சாத்தான்குளம் போலீஸ் ரேவதியின் துணிச்சலுக்கு ஜிவி. பிரகாஷ் பாராட்டு

சாத்தான்குளம் போலீஸ் ரேவதியின் துணிச்சலுக்கு ஜிவி. பிரகாஷ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashசாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகன் இருவரும் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

எனவே மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்துவருகிறது.

உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.

அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம். டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

“சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.

தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது மிகுந்த பயத்திலேயே இருந்துள்ளார்.

காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணையை வீடியோ எடுத்தும் வாக்குமூலம் கொடுத்த ரேவதியை மிரட்டும் தொனியிலும் ஈடுபட்டனர்.

எனவே ரேவதி கடைசியில், வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது” என்று நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காவலர் ரேவதிக்கு ஜிவி. பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில், “நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

BREAKING #சத்தியமா_விடவே_கூடாது.; போலீசை கண்டித்து ரஜினி ட்வீட்

BREAKING #சத்தியமா_விடவே_கூடாது.; போலீசை கண்டித்து ரஜினி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth slams TN Police for Sathankulam incidentசாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரும் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குடும்பத்தினரிடம் சில தினங்களுக்கு முன்பு ரஜினி போனில் பேசியிருந்தார். தற்போது காவலர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

அவரது ட்விட்டரில் பதிவில்…

தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்த கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது.

#சத்தியமா_விடவே_கூடாது. என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth slams TN Police for Sathankulam incident

https://twitter.com/rajinikanth/status/1278215149204062208

போன மாசம் ரூ 6000; இப்போ ரூ. 50000.. மின்கட்டணத்தால் ஷாக்கான காலா நாயகி

போன மாசம் ரூ 6000; இப்போ ரூ. 50000.. மின்கட்டணத்தால் ஷாக்கான காலா நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

huma qureshiபாலிவுட்டில் பிரபலமான நடிகை ஹீமா குரேஷி.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் காலா படத்தில் நடித்திருந்தார். முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவரது வீட்டிற்கு வந்துள்ள மின் கட்டணம் குறித்து கடும ஷாக்காகியுள்ளார்.

அதாவது ரூ. 50 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளதாக சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை 6 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்திய தமக்கு இந்த முறை 50 ஆயிரம் மின் கட்டணம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோலிவுட்டில் நடிகர் பிரசன்னா இதுபோல மின்கட்டணம் குறித்த தன் கருத்தை தெரிவித்து அதன் பின் பல்டி அடித்தார்ர் என்ற கதை தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அரசு அலுவகத்தில் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ஆர்வ கோளாறு ரசிகர் பணியிடை நீக்கம்

அரசு அலுவகத்தில் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ஆர்வ கோளாறு ரசிகர் பணியிடை நீக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay birthday celebrationநடிகர் விஜய்க்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரின் படம் ரிலீசாகும் நாட்களில் ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

கடந்த ஜீன் 22ஆம்தேதி விஜய் அவரது 46வது பிறந்தநாளை கொண்டாடினார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதியுறும் போது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில், விஜய் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா.

இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர்கள் கொண்டாடிய படங்கள் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

UNLOCK 2.0 தொடங்கியது: பிரதமர் நரேந்திர மோடி உரை… ஒரு பார்வை..

UNLOCK 2.0 தொடங்கியது: பிரதமர் நரேந்திர மோடி உரை… ஒரு பார்வை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modiகொரோனா பொது முடக்கத்தின் 2ஆம் கட்டமான UNLOCK 2.0 தொடங்கிவிட்டது என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றினார்.

ஊரடங்கு தொடர்பாக 6வது முறையாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மேம்பாடு குறித்தும் பேசினார்.

* நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு

அவரின் உரையின் முக்கிய துளிகள் இதோ…

* ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தொடர்ந்து அஜாக்கிரதையாக செயல்பட்டு வருகின்றனர்

* பொறுப்பற்ற நடவடிக்கை நிச்சயம் கவலை அளிக்கக் கூடியது

* விதிமுறைகள் சட்டங்கள் என்பது அனைவருக்கும் பொதுவானது

ஊராட்சி தலைவரோ, பிரதமரோ விதிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டும் * நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது

* செய்யக்கூடிய சிறிய தவறுக்கு மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடலாம்

சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்.

அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை.

கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது;

* இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது

* விவசாயிகளின் வங்கிக்கணக்கில் இதுவரை 18 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் கரீப் கல்யாண் திட்டம் குறித்தும் பேசினார் பிரதமர்.

‘இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

இதற்காக கடந்த 3 மாதங்களில் மட்டும் 31 ஆயிரம் கோடி ரூபாய் பணஉதவி வழங்கப்பட்டுள்ளது. அதே போல கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.

அதே போல நவம்பர் மாதம் வரை 80 கோடி மக்களுக்கு அடுத்த இலவச ரேஷன் பொருட்கள் சென்று சேர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பு இதன் மூலம் இலவசமாக நாடு மக்களுக்கு வழங்கப்படும்.

இதனால் நாட்டின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்த அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.

போலீசுக்கு அடுத்த தலைவலி.; மாணவர் மீது தாக்குதல்… மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

போலீசுக்கு அடுத்த தலைவலி.; மாணவர் மீது தாக்குதல்… மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் பொது மக்கள் மீதான போலீசாரின் தாக்குதல் குறித்த செய்திகள் வலம் வருகின்றன.

தற்போது காவல்துறைக்கு அடுத்த தலைவலி வந்துள்ளது.

கோவை மாவட்டம் ரத்தினகிரி என்ற பகுதியில் ஒரு தம்பதியினர் டிபன் கடை நடத்தி வந்துள்ளனர்.

கடையை மூடும்படி எச்சரித்துள்ளார் அப்பகுதி காவல் உதவி ஆய்வாளர் செல்லமணி.

இதை கடைக்காரரின் மகன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த போலீசார்கள் அந்த பையனின் செல்போனை பறித்துக் கொண்டு கிளம்பினர்.

ஆனால் போலீசை வழி மறித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், மாணவனை லத்தியால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வேகமாக பரவிவிட்டது.

இதனையடுத்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

More Articles
Follows