‘ஃபைண்டர்’ இயக்குநரும் இசையமைப்பாளரும் சரித்திரம் படைக்க வந்துள்ளனர் – வைரமுத்து

‘ஃபைண்டர்’ இயக்குநரும் இசையமைப்பாளரும் சரித்திரம் படைக்க வந்துள்ளனர் – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்லி & சென்ராயன் இணைந்து நடித்துள்ள படம் ‘ஃபைண்டர்’. இந்த படத்தை வினோத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த பட விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது…

இந்த விழாவிற்கு வந்த தயாரிப்பாளர் குஞ்சு மோகன் அவர்களுக்கு நன்றி, சார்லி மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டும் இல்லை அது ஒரு பல்கலைகழகம், நாம் அங்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இயக்குநரும் இசையமைப்பாளரும் என் வீட்டிற்கு வந்தனர், அவர்களை உற்று கவனித்தேன் அவர்கள் கதை சொல்ல மட்டும் வந்தவர்கள் அல்ல சரித்திரம் படைக்க வந்தவர்கள்.

நான் புதியவர்கள் யார் வந்தாலும் அவர்களை பார்ப்பதில்லை அவர்களது உழைப்பை தான் பார்ப்பேன், இவர்களது உழைப்பு அருமையாக இருந்தது. தயாரிப்பாளர் சுப்ரமணியன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள் இன்று சினிமாவில் தயாரிப்பாளர்கள் கண்டு பிடிப்பது அரிது , இந்த தயாரிப்பாளருக்கு எந்த அய்யமும் இல்லை படத்தை நன்றாக தயாரித்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும், இந்தப் படத்தில் பாடல்கள் கதையை சொல்லவில்லை படத்தில் வரும் ஒரு நிகழ்வை சொல்லுமாறு அமைந்துள்ளது.

சினிமாவில் குறை சொல்வது எளிது ஆனால் நிறை காண்பது அரிது அதனால் யாரும் எழுதட்டும் யாரும் பாடட்டும் அதில் யாரும் நடிக்கட்டும்.

ஆனால் தமிழை நன்கு அறிந்து விட்டு அதை செய்யட்டும், இதைத்தான் நான் வேண்டுகோளாக கேட்டுக் கொள்கிறேன், இந்தப் படத்திற்கு தமிழில் தலைப்பை வைக்க வேண்டுமென்று கேட்டேன் ஆனால் படக்குழுவினர் வியாபாரத்தில் அது பிரச்சனை ஏற்படுத்துகிறது என்றனர்.

தமிழுக்கு அது தவறு என்றாலும் தயாரிப்பாளர் தமிழன் என்பதால் இதை நான் ஒப்புக் கொண்டேன். சார்லி ஒரு கெட்டிகார நல்லவன்.

நாற்பது வருடம் இந்த சினிமாவில் இருந்து வருகிறான், அவனது கலை மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் இந்தப் படத்தின் வெற்றி விழாவில் அனைவரையும் நான் சந்திப்பேன், படக்குழு அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி.

Finder movie director Vinoth will make history says Vairamuthu

சார்லி செய்த சாதனை.; ‘ஃபைண்டர்’ விழாவில் தனஞ்செயன் பேச்சு

சார்லி செய்த சாதனை.; ‘ஃபைண்டர்’ விழாவில் தனஞ்செயன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சார்லி & சென்ராயன் இணைந்து நடித்துள்ள படம் ‘ஃபைண்டர்’. இந்த படத்தை வினோத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த பட விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் G தனஞ்செயன் பேசியதாவது..

இந்தப் படத்தின் போஸ்டர் பார்த்தவுடன் இந்த விழாவிற்கு வர ஒப்புக்கொண்டேன். அழைப்பிதழில் சார்லி இருந்தார், சார்லி பல படங்களில் நடித்துள்ளார் அவர் நல்ல மனிதர் பல சாதனைகளை புரிந்துள்ளார், இன்றளவும் நாடக மேடையில் நடித்து வருகிறார். அவர் ஆயிரம் படம் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

ஆனால் அவர் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எறும்பு போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது நடிப்பில், இந்தப் படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இயக்குநர் வினோத்திற்கு எனது வாழ்த்துகள்.

எந்த ஒரு கவிஞரும் எட்டாத உயரத்தில் உள்ள வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுதியுள்ளார். சிறிய படைப்பிற்கு ஆதரவு கொடுத்த அவருக்கு எனது நன்றிகள். மக்கள் மத்தியில் இன்னும் இந்தப் படத்தை கொண்டு செல்ல வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் எனது ஆதரவு கண்டிப்பாக இந்தப் படத்திற்கு உண்டு நன்றி.

இசையமைப்பாளர் சூர்யபிரசாத் பேசியதாவது…

இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அடையாளமாகவும் வைரமுத்து சார் உள்ளார் அவரது வரிகளுக்கு நான் இசையமைத்தது எனக்கு கனவு மாதிரி இருந்தது, இன்றும் என்னால் இதை நம்ப முடியவில்லை.

எங்கள் தேவை அறிந்து அட்டகாசமான பாடல்களை கொடுத்தார். சார்லி சாருக்கு எனது நன்றி இந்தப் படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் செண்ட்ராயன் சாரும் நன்றாக நடித்துள்ளார், என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் இயக்குநர் பெரும் உழைப்பை கொடுத்துள்ளார் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.

Charlie done many records says Dhananjayan

‘ஃபைண்டர்’ படத்தில் நாயகன் இல்லை.. கதைதான் நாயகன்.. – சார்லி

‘ஃபைண்டர்’ படத்தில் நாயகன் இல்லை.. கதைதான் நாயகன்.. – சார்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

நடிகர் சார்லி பேசியதாவது..

இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் பெருக்கமானது, அண்ணன் வைரமுத்து அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்குவது எங்கள் குழு அனைவருக்கும் பெருமை, இந்தப் படத்தில் பெரிய கதாநாயகன்கள் இல்லை இந்த படத்தில் கதைதான் நாயகன் , வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுத ஒப்புக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.

இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத். வைரமுத்து அவர்கள் நல்ல கவிஞர் என்பதை விட மிகவும் நல்ல மனிதர் நன்றி மறவா மனிதர். இந்தப் படம் பலரது உழைப்பில் உருவானது. படம் நன்றாகவந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

In Finder movie story is hero says Charlie

ராணா டகுபதி & துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’

ராணா டகுபதி & துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் காந்தா என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார்.

ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.

பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு, துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஒட்டி புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படத்தை இணைந்து தயாரிப்பதுடன் துல்கர் சல்மான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் இணைவதில் ராணா மிகவும் சுவாரஸ்யம் அடைந்துள்ளார். இதன் மூலம் மக்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராணா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்…

“நல்ல சினிமாவின் சக்தியை நினைவூட்டும் வகையில், மிகவும் சிறப்பான கதையை கண்டறிவது மிகவும் அரிதான காரியம் ஆகும். காந்தா அதுபோன்ற ஒரு கதை தான். இதுவே எங்களை இணைய செய்திருக்கிறது.

இந்த பயணத்தை துவங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். மிகவும் திறமை மிக்க துல்கர் சல்மான் மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் உடன் இணைவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

அவரது பிறந்தநாளை ஒட்டி, என்ன நடக்க போகிறது என்பதற்கான சிறு முன்னோட்டம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் துல்கர் சல்மான், காந்தா உலகிற்கு வரவேற்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழு பற்றிய விவரங்களை பின்னர் அறிவிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Rana Daggubati Dulquer Salmaans Joint Production Titled Kaantha

மீண்டும் இணைந்து நடிப்போம்.; கிங்காங்கை அழைத்த கன்னட சூப்பர் ஸ்டார்

மீண்டும் இணைந்து நடிப்போம்.; கிங்காங்கை அழைத்த கன்னட சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஜூலை 28ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடித்துள்ள கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நேற்று சென்னை வந்து ‘ஜெயிலர்’ இசை விழாவில் பங்கேற்று பேசினார்.

இந்த நிலையில் சிவராஜ்குமார் அவர்களை, தமிழ் நடிகர் கிங்காங் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

‘கண்டுகலி’ என்ற கன்னடப் படத்தில் சிவ ராஜ்குமார் அவர்களுடன் கிங்காங் நடித்துள்ளார். மேலும் இதுவரை 25-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

எனவே கிங்காங்கை மீண்டும் கன்னடப் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார் சிவராஜ்குமார்.

சிவா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் கிங்காங் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

சிவராஜ்குமார்

Come again and act in Kannada movies Sivarajkumar invite Kingkong

சஞ்சய்தத் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ‘லியோ’ வைத்த மெகா ட்ரீட்

சஞ்சய்தத் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ‘லியோ’ வைத்த மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இவருடைய கதாபாத்திரமான ஆண்டனி தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

makers unveil Sanjay Dutt’s character from film leo

More Articles
Follows