பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா.? என்ன லாஜிக்.??? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா.? என்ன லாஜிக்.??? சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gayathri raghuram suriyaநீட் தேர்வு பயத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர்.

இதனால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில்…

கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.

தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள்.. அனல் பறக்க விவாதிப்பார்கள்.

மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோர்களும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.

நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது.

மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கக் கூடாது. சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம்.

என்று வேதனையுடன் சூர்யா அறிக்கை வெளியிட்டிருந்தார்.

சூர்யாவின் இந்த அறிக்கையைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான நடன இயக்குனர் காயத்ரி ரகுராம்.

அதில்…

“ரசிகர்கள் முதல்நாள் முதல் காட்சியை திரையரங்கில் கொண்டாட பேனர்கள் வைக்கின்றனர்.

அந்த பேனர்கள் விழுந்து ரசிகர்கள் இறந்தால் சினிமாவையே தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்போமா? எந்த ஒரு லாஜிக்கும் இல்லையே.

தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்கள் ஒவ்வொருநாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினமும் தேர்வு எழுதுவதைப் போலத்தான்”

fans have died falling banners to celebrate actors FDFS n fans have lost their lives just by spending money on fan clubs. Can we ban movies? No logic right? Pls encourage students to study n face the exam boldly. Doctors – Everyday is like exam when they attend their patients…

BJP member actress gayathri raghuram slams suriya

ஷாரூக்-தீபிகா இணையும் படத்திற்கு பாஜகவை அலறவிடும் டைட்டில் வைத்த அட்லி

ஷாரூக்-தீபிகா இணையும் படத்திற்கு பாஜகவை அலறவிடும் டைட்டில் வைத்த அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atleeவிஜய் நடித்த ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய திரைப்படங்களை அட்லி இயக்கியிருந்தார்.

இந்த 3 படங்களுமே விஜய் & அட்லிக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

இதனையடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை அட்லி இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

தற்போது இது கிட்டத்தட்ட உறுதி என கூறப்படுகிறது.

இவர்கள் இணையும் படத்திற்கு சங்கி (Sanki) என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறாராம்.

ஹேப்பி நியூ இயர், சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக கட்சியினரை கிண்டலாக சங்கி என அழைத்து வருகின்றனர் மக்கள். அப்படியிருக்கையில் இந்த தலைப்பை வைத்திருப்பதால் நிச்சயம் அரசியல் பிரச்னைகளை அட்லி சமாளிப்பாரா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

SRK and Deepika to reunite for atlees Sanki

வீடியோ கான்பிரன்ஸி-ல் நீதி வழங்கும் நீதிமன்றம்..; சூர்யா மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட் ஜட்ஜ் கடிதம்

வீடியோ கான்பிரன்ஸி-ல் நீதி வழங்கும் நீதிமன்றம்..; சூர்யா மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட் ஜட்ஜ் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriyaநீட் தேர்வு பயத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

இதனை கண்டுக்காத அரசுகளை மாணவர்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத அரசு என நடிகர் சூர்யா கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மேலும் அவரின் அறிக்கையில்.. கொரோனா காலத்தில் வீடியோ கான்பிரன்ஸி-ல் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் நீட் தேர்வு எழுத சொல்வதையும் கண்டித்திருந்தார்.

இந்த நிலையில் சூர்யாவின் இந்த பேச்சுக்கு (அறிக்கை) நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல்,தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது

“நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்

இவ்வாறு தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

Madras HC wants contempt notice against actor Suriya

பாஜக.வில் இணைய காத்திருக்கிருக்கிறேனா..? விஷால் விளக்கம்

பாஜக.வில் இணைய காத்திருக்கிருக்கிறேனா..? விஷால் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Actor Vishal join in BJP Political partyஅடுத்தாண்டு 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சில காலம் அரசியல் களம் கண்ட நடிகர் விஷால் அவர்கள் பா.ஜ.கட்சி, தலைவர் முருகனை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து விஷால் பா.ஜ.வில் இணைய இருப்பதாக தகவல் பரவியது.

இதை மறுத்துள்ள விஷால், ”நான் பா.ஜ.,வில் இணைவதாக வந்த செய்தி உண்மையில்லை. யாரையும் சந்திக்க நேரம் கேட்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Will Actor Vishal join in BJP Political party

மக்கள் சக்திதான் எல்லாமே..; மாஸான ரீ-என்ட்ரீ கொடுக்க போகும் வடிவேலு

மக்கள் சக்திதான் எல்லாமே..; மாஸான ரீ-என்ட்ரீ கொடுக்க போகும் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vadiveluநேற்று செப்டம்பர் 12ஆம் தேதி காமெடி கிங் மீம்ஸ் அரசன் வடிவேலு தன் பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி அவருக்கு கோலிவுட்டே வாழ்த்து சொன்னது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்…

”மக்களை சிரிக்க வைக்க தினமும் நான் பிறக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக பிறக்கிறேன்.

என் அம்மாவுக்கு முதலில் நன்றி சொல்லணும், அவர் என்னை பெற்றெடுக்கவில்லை என்றால் நான் கிடையாது. அதன்பிறகு மக்கள் சக்தி தான். மக்கள் சக்தி இல்லாமல் இந்த வடிவேலு கிடையாது.

ஏன் நடிக்க மாட்டிறீங்கனு கேட்கிறாங்க.? சீக்கிரமே பெரிய என்ட்ரியோடு வருவேன். வாழ்க்கைன்னா சைத்தான், சனியன் இருக்கும். என் வாழ்வில் இல்லாமல் இருக்குமா, அங்கங்க ரெண்டு இருக்கத்தான் செய்து” என பேசியுள்ளார் வடிவேலு.

vadivelu talks about his re entry in kollywood

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத கல்விமுறை; சூர்யா சூடான அறிக்கை

மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத கல்விமுறை; சூர்யா சூடான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas statement about NEET exam and Education systemநீட் தேர்வு பயத்தில் 3 மாணவர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

இது தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவும் இல்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது…

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது.

Suriyas statement about NEET exam and Education system

actor suriya about neet exam

More Articles
Follows