தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தற்போதைய தமிழகத்தை ஆளும் கட்சிகள் குடியை ஊக்குவித்து வருகின்றன.
டாஸ்மாக் கடைகளை எங்கெல்லாம் திறக்கலாம் என மக்களின் எதிர்ப்பையும் மீறி செயல்பட்டு வருகிறது.
மதுக்கடைகளை திறக்க நீதி மன்றம் வரை சென்று மன்றாடி வேற வருகிறது.
அரசே திருந்தாவிட்டால் குடிகாரர்களின் நிலை… கேட்கவே வேண்டாம்.
குடும்பத்தில் ஒருவர் குடிப்பதால், அந்த குடும்பமே சீரழிந்து வருவதை செய்திகளாக தினம் தினம் பார்க்கிறோம்.
இந்நிலையில் தன் தந்தை குடிப்பழக்கத்தால் +2 மாணவர் தினேஷ் என்பவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்னதாக அவன் எழுதிய கடிதம் அவனது சட்டைப் பையில் இருந்தது. மேலும் நீட் தேர்வுக்கான அனுமதி சீட்டும் அவரது பையில் இருந்தது.
தன் தந்தை மதுபோதைக்கு அடிமையானதால் தற்கொலை செய்துகொள்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘மது போதைக்கு அடிமையான என் தந்தையை திருத்த முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
என் உடலுக்கு தந்தை இறுதிச்சடங்கு செய்யக்கூடாது. என் சாவுக்கு பிறகாவது தமிழக முதல்வர் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்.
ஒருவேளை டாஸ்மாக் கடைகள் மூடாவிட்டால் என் ஆன்மா ஆவியாக வந்து கடைகளை உடைக்கும் ’ என அதில் தினேஷ் எழுதியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த நடிகர் ஜிவி. பிரகாஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
G.V.Prakash KumarVerified account @gvprakash
குடி குடியை கெடுத்தது.. நெல்லை மாணவர் தினேஷ் மரணம் அவரது ஆன்மா நம் அனைவரிடமும் நீதி கேட்டு நிற்கிறது..!! மது ஒழிப்போம்
GV Prakash Condolence to TN Student Dinesh suicide because of Tasmac