நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக் & சேரன்..; வாரிசு நடிகையும் கூட்டணி

நந்தா பெரியசாமி எழுதி, இயக்கவுள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.

மேலும் சேரன், டேனியல் பாலாஜி , சரவணன், கிழக்கு சீமையிலே விக்னேஷ் , சிங்கம் புலி, ஜோமல்லூரி , கவிஞர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் , மௌனிகா, மைனா , பருத்திவீரன் சுஜாதா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார்.

பாலபரணி ஒளிப்பதிவு செய்ய சித்துகுமார் இசையமைக்கிறார்.

இப்பட மூலம் வாரிசு நடிகை ஷிவாத்மிகாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கவுதம் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் நட்சத்திர தம்பதிகள் ராஜசேகர் & ஜீவிதாவின் 2வது மகள் ஆவார்.

இவர்களின் மூத்த மகள் ஷிவானியும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இப்பட சூட்டிங் மார்ச் மாதம் முதல் நடைபெறவுள்ளது .

Gautham karthik and Cheran joins for new film

Overall Rating : Not available

Latest Post