மீண்டும் கண்களை காட்டி மிரட்ட வரும் ‘ராகவன் IPS’ கமல்

Gautham Menon confirms Kamals Vettaiyadu Vilayadu Sequel ராகவன் ஐபிஎஸ் என்ற கேரக்டரில் போலீஸ் கமிஷ்னராக கமல்ஹாசன் மிரட்டியிருந்த படம் “வேட்டையாடு விளையாடு”.

கௌதம் மேனன் இயக்கிய இந்த படத்தில் ஜோதிகா, கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைந்திருந்த இப்படம் 2006ல் வெளியானது.

இந்த படத்தில் ஒரு காட்சியில் என் கண்ணை எடுத்துடுவேன் சொன்னியாமே எங்கே எடு என தன் கண்களை காட்டி மிரட்டியிருப்பார் கமல். இந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்பட 2ஆம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

இப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக கவுதம் மேனன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் மாஸான இன்ட்ரோ சீன் வைக்கவுள்ளதாக கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Gautham Menon confirms Kamals Vettaiyadu Vilayadu Sequel

Overall Rating : Not available

Related News

Latest Post