ஜிவி பிரகாஷ் – கௌரி இணைந்த ‘அடியே..’ பட 2ஆம் பாடல் அப்டேட்

ஜிவி பிரகாஷ் – கௌரி இணைந்த ‘அடியே..’ பட 2ஆம் பாடல் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘அடியே’.

இப்படத்தில் கௌரி கிஷன், வெங்கட் பிரபு, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும், புதுமுக நடிகர் மதும்கேஷ் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகிறார்.

மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

சமீபத்தில் ‘அடியே’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘அடியே’ படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாடலான “முதல் காதல்” பாடலின் லிரிக்கல் வீடியோ நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அடியே

gv prakash’s Adiyae movie second single will be releasing movie team

புதுப்பேட்டை பாணியில் மாஸ்.; தனுஷின் 50வது படத்தில் இணைந்தார் காளிதாஸ்

புதுப்பேட்டை பாணியில் மாஸ்.; தனுஷின் 50வது படத்தில் இணைந்தார் காளிதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் தற்போது சாக்லேட் பாய் (ஹீரோஸ்) கள் குறைவு. ரொமான்டிக் ஹீரோ ஆக நடித்து வந்தவர்கள் எல்லாம் தற்போது ஆக்சன் ஹீரோக்களாக மாறிவிட்டார்கள்.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண், காளிதாஸ் உள்ளிட்ட ஒரு சிலரே ரசிகைகளின் சாக்லேட் பாயாக வலம் வருகிறார்கள்.

இதில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தற்போது தனுஷின் 50வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவர் கேரவனிலிருந்து இறங்கி வரும் போது தனுஷின் புதுப்பேட்டை பாடல் ஒலிக்கிறது. இதன் மூலம் தனுஷின் 50வது படத்தில் காளிதாஸ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

நட்சத்திரம் நகர்கிறது மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் நடித்து தனது தனித்திறமையை காட்டியவர் காளிதாஸ்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏஆர்.ரகுமான் இசையமைக்க தனுஷ் இயக்கி இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kalidas Jayaram joins Dhanush in his 50th movie

வில்லனை அடிக்க மறுத்த விஜய். லியோ கிளைமாக்ஸை லீக் செய்த மிஷ்கின்

வில்லனை அடிக்க மறுத்த விஜய். லியோ கிளைமாக்ஸை லீக் செய்த மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.

சமீபத்தில், இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் தற்போது ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் ‘லியோ’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து மிஷ்கின் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ‘லியோ’ படத்தின் கிளைமேக்ஸில் ஒரு பாக்ஸ் எடுத்து என்னை விஜய் அடிக்க வேண்டும். அப்போது சண்டை பயிற்சியாளரை அழைத்து விஜய் நான் மிஷ்கினை அடிக்க மாட்டேன் என்று கூறினார். பின்னர் நான் விஜய்யிடம் அடி தம்பி ஒன்றும் இல்லை என்று கூறினேன். அதற்கு விஜய் இல்லை அப்படி செய்தால் உங்களுக்கு காயம் ஏற்படும் என்று கூறினார். நீ அடித்துதான் ஆக வேண்டும் என்று நான் கூறிய பின்னர் விஜய் அந்த காட்சியை செய்தார்” என்று பேசினார்.

தற்போது மிஷ்கின் கிளைமேக்ஸ் காட்சி குறித்து கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Mysskin who leaked the Leo movie Climax

கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் ‘மாவீரா’ படத்தலைப்பு மாறியது

கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் ‘மாவீரா’ படத்தலைப்பு மாறியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி.கே. புரடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி இயக்குவதோடு அவரே கதை நாயகனாகவும் நடிக்கிறார்.

அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்க “கவிப்பேரரசு” வைரமுத்து பாடல்கள் எழுத எஸ்.கோபிநாத் கேமராவை கையாள “ஸ்டண்ட்” சில்வா சண்டை காட்சியமைக்க தினேஷ் நடனம் அமைக்க பாலமுரளி வர்மன் வசனம் எழுத ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய நிகில் முருகன் மக்கள் தொடர்பை கவனிக்கிறார்.

விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில் விரைவில் “மாவீரா படையாண்டவன்” இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை தொடங்கவிருக்கிறது.

ஸ்டண்ட் சில்வா அவர்கள் படத்தில் வரும் உக்கிரமான மாஃபியா கேங்குகளோடு கௌதமன் மோதவிருக்கும் மிக முக்கிய சண்டைக் காட்சிக்காக மாஸ்டரின் உதவியாளர் சிவாவை வைத்து தினமும் அதிகாலை 3 மணி நேரம் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட மிக கடுமையான பயிற்சியினை அளித்துக் கொண்டிருக்கிறார்.

அனைத்துவித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமாக வெளிவந்து தமிழ் திரையுலகில் “மாவீரா படையாண்டவன்” ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும் என உறுதிபட சொல்கிறார் இயக்குனர் வ. கௌதமன்.

Maaveera title changed to Maaveeran Padaiyandavan

பட்டைய கிளப்பும் பவர்ஸ்டார்.; இன்ஸ்ட்டாகிராமில் இமாலய சாதனை.!

பட்டைய கிளப்பும் பவர்ஸ்டார்.; இன்ஸ்ட்டாகிராமில் இமாலய சாதனை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பவன் கல்யாண்.

இவர் ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என பரபரப்பாக இயக்கி வருகிறார்.

இவர் நடிப்பில் தற்போது ‘ப்ரோ’, ‘ஹரி ஹர வீரா மாலு’, ‘உசாத் பகத் சிங்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இவருக்கென பல லட்சம் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், பவம் கல்யாண் தற்போது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

இவர் இன்ஸ்டாவில் இணைந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அவரை பின் தொடர தொடங்கினர்.

ஒரு மணி நேரத்தில் 15 லட்சம் ஃபாலோவர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

இது இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையாக கூறப்படுகிறது.

பவன் கல்யாண்

Pawan Kalyan makes Instagram debut to created a biggest record

தனுஷின் 50வது படத்தில் இணைந்த உலக பிரபல இசையமைப்பாளர்

தனுஷின் 50வது படத்தில் இணைந்த உலக பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D50’ என பெயரிடப்பட்டுள்ளது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் ‘மரியான்’, ‘ராஞ்சனா’, ‘அந்த்ராங்கி ரே’ ஆகிய மூன்று படங்களில் தனுஷியுடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரகுமான்

Ar Rahman joins Dhanush in his 50th film

More Articles
Follows