தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அர்ஜுன் ரெட்டி.
இப்படம் அங்கு மாபெரும் வெற்றி பெறவே தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
பாலா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு வர்மா என தலைப்பிட்டு துருவ் விக்ரம் நாயகனாக நடித்தார்.
படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் தயாரிப்பு நிறுவனத்துக்கும், பாலாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளால் படம் வேண்டாம் என கை கழுவியது தயாரிப்பு நிறுவனம்.
வேறு ஓர் இயக்குனரை வைத்து முழு படத்தையும் தயாரிக்க போவதாக அறிவித்து அதன்படி ஆதித்யா வர்மா என்று தலைப்பிட்டு அடுத்த படத்தை ஆரம்பித்தனர்.
இப்படத்தை கிரீசாயா என்பவர் இயக்க, நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கிறார்.
நாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடிக்க, 2வது நாயகியாக பிரியா ஆனந்த் ஒப்பந்தமாகியுள்ளார். நாயகனின் நண்பராக அன்புதாசன் நடிக்கிறார்.
இந்நிலையில் துருவ் விக்ரமுக்கு தந்தையாக நடிக்க டைரக்டர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
Gautham Menon team up with Dhruv in Aditya Varma the new version of Arjun Reddy