தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீட் தேர்வு விவகாரத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் தொடர்ந்து தன் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது….
ஒரு பெண் இறந்துவிட்டாள். இனி இதுபோன்ற நிகழ்வு நடைபெற கூடாது.
நீட் தேர்வுக்கு எதிராக என்னோடு போராட வாருங்கள். துரோகம் செய்பவர்களை இனியும் பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது.
தவறு செய்பவர்களை திருத்துவோம். இல்லையென்றால் தள்ளி வைப்போம்.
மூச்சுவிடுவது மட்டும் சுதந்திரம் அல்ல. இந்த போராட்டம் இன்னொரு சுதந்திர போராட்டம் என்றுதான் கூறுவேன். என்று ஆவேசமாக பேசினார் கமல்ஹாசன்.
Get Ready Foe one more Freedom fight says Kamalhassan