‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் மோதவிருந்த அஜித் ரசிகர்..; விஜய்சேதுபதியை மிஞ்சி இருப்பாரோ..?

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் மோதவிருந்த அஜித் ரசிகர்..; விஜய்சேதுபதியை மிஞ்சி இருப்பாரோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி இணைந்து நடித்த படம் ‘மாஸ்டர்’.

இந்த படம் பொங்கல் தினத்தையொட்டி தியேட்டர்களில் ரிலீசாகி அதன் பின்னர் ஓடிடியில் வெளியானது.

சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் அந்த பவானி கேரக்டரில் முதலில் ஆர்.கே.சுரேஷை தான் நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.

பின்புதான் சதீஷ் என்ற தயாரிப்பாளரின் ஆலோசனையால் விஜய்சேதுபதி கமிட்டாகியுள்ளார்.

விஜய்யின் JD கேரக்டரை விட விஜய்சேதுபதியின் பவானி கேரக்டரே அதிகளவில் பாராட்டப்பட்டதும் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் தீவிர ரசிகர் நடிகர் ஆர்.கே. சுரேஷ். இவர் பில்லா பாண்டி என்ற படத்தில் தல ரசிகராகவே நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

I Missed Playing Bhavani Role In Master says Popular Actor

RK Suresh

முதன்முறையாக பேய் படத்தில் விஜய் சேதுபதி.; இயக்குனர் இவரா.?

முதன்முறையாக பேய் படத்தில் விஜய் சேதுபதி.; இயக்குனர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi (2)மாஸ் ஹீரோ… மாஸ் ஹீரோக்களுக்கு வில்லன்… கெஸ்ட் ரோல்… இப்படி எந்த வேடம் என்றாலும் அதிலும் முத்திரை பதிப்பவர் விஜய்சேதுபதி.

தற்போது கூட காமெடியன் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார் மக்கள் செல்வன்.

இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் முதன்முறையாக பேய் படத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

தற்போது முருகானந்தம் தயாரிப்பில் ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.

நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலரும் நடிக்க இவர்களுடன் முக்கிய வேடத்தில் இணைகிறாராம் விஜய்சேதுபதி.

இதற்கான படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடக்கிறது.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

Makkal Selvan Vijay Sethupathi in ghost film ?

விஜய்-நெல்சன் கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்..; வேற மாரீ.. வேற மாரீ..

விஜய்-நெல்சன் கூட்டணியில் இணையும் சிவகார்த்திகேயன்..; வேற மாரீ.. வேற மாரீ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sivakarthikeyan (2)‘மாஸ்டர்’ படத்தை அடுத்து விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதில் சிவகார்த்திகேயன் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் ‘கல்யாண வயசு’ பாடல், டாக்டர் படத்தில் ‘செல்லம்மா’, ‘சோ பேபி’ ஆகிய பாடல்களின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

அந்த வரிசையில், நெல்சன் அடுத்ததாக இயக்கவுள்ள ‘விஜய் 65’ படத்திற்கும் சிவகார்த்திகேயன் பாடல் எழுத வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இது உறுதியானால் அந்த பாடல் வேற மாரீ.. வேற மாரீ.. லெவலில் இருக்கும் என நம்பலாம்.

Sivakarthikeyan to join Thalapathy 65 project ?

கமல் படத்துடன் மநீம டி-ஷர்ட்.. 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகள்..; போலீஸ் பறிமுதல்..; நான்_கேட்பேன்_கமல்

கமல் படத்துடன் மநீம டி-ஷர்ட்.. 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகள்..; போலீஸ் பறிமுதல்..; நான்_கேட்பேன்_கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் புதுச்சேரி கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி (ஏப்ரல் 6) அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதனை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கடலூரில் வட்டாட்சியர் விஜயா தலைமையில் நிலை கண்காணிப்புக் குழுவினர் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியான பெரியகாட்டுப்பாளையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக கடலூருக்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.

அதில் 6 மூட்டைகளில் டி-சர்ட், சில்வர் பாத்திரங்கள் இருந்தன. சுமார் 4 ஆயிரம் டி-சர்ட்டுகளில் மக்கள் நீதி மய்யம் பெயருடன் கமல் படம், டார்ச் லைட் சின்னம், புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் சட்டப் பேரவைத் தொகுதி, சோமநாதன் ஆகிய பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றை கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

நாட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்டும் மநீம தலைவர் கமல் அவர்கள் நான்_கேட்பேன் என அடிக்கடி சொல்வார்.

இப்போது கமலே அவரது கட்சியினரே இப்படி செய்தி‌ருப்பதால் நான்_கேட்பேன் கமல் சார் என கமெண்ட் அடிக்கின்றனர்.

Gifts and Kamal T shirts seized by election commission officers

இ ம மு க என்ற பெயரில் அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி..; அன்று கழட்டி விட்ட ரஜினி இன்று வாழ்த்தினார்

இ ம மு க என்ற பெயரில் அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி..; அன்று கழட்டி விட்ட ரஜினி இன்று வாழ்த்தினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன் என அறிவித்த ரஜினிகாந்த் திடீரென தன் உடல்நிலை காரணமாக அரசியல் முடிவை கைவிட்டார்.

அரசியல் கட்சி அறிவிப்புக்கு முன்னர் பாஜகவிலிருந்து வெளியே வந்து அர்ஜுன மூர்த்திக்கு முக்கிய பதவி அளித்தார்.

இதன்பின்னர் ரஜினி கட்சி தொடங்காத காரணத்தினால் எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார் அர்ஜுன மூர்த்தி.

இதனையடுத்து ரஜினி ஆசியுடன் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்தார்.

அதன்படி இன்று பிப்ரவரி 27ல் ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார் அர்ஜுன மூர்த்தி.

“இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் திரு.அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்” என ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Arjuna Moorthy launched new political party Rajini wishes

விதார்த் & ரம்யா நம்பீசன் நடித்த ‘என்றாவது ஒருநாள்’ சிறந்த படமாக தேர்வு

விதார்த் & ரம்யா நம்பீசன் நடித்த ‘என்றாவது ஒருநாள்’ சிறந்த படமாக தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

endravathu oru naalசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று சிறந்த படங்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் இம்முறை திரையிட்ட படங்களில் சிறந்த படமாக என்றாவது ஒருநாள் படம் தேர்வாகி தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்தது.

ஏற்கெனவே இப்படம் 33 சர்வதேச விருதுகளை வாங்கி இருக்கிறது. என்றாவது ஒருநாள் படத்தை மிக கச்சிதமாக எழுதி இயக்கி தயாரித்திருந்தார் வெற்றி துரைசாமி.

இப்படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர்.

விழாவில் இயக்குநர் வெற்றி துரைசாமிக்கு விருதும் சான்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. நமது தமிழ்படங்கள் இப்படியான அங்கீகாரத்தைப் பெறுவதென்பது இனிவரும் கலைஞர்களுக்கு பெரும் படைப்பூக்கத்தை கொடுக்கும் என்பதில் மாற்றமில்லை.

விழாவில் வழங்கிய விருதை ஏற்றுக்கொண்டு, என்றாவது ஒருநாள் படத்தை இயக்கி தயாரித்திருந்த வெற்றி துரைசாமி பேசும்போது,…

“இந்தப்படம் சிறந்தபடம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை என வெவ்வேறு கேட்டகிரியில் இதுவரை 33 விருதுகளைப் பெற்றிருக்கிறது.

இப்படி உலகத் திரைப்பட விழாக்களில் 33 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும் நம்ம சென்னையில் நடைபெற்ற திரைப்படவிழாவில் விருது பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுவொரு நல்ல மோட்டிவேசன். நல்லபடங்களை தொடர்ந்து எடுப்பதற்கு இந்தவிருது பெரும் முனைப்பாக இருக்கும். அனைவருக்கும் நன்றி” என்றார்

மேலும் என்றாவது ஒருநாள் படத்தின் கேமராமேன் சண்முக சுந்தரத்திற்கு ஸ்பெசல் ஜுரி அவார்ட் கிடைத்தது.

இந்த விருது கிடைத்த மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொள்ளும் போது,

“இந்தப்படத்தின் கதையோட்டத்தை கெடுக்காத அளவில் கேமராவொர்க் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தப்படத்தின் இயக்குநர் வெற்றி துரைசாமி சார் காணுயிர் ஒளிப்படக் கலைஞர் (wildlife photographer) இருந்ததால் ஒளியின் மொழி அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார். அந்த வகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்

Vidharth – Ramya Nambeesan film gets recognition in film festival

More Articles
Follows