தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக அரசு ஆசிரியர்கள் தற்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது.
அவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையில் கோர்ட்டும் அரசு ஊழியர்களை கண்டித்து உத்தரவிட்டது.
இது தொடர்பாக நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
வேலை செய்யாத அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாதென்றால், குதிரை பேரத்தில் ஈடுபட்டு, சொகுசு விடுதியில் ஓய்வெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு?.
மதிப்பிற்குரிய நீதிமன்றம், வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை எச்சரிக்கிறது. வேலையை தவிர்த்து வரும் எம்.எல்.ஏக்களுக்கு அத்தகைய எச்சரிக்கையை தருமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
High Court must give warning to Tamilnadu MLAs says Kamalhassan
Kamal HaasanVerified account @ikamalhaasan
No work no pay only for Govt. Employees?. How about horse trading politicians languishing in resorts?
The honourable court warns teachers on strike. I beseech the court to issue similar warnings to those MLAs who desist from attending work
புதிய செய்தி… தற்போது நீதிமன்ற தீர்ப்பை அடுத்து போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.