கரகாட்டக்காரன் 2 ரெடி..; ராமராஜன் & கவுண்டமணி நடிப்பார்களா..?

New Project (4)தமிழ் சினிமா எத்தனை காலங்களை கடந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத படம் கரகாட்டக்காரன்.

கங்கை அமரன் இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரிலீசாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது.

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் 500 நாட்களை திரையரங்கில் ஓடியது.

இந்த நிலையில் விரைவில் கரகாட்டக்காரன் 2 உருவாக வாய்ப்புள்ளது.

”ராமராஜன், கவுண்டமணி சம்மதித்தால், இரண்டாம் பாகத்திலும் அவர்கள் நடிப்பர்,” என டைரக்டர் கங்கை அமரன் தெரிவித்து உள்ளார்.

Overall Rating : Not available

Related News

இளையராஜா இசையில் கங்கை அமரன் இயக்கத்தில்…
...Read More

Latest Post