சம்பளமே இல்லாமல் நடிக்கிறேன்.; அருள்தாஸின் அதிரடி ஆஃபர்

சம்பளமே இல்லாமல் நடிக்கிறேன்.; அருள்தாஸின் அதிரடி ஆஃபர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I dont want Salary till 2020 says Actor Aruldass கொரானா ஊரடங்கால் ஒட்டு மொத்த திரையுலகமே நஷ்டத்தில் மூழ்கியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இயக்குனர் ஹிரி, விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டவர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகர் அருள்தாஸ் தன் சார்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மதுரையிலிருந்து சினிமா கனவுகளோடு வந்த நான், மீடியாவில் தற்காலிகமாக வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து சினிமாவில் உதவி கேமராமேன், அதன் அடுத்த கட்டமாக கேமராமேன் பிறகு நடிகன் என்று படிப்படியாக உழைத்து, வளர்ந்து இன்று எங்கு சென்றாலும் ஒரு நடிகனாக அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்திருக்கிறேன்.

திரையில் நடிக்க ஆரம்பித்தது என்பது என் வாழ்வில் தற்செயலாக நடந்த சம்பவம் தான். முதல் படமான ‘நான் மகான் அல்ல’ தொடங்கி இப்போதுவரை தொடர்ந்து நடிகனாக பிசியாக இருக்கிறேன்.

அதற்கு காரணம்- எனது இயக்குனர்கள், உதவி இயக்குர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் திரைப்படத்துறை நண்பர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..!

வாய்ப்புக் கொடுத்தது இயக்குனர்கள் என்றாலும், எனக்கு சம்பளம் கொடுத்தது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான்!

இன்று வாழ்க்கையில் என் இருப்பிடம், உணவு, உடை, வாகனம் என என் வாழ்வின் அனைத்து வசதிகளையும் தந்தது அந்த முதலாளிகள் கொடுத்த பணத்தினால் தான்.

இந்த நேரத்தில் எனக்கு சம்பளம் கொடுத்து, என் வாழ்வை மேம்படுத்த உதவிய அனைத்து முதலாளிகளுக்கும் எனது அன்பு கலந்த மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது உலகம் முழுக்க ‘கோவிட்-19’ என்ற கொடிய வைரஸ் பரவலால் நமது திரைத்துறையில் பல தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் கேள்விக்குறியாக்கி விட்டது.

ஆனாலும் நம் திரைத்துறையிலுள்ள ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட உச்ச நட்சத்திரம் தொடங்கி பல நல்ல உள்ளம் படைத்த திரைத்துறை நண்பர்களும் இயன்றவரை அனைவருக்கும் பல உதவிகளை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

நானும் என்னைச் சுற்றி இருக்கும் நம் திரைத்துறை நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத பலருக்கும் என்னால் இயன்றவரை உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தச் சூழ்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளின் காரணமாக வருகிற சில மாதங்களுக்கு சினிமா எடுப்பதும் அதை வெளியிடுவதும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமமான காரியமாக இருக்கும்.

அதை மனதில் கொண்டு தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில நடிகர்களும், இயக்குநர்களும் அவர்களது சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறைத்துக் கொள்வதாக கூறியது உண்மையிலேயே இந்த நேரத்தில் பாராட்டத்தக்கது.

இது ஒரு நல்ல துவக்கம்! அதேபோல என் வாழ்வை மேம்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி என்னுள்ளும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அதன் காரணமாக இந்த வருடம் 2020 டிசம்பர் மாதம் வரை நான் புதிதாக நடிக்கும் எல்லாப் படங்களுக்கு சம்பளம் எதுவும் வாங்காமல் என் உழைப்பை முழுமையாக என் முதலாளிகளுக்கும் என் இயக்குனர் சகோதரர்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை என்றாலும், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும், அதை என்னிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தும் மேலும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்றும் சில மாதங்கள் சமாளிக்க என்னால் முடியும்.

எனவே, இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் உள்ளபடியே எனக்கு மிகுந்த மன நிறைவைத் தரும் என்று மனதார நம்புகிறேன்.

இலையுதிர் காலத்திற்கு பின் மரங்கள், துளிர்விட்டு பசுமையான வசந்தகாலத்திற்கு காத்திருப்பது போலவே நம் வாழ்விலும் வசந்தகாலம் வருமென்று நம்பிக்கையோடு காத்திருப்போம்..!

நன்றி

என்றும் உங்கள்,
அருள்தாஸ்
நடிகர்- ஒளிப்பதிவாளர்

I dont want Salary till 2020 says Actor Aruldass

BREAKING டீ கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி; காய்கறி-மளிகை கடை நேரம் நீடிப்பு

BREAKING டீ கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி; காய்கறி-மளிகை கடை நேரம் நீடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt given permission to open Tea stalls in lock downமே 17 வரை கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் ஒரு சில தளர்வுகளுடன் சிறு குறு வணிகத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது.

இதனால் மே 4 முதல் சில வணிக நிறுவனங்கள் மாலை 5 மணி வரை செயல்பட துவங்கியது.

மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் நேற்று மே 8 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது. ஆன்லைனில் சரக்குகளை விற்கலாம் என கோர்ட் உத்தரவிட்டது.

மது பானங்களுக்கு அனுமதி வழங்கிய அரசு டீ கடைகளை அனுமதிக்கவில்லை என்ற புகார் தமிழக முழுவதும் உருவானது.

இந்த நிலையில் தற்போது டீ கடைகள் திறக்கலாம் என உத்தரவு விட்டுள்ளது.

ஆனால் அதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில்..

இது தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில்…

தமிழகத்தில் உள்ள டீ கடைகள் செயல்படலாம் என்றும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் டீ கடைகளில் அமர்ந்தோ, நின்றோ டீ குடிக்கக் கூடாது.

பார்சல் மட்டுமே வாங்கிச் செல்லலாம். மீறி அப்படி உட்கார்ந்து குடித்தால் உடனடியாக முடக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வரும் 11 ஆம் தேதி முதல் இந்த நடைமுறைகள் அமலுக்கு வருகிறது என்று முதல்வர் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

TN Govt given permission to open Tea stalls in lock down

மேலும், அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகைப்பொருட்கள், பால் உள்ளிட்ட கடைகளை காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை திறந்து கொள்ள அனுமதி*
*மற்ற தனிக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்து கொள்ளலாம்*
*தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் இயங்கலாம், மற்ற பகுதிகளில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறந்து கொள்ளலாம்* 
*அனைத்து தனியார் நிறுவனங்களும் 33% பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்*
*மே 11 திங்கள் கிழமை முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வருகிறது*

 

ஒரே ஒரு ரூபாய் சம்பளம் போதும்.; ஆர்த்தியின் வெய்ட்டான ஆஃபர் (வீடியோ)

ஒரே ஒரு ரூபாய் சம்பளம் போதும்.; ஆர்த்தியின் வெய்ட்டான ஆஃபர் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Just Re 1 salary enough for one movie says Aarthiசின்ன சின்ன வேடங்கள் தான் என்றாலும் தன் முத்திரை ஒவ்வொரு படத்திலும் தவறாமல் பதித்து வருபவர் நடிகை ஆர்த்தி.

இவர் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது கொரானா ஊரடங்கால் ஒட்டு மொத்த திரையுலகமே நஷ்டத்தில் மூழ்கியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இயக்குனர் ஹிரி, விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டவர்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை ஆர்த்தி ஒரு வீடியோவில் தன் சம்பளத்தில் ஒரே ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு அவர் இந்த சம்பளம் மட்டும்தான் வாங்குவாராம். வேறு எந்த நிபந்தனைகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்த பட்சம் 10 சின்ன காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Just Re 1 salary enough for one movie says Aarthi

 

தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி; டாஸ்மாக் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பு பற்றி கமல்

தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி; டாஸ்மாக் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பு பற்றி கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal statement about High Court order in Tasmac issueகொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிகளவில் இருக்கும் நிலையில் நேற்று மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தி மது பிரியர்களுக்கு உற்சாகம் அளித்தாலும் தாய்மார்கள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

எனவே மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இருந்த போதிலும் ஆன்லைனில் மதுவை விற்கலாம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தன் ட்விட்டரில் இரு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

கோர்ட் தீர்ப்புக்கு முன்பு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர்.

தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக் காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்

கோர்ட் தீர்ப்புக்கு பின்பு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்

Kamal statement about High Court order in Tasmac issue

டாஸ்மாக் திறக்கக் கூடாது.; மது பிரியர்களுக்கு கோர்ட்டின் மரண அடி!

டாஸ்மாக் திறக்கக் கூடாது.; மது பிரியர்களுக்கு கோர்ட்டின் மரண அடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High Court ordered to shut Tasmac only online sales allowedதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

மே 4ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை செய்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று முதல் மே 7ல் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

நேற்று முதல் நாளே ரூ. 170 கோடி மது விற்பனையானதாக தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மது வாங்க வருவோரிடம் ஆதார் அட்டை பெற வேண்டும்.

மொத்தமாக விற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என்பதால் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும், ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

கோர்ட்டின் இந்த உத்தரவு மது பிரியர்களுக்கு மரண அடியாக இருக்கும் என தெரிகிறது.

இந்த ஆன்லைன் சரக்கு விநியோகத்தை ஸோமோட்டோ நிறுவனம் கையில் எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, உள்நாட்டு உணவு விநியோக நிறுவனமான ஸோமோட்டோ, மதுபானத்தை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

High Court ordered to shut Tasmac only online sales allowed

கங்கை நதி நீரில் கொரோனா சிகிச்சையா.? மறுப்பு தெரிவித்தது ICMR

கங்கை நதி நீரில் கொரோனா சிகிச்சையா.? மறுப்பு தெரிவித்தது ICMR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Can Ganga river treat Covid 19 ICMR says noநான்கு மாதங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டிபிடிக்கப்பட வில்லை.

தினம் தினம் கொரோனாவினால் பலியானர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மருத்துவ நிபுணர்களும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த நலையில் கங்கை நதி நீரில் ஆபத்தான வைரசுகளை அழிக்கக்கூடிய பாக்டீரியோஃபேஜ் என்ற வைரஸ் உள்ளதாகவும், எனவே கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாம் என்று அதுல்யகங்கா என்ற அமைப்பு மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.

இது குறித்து ஆய்வு செய்த நீர்வள அமைச்சகத்தின் துறைகளான நேஷனல் மிஷன் ஃபார் கிளீன் கங்கா, நமாமி கங்கா திட்ட இயக்குதரகம் ஆகியன இது குறித்து முடிவு எடுக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டது.

பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுகளில் மூழ்கி உள்ளதால், இது பற்றி இப்போது முடிவெடுக்க இயலாது என்று ஐசிஎம்ஆர் Indian Council of Medical Research தெரிவித்து விட்டதாம்.

Indian Council of Medical Research

Can Ganga river water treat Covid 19 ICMR says no

More Articles
Follows