தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வித்தியாசமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தந்து கொண்டிருப்பவர் டைரக்டர் செல்வராகவன்.
இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த கான் திரைப்படம் என்னானது? என்பதே தெரியவில்லை.
மேலும் சந்தானத்துடன் ஒரு படம், எஸ்ஜே. சூர்யாவுடன் ஒரு படம் என கமிட் ஆனார் செல்வராகவன்.
அதன்பின்னர் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இரண்டாம் பாகம் சீசன் என்பதால் இவரின் சூப்பர் ஹிட்டான புதுப்பேட்டை படத்தின் 2ஆம் பாகம் வருமா? என பல ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
அதற்கு தன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார் செல்வராகவன்.
அவர் கூறியதாவது…
“வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன்.
ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” என கூறியுள்ளார்.
I Wish to direct sequel of Aayirathil Oruvan instead of Pudhupettai says Selvaraghavan