; சுய தம்பட்டம் சரித்திரமாகாது… இளையராஜா

ilayaraajaஇசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடையே இளையராஜா பேசினார். அவர் பேசியதாவது…

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தான் எனது ஊர். அங்கு இசை கற்க எந்த வாய்ப்பும் இல்லை. அண்ணன் வரதராஜன் கச்சேரி செய்வார். அவர் ஆர்மோனிய பெட்டியை தொட விடமாட்டார்.

பிறகு நானாகவே மெல்ல கற்றுக் கொண்டேன். சென்னைக்கு வரும்போது வீட்டில் இருந்து ரேடியோவை விற்று அம்மா 400 ரூபாய் கொடுத்தார். அந்த பணத்துடன் சென்னை வந்தேன்.

இப்போது வரை எளிமையாக வாழவே விரும்புகிறேன்.

நான் எத்தனை பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டேன்.

ஆனால் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த “மலைப்பொழுதின் மயக்கத்திலே நான்…” பாடல் தான் எனக்கு பிடித்த பாடல்.

பாடலுக்கேற்ற பாடகர்களை தேடுவேன். யாருமே கிடைக்காவிட்டால் நானே பாடி விடுவேன்.

இசை என்பது இயல்பாகவே வர வேண்டும்.

என் இசை தான் என் சுயசரிதை. அதை நாள்தோறும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனவே சுயசரிதை எழுதும் எண்ணம் இல்லை.

சுய தம்பட்டம் எப்போதும் சரித்திரம் ஆகாது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும். என் வாழ்க்கையில் இருந்து மற்றவர்கள் கற்றக் கொள்ள எதுவுமே இல்லை.”

இவ்வாறு இசைஞானி இளையராஜா பேசினார்.

Overall Rating : Not available

Latest Post