கமலுக்காக சொந்த பட ரிலீஸை தள்ளி வைத்த காயத்ரி ரகுராம்

கமலுக்காக சொந்த பட ரிலீஸை தள்ளி வைத்த காயத்ரி ரகுராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal gayathiri raghuramநடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் முதன்முறையாக தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், இது ரிலீஸ் ஆகவில்லை.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் 100 நாட்கள் ஒரே வீட்டில் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்க வேண்டும்.

எனவே படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று கேட்டதற்கு… இந்த 100 நாட்கள் கழித்துதான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றார்.

Gaayathri Raguram postponed her Yaadhumaagi Nindraai because of Big Boss Kamal

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் மோதும் முதல் நடிகர் விமல்

தீபாவளி ரேஸில் விஜய்யுடன் மோதும் முதல் நடிகர் விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal and Mannar Vagaiyara movie clash on Diwali 2017அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தீபாவளியன்று வெளியாகவுள்ள மற்ற படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல், ஆனந்தி நடித்துள்ள மன்னர் வகையறா என்ற படத்தின் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

A3V சினிமாஸ் நிறுவனம் சார்பில் என். விமல் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Mersal and Mannar Vagaiyara movie clash on Diwali 2017

Mannar Vagaiyara

சாய் பல்லவிக்கு லவ் லெட்டர் எழுதிய சுஜா வருணி

சாய் பல்லவிக்கு லவ் லெட்டர் எழுதிய சுஜா வருணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sai pallavi suja varuneeமலையாள மொழியில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம்.

இப்படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து நம் மனதை அள்ளியவர் நடிகை சாய் பல்லவி.

இதுவரை இவர் எந்த நேரடி தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால் தெலுங்கில் ஃபிதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றி மற்றொரு நடிகையான சுஜா வருணி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

இளவரசியான சாய்பல்லவி நான் பாராட்டுகிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் சிறப்பானவை.

சாய்பல்லவியின் கேரக்டரை நான் பெரிதும் மதிக்கிறேன். சினிமாவிலும் நிஜத்திலும் அவர் உடுத்தும் ஆடைகள் பெரிதும் கவர்ந்துள்ளது.

ஒரு வார்த்தை கூட தெலுங்கில் தெரியாவிட்டாலும் தான் நடிக்கும் தெலுங்கு படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். இது அவரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

நான் அவரை ரசிக்கிறேன். காதலிக்கிறேன்” என ஒரு கடிதமாக பதிவிட்டுள்ளார்.

குற்றம் 23, கிடாரி, வைகை எக்ஸ்பிரஸ், முன்னோடி உள்ளிட்ட 40 படங்களில் நடித்துள்ளவர் சுஜா வருணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த கடிதம்…

Suja Varunee‏Verified account @sujavarunee 2m2 minutes ago
words to the girl whom I admire a lot! @Sai_Pallavi92

Suja Varunee wrote Love Letter to Malar teacher fame Sai Pallavi

sai pallavi

‘தப்பு தண்டா’ படத்திற்கு யு சான்றிதழ்; ஜூலை 15ல் ரிலீஸ்

‘தப்பு தண்டா’ படத்திற்கு யு சான்றிதழ்; ஜூலை 15ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thappu Thanda movie certificate and release date is hereஇயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையிலிருந்து பயின்று வந்துள்ள ஸ்ரீகாந்தன் இயக்கியுள்ள முதல் படம் ‘தப்பு தண்டா ‘.

இப்படத்தில் சத்யா கதாநாயகனாகவும், ஸ்வேதா கதாநாயகியாகவும், ஜான் விஜய் மற்றும் ‘விசாரணை’ புகழ் அஜய் கோஷும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

”ஒரு படத்திற்கும் அதன் உருவாக்கத்திற்கும் நடிகர்கள் போடும் உழைப்பு, தொழில்நுட்ப கலைஞ்ஜர்களின் அர்ப்பணிப்பு, இயக்குனரின் தவம் அனைத்தும் முழுமை பெறுவது அப்படம் மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கும் விநியோகஸ்தர்கள் கையில் போய் சேரும்போது மட்டுமே.

அவ்வாறான விநியோகஸ்தர் ஜோன்ஸ் அவர்கள் எங்களின் ‘தப்பு தாண்டா’ விற்கு கிடைத்துள்ளது எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியாகும்.

தரமான ஜனரஞ்சக படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும் ‘ செஞ்சுரி இன்டெர்னஷனல்ஸ்’ ன் ஜோன்ஸ் அவர்கள் எங்களது ‘தப்பு தாண்டா’ வை வெளியிடப்போவதில் எங்களுக்கு அளவற்ற பெருமை.

இந்த படத்திற்கு சென்சார் குழு ‘யூ ‘ சான்றிதழ் வழங்கியுள்ளதும் எங்களுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. ஜூலை 15 ஆம் தேடி ரிலீஸ் ஆக உள்ள ‘தப்பு தாண்டா’ விற்கான விளம்பர பணிகளை வரும் நாட்களில் தொடங்க உள்ளோம்” என கூறினார் புதுமுக இயக்குனர் ஸ்ரீகாந்தன்.

Thappu Thanda movie certificate and release date is here

Thappu Thanda movie stills

தான் தயாரிக்கும் பண்டிகை படத்தில் பாட்டு எழுதிய விஜயலெட்சுமி

தான் தயாரிக்கும் பண்டிகை படத்தில் பாட்டு எழுதிய விஜயலெட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pandigai krishna anandhiபிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சென்னை 600028 மற்றும் அஞ்சாதே படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர்.

தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார்.

கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் ‘பண்டிகை ‘ படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார்.

இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை விஜயலட்சுமியின் ‘டீ டைம் டாக் ‘ தயாரித்து ‘ஆரா சினிமாஸ் ‘ விநியோகம் செய்யவுள்ளது.

RH விக்ரம் இசையமைத்துள்ளார்.

”கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலக்ஷ்மி.

அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.’பண்டிகை ‘ படத்தின் ஒரு பாடலுக்காக நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம்.

அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில், விஜயலக்ஷ்மி தான் எழுதலாமா என கேட்டார். நானும் தடுக்கவில்லை.

ஒரு சில நாட்களில் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள்.

‘அடியே’ என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் RH விக்ரமும் மிகவும் ரசித்தோம். இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

பெருகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வு தந்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள ‘பண்டிகை’ க்கு நல்ல சினிமாவை எப்பொழுதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறேன் என்றார் இயக்குனர்.

Producer cum Actress Vijayalakshmi becames lyricist in Pandigai movie

pandigai shooting spot

புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு படம்; எம்ஜிஆர் கேரக்டரில் யார்..?

புரட்சித் தலைவரின் வாழ்க்கை வரலாறு படம்; எம்ஜிஆர் கேரக்டரில் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mgr stillsகாமராஜரின் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் படமாக எடுத்தது ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம்.

தற்போது எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறையும் திரைப்படமாக எடுக்க முன்வந்துள்ளது.

தென்னிந்திய மக்களை, குறிப்பாக தமிழக மக்களையும், ஏழை எளியோரையும் அதிகம் கவர்ந்தவர் எம்ஜிஆர்.

சினிமாவிலும், அரசியலிலும் பல சாதனைகளையும், சோதனைகளையும் கடந்து, மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் அவர்.

இந்நிலையில் அவரின் வாழ்க்கையும் மற்றும் அவருடன் பழகியவர்களின் உருவ ஒற்றுமையுள்ள நடிகர்களை வைத்து இந்த படத்தை எடுக்கவிருக்கிறார்களாம்.

இந்த படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த தகவல்களை பத்திரிகை செய்தியாக ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழக அரசால் எம்ஜிஆர் 100 ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu ex Chief Minister MGR biopic movie news updates

More Articles
Follows