விஜய்-தனுஷ்-கலா மாஸ்டருக்கு நன்றி கூறிய காயத்ரி ரகுராம்

விஜய்-தனுஷ்-கலா மாஸ்டருக்கு நன்றி கூறிய காயத்ரி ரகுராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gayathri Raghuramபிரபல நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் என்ற படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.

இதில் தனுஷ் அவர்கள் புடவை நிலவே என்ற ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது காயத்ரி ரகுராம் பேசும்போது…

இப்படம் திரைத்துறையில் பணியாற்றும் நடன கலைஞர்களின் பற்றிய உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்றார்.

மேலும் பேசும்போது….

பெண்களின் வாழ்க்கையில் ஆரம்பம் முதல் அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொறு கட்டத்தையும் அவர்கள் எப்படி வாழவேண்டும் என்ற ஒரு சமூக
கருத்தை கூறும் வகையில் இப்படம் உள்ளது.

குறைந்த செலவில் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட இப்படத்தில் கவர்ச்சி என்பது இல்லை.

தனுஷ் இப்படத்தில் ஒரு பாடலை பாடி உதவி செய்தார். மேலும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பேருதவி செய்தார்.

இது என் அப்பாவின் கனவாகும், அதை தவிர இப்படத்தை என் குருநாதர் இயக்குனர் திரு A.L.விஜய் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

தன் தந்தை ஸ்தானத்தில் இருந்து உதவி வரும் கலா மாஸ்டருக்கு நன்றியும் தெரிவித்தார்.

விழாவில் கலா மாஸ்டர் பேசும்போது…

தற்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள்,பெண்குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலையை நாமே பார்த்து கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில் இப்படம் பெண்களுக்கான ஒரு அழகான திரைப்படம், இதை தவிர இப்படத்தில் என் கணவரும் நடித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஒருவர் இயக்குனராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் இப்படம் பார்ப்பவர்களை இது ஒரு அருமையான கதை என்று சொல்ல வைக்கும்.” என்றார்.

Gayathri Raghuram directorial Yaadhumaagi Nindraai Press meet

Yaadhumaagi Nindraai Press meet

 

கோர்ட்டில் ஆஜரானார் தனுஷ்; திடீர் பெற்றோர் வழக்கில் மாற்றம்

கோர்ட்டில் ஆஜரானார் தனுஷ்; திடீர் பெற்றோர் வழக்கில் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushநடிகர் தனுஷ், தங்களின் சொந்த மகன் என மேலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பஸ் கண்டக்டர் கதிரேசன் மற்றும் இவரது மனைவி மீனாட்சி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும், அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று நடிகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரானர் தனுஷ்.

அப்போது திடீர் பெற்றோர் கூறிய உடல் அடையாளங்களை தனுஷ் காண்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Actor Dhanush appeared in madurai high court

முதல் அமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு

முதல் அமைச்சருக்கு கமல்ஹாசன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanஜல்லிக்கட்டு பிரச்சினை, தமிழக முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சினை என எதையும் விடாமல் கமல் தன் கருத்துக்களை கூறி வருகிறார்.

தற்போது ஹைட்ரோ கார்பன் என்ற மீத்தேன் குறித்து தன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இதற்கு கமல் தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சேரன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி..?

சேரன்-விஜய்சேதுபதி புதிய கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi and cheranபாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் கொடுத்தவர் இயக்குனர் சேரன்.

இவர் சில காலமாக இயக்கத்தை நிறுத்திவிட்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ படம் விஜய்சேதுபதிக்கு ஒரு நல்ல திருப்புமுனையை கொடுத்தது.

அந்த வரிசையில் சேரன்-விஜய்சேதுபதி கூட்டணியின் படம் அமையும் என எதிர்பார்க்கலாம்.

மீனா மகள் தெறி நைனிகாவின் நெக்ஸ்ட் மூவ்

மீனா மகள் தெறி நைனிகாவின் நெக்ஸ்ட் மூவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meena with nainikaவிஜய் நடித்த தெறி படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் பல திறமையான கலைஞர்கள் நடித்திருந்தாலும், எல்லாருடைய மனதையும் கவர்ந்தவர் நடிகை மீனாவின் மகள் நைனிகாதான்.
இதனால், தெறி பேபியின் அடுத்த படம் என்னவாகும் இருக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் மலையாளத்தில் ஹிட் அடித்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் நைனிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதில் அரவிந்த்சாமி, அமலா பால் இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் சித்திக் இயக்க, மம்மூட்டி, நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ‘பாபா’ வழியில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

ரஜினியின் ‘பாபா’ வழியில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Sivakarthikeyanரஜினிகாந்த் நடித்த பாபா படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார்.

இப்படம் படமாக்கப்படும்போதே ரசிகர்கள் பன்ச் டயலாக் எழுதி அனுப்பலாம் என அறிவித்திருந்தனர்.

அதன்படி ரஜினி ரசிகர் ஒருவர் எழுதிய நான் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்ற பன்ச் டயலாக் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்திற்கும் பன்ச் டயலாக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதற்காக ரசிகர்கள் பலரும் பன்ச் டயலாக்குகளை எழுதி இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

இதில் சில வசனங்களை அவர் தேர்வு செய்து படத்தில் பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மோகன்ராஜா இப்படத்தை இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

Sivakarthikeyan follows Rajinikanth ways

More Articles
Follows