விடுதலை சிறுத்தைகள் மிரட்டல்.; பாதுகாப்பு கோரி காயத்ரி ரகுராம் மனு

விடுதலை சிறுத்தைகள் மிரட்டல்.; பாதுகாப்பு கோரி காயத்ரி ரகுராம் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gayathri raghuramஇந்து மதத்தை விமர்சித்ததாக திருமாவளவன் பற்றி நடிகை‌ காயத்ரி ட்விட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டார்‌.

எனவே அவரது வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும், எனவே தனது இல்லத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘தனுசு ராசி நேயர்களே’ டீஸர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘தனுசு ராசி நேயர்களே’ டீஸர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanusu Raasi Neyargale team with rajinikanthஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸரை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியது குறித்து ஒட்டு மொத்த படக்குழு முழுவதும் மகிழ்ச்சியில் மூழ்கித் திளைக்கிறது.

இது குறித்து விவரித்த இயக்குநர் சஞ்சய் பாரதி, “கிட்டத்தட்ட ஒரு கனவு நனவானதைப்போலத்தான் இருக்கிறது. எல்லோரையும்போல நானும் தலைவர் ரஜினிகாந்த் சாரின் தீவிர ரசிகன்தான். அவர் நடித்த படங்களை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க இதுவரை நான் தவறியதே இல்லை. என் தந்தை சந்தான பாரதி, ரஜினி சாரின் நெருங்கிய நண்பர் என்றாலும், இயக்குநராக எனது பணியை அவர் பார்த்துப் பாராட்டியது என்னால் மறக்க முடியாத தருணம். வண்ணமயமான தனுசு ராசி நேயர்களே டீஸருக்காக ஒட்டுமொத்த படக்குழுவையும் வெகுவாகப் பாராட்டினார் ரஜினி சார்.

படத்தலைப்பு எவ்வாறு தனித்துவம் மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு சர்வதேச ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தக்கதாகவும் இருக்கிறது என்று பாராட்டினார். ரஜினி சார் பாராட்டியது வெறும் முகஸ்துதிக்காக அல்ல. நிஜமான ஈடுபாட்டுடன் படத்தைப் பற்றியும், படக்குழுவைப் பற்றியும் கேட்டறிந்தார். மிகுந்த ஆர்வத்துடன் என்னைப் பற்றியும் நான் யாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன் என்றும் கேட்டார். இயக்குநர் விஜயிடம் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றியதை விவரித்தேன். படம் எப்போது வெளியாகிறது என்று அவர் கேட்க, நான் ரிலீஸ் தேதியே சொன்னதும், சரியான நேரத்தில்தான் வெளியிடுகின்றீர்கள் என்று சொன்னார்” என்றார் இயக்குநர் சஞ்சய் பாரதி..

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் உலகெங்கும் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ரிபா மோனிகா ஜான் மற்றும் டிகான்கனா சூர்யவன்ஸி இருவரும் கதாநயாகி வேடங்களில் நடிக்க, ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, மற்றும் சில நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். குபேந்திரன் படத்தொகுப்பை கவனிக்க, உமேஷ் ஜே குமார் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். விவேகா, மதன் கார்க்கி, விக்னேஷ் சிவன், கு.கார்த்திக், சந்துரு ஆகியோர் பாடல்களை எழுத, எம்.ஆர்.பொன் பார்த்திபன் வசனங்களைத் தீட்டுகிறார். ஆடியோகிராபி பொறுப்பை டி.உதயகுமாரும், ஆடை அலங்காரப் பொறுப்பை ஜி.அனுஷா மீனாக்ஷியும் ஏற்றிருக்கின்றனர். கல்யாண்-ஷெரீப் நடனக் காட்சிகளை அமைக்கின்றனர்.

உலக பிரபல மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை சினிமாவாகிறது

உலக பிரபல மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை சினிமாவாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Michael jacksonபாட்டு, டான்ஸ், பாடல் எழுதுவது என பன்முக திறமை கொண்டவர் மைக்கேல் ஜாக்சன். உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

இவரின் வாழ்க்கை பல மர்மங்களை கொண்டதாக இருந்தது.

தொடர் அறுவைச் சிகிச்சை, பாலியல் புகார், திடீர் மரணம் என அதிர்ச்சிகைளை கொண்டது.

இவர் மரணமடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க உள்ளனர்.

இதன் உரிமையை போஹெமிய ராப்சோடி படத்தை தயாரித்த கிரஹாம் கிங் என்பவர் வாங்கியிருக்கிறாராம்.

கிளாடியேட்டர் படத்திற்கு கதை எழுதிய ஜான் லோகன், இப்படத்துக்கு திரைக்கதை எழுதுகிறார்.

இதில் மைக்கேல் ஜாக்சனாக நடிப்பவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்.

விரைவில் அறிவிப்பு வரும். காத்திருக்கவும்.

ஜோஷ்வா படத்திற்கும் தர்புகா சிவாவை இசையமைப்பாளராக்கிய கௌதம்

ஜோஷ்வா படத்திற்கும் தர்புகா சிவாவை இசையமைப்பாளராக்கிய கௌதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

darbuka siva in joshuaகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா பட பாடல்கள் 2 வருடத்திற்கு முன்பே ரிலீசாகிவிட்டது.

தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஆனால் படம் நாளை மறுநாள் நவம்பர் 29ல் வெளியாகிறது.

இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுவதால் தன் அடுத்த படத்திற்கு இதே தர்புகா சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கௌதம் மேனன்.

பப்பி நாயகன் வருண் நடிக்கும் ’ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்திற்கும் தர்புகா சிவா தான் இசை.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

தளபதி 64 படத்தில் சம்பவம்.? மறுப்பு தெரிவித்த படக்குழு

தளபதி 64 படத்தில் சம்பவம்.? மறுப்பு தெரிவித்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy vijayகைதி படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார்.

இதில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா, வர்கீஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் சம்பவம் என்ற பாடல் ரெடியாகிவிட்டதாகவும் அந்த சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிடயிருப்பதாக செய்திகள் சில தளத்தில் வெளியானது.

ஆனால் அது உண்மையில்லை என்று படக்குழு மறுத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வரும்வரை ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்லன் நடிகர் பாலாசிங் காலமானார்; நடிகர் சங்கம் இரங்கல்

வில்லன் நடிகர் பாலாசிங் காலமானார்; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil actor Bala Singh passes awayமலையாள படங்களில் நடித்து பிரபலமான பாலா சிங் அவர்கள் நாசரின் ‘அவதாரம்’ பட மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

அதன்பின்னர் ’புதுப்பேட்டை’, ‘இந்தியன்’, ’பிரிவோம் சந்திப்போம்’, ‘கிரீடம்’, ’உதயா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
வில்லன், குணச்சித்திரம் என்று அனைத்து வேடங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான என்ஜிகே, மகாமுனி படங்களில் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் பாலாசிங்குக்கு தற்போது 67 வயதாகிறது. இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் ஆகும்.

இவரின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Tamil actor Bala Singh passes away

More Articles
Follows