Rage – ரம்யா நம்பீசன் குரலில் மகளிர் தின ஸ்பெஷல்..; பத்ரி வெங்கடேஷ் கவிதை !

Rage – ரம்யா நம்பீசன் குரலில் மகளிர் தின ஸ்பெஷல்..; பத்ரி வெங்கடேஷ் கவிதை !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectநடிகை ரம்யா நம்பீசன் நடிப்பு மட்டுமல்லாது தன் பன்முகதிறமைகளை வெளிக்கொணரும்பொருட்டு YouTube தளத்தில் தனக்கென ஒரு தனி சேனலை ஆரம்பத்து, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை அசத்தி வருகிறார்.

Me, Unhide, Sunset Diary மேலும் அவரது திறமையில் வெளிவந்த பல நிகழ்ச்சிகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டு பெற்றுள்ளது.

இதில் அடுத்ததாக உலக மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வண்ணமாக பெண்களை போற்றும் பத்ரி வெங்கடேஷ் அவர்களின் Rage கவிதை ரம்யா நம்பீசன் குரலில் உருவாகியுள்ளது.

ரம்யா நம்பீசன் இக்கவிதையை தன் குரலில் விவரிக்க, இதனை பத்ரி வெங்கடேஷ் எழுதி இயக்கியுள்ளார். பல்லு இக்கவிதை நிகழ்வை ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகவா S அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில்…

ஆத்திரம், கோபம் இரண்டும் பயிற்சிக்குட்பட்டதே, காளி அல்லது சீதா இரண்டில் எதுவாக இருக்க வேண்டுமென்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

இந்த முக்கியமான கருத்தை தான் இந்த கவிதை சொல்ல முயல்கிறது. நடிகை ரம்யா நம்பீசன் மீது எப்போதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, நடிகையாக மட்டுமின்றி, இசை வல்லுநராகவும் மேலும் பல பன்முக திறமைகளும் கொண்டவர்.

தன் திறமை மூலம் இந்த தளத்தில் மற்ற துறை திறமையாளர்களுக்கும் வாய்ப்பு தந்து அறிமுகப்படுத்தும் அவரது பண்பு மெச்சதக்கது.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் மற்றும் ரம்யா நம்பீசன் இருவரும் ஏற்கனவே “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளார்கள்.

இப்படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் உலகமெங்கும் கோடைகாலத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Exploring a women’s anger #ramyanambeesanencore next video is here

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் கட்சி திமுக-வுக்கு திடீர் ஆதரவு..!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் கட்சி திமுக-வுக்கு திடீர் ஆதரவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேமுதல் முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

இதனிடையில் நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

“முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்றும் முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என்றார்.

இந்த நிலையில், “சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு முக்குலத்தோர் புலிப்படைகட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது.

இந்த கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்திருக்கிறாராம்.

Karunas supports DMK in assembly election 2021

ஆறு விருதுகளை அள்ளிய நடிகர் அஜித்..; தமிழக துணை முதல்வர் OPS பாராட்டு

ஆறு விருதுகளை அள்ளிய நடிகர் அஜித்..; தமிழக துணை முதல்வர் OPS பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.

சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள்.

60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.

இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார்.

அவருக்கு கிளப்பின் இதர உறுப்பினர்கள் தங்களுடையப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் அவர்கள் வென்றுள்ள பதக்கங்களின் விவரம்:

* ஏர் பிஸ்டல் 10 மீ – தங்கம்

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) (25 மீ) – வெள்ளி

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (என்.ஆர்) – (25 மீ) – தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) – (25 மீ) – தங்கம்

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (என்.ஆர்) – (25 மீ) – வெள்ளி

* ஃப்ரீ பிஸ்டல் (50 மீ) – தங்கம்

சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன், தேசிய ரைஃபிள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டிவிஎஸ் ராவ், தமிழ்செல்வன் டிஜிபி, தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் செயலாளர் ரவிகிருஷ்ணன், சென்னை ரைஃபிள் கிளப்பின் இணைச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் போட்டியில் வென்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்கள்.

மேலும் மதுரை ரைஃபிள் கிளப் செயலாளர் வேல் சங்கர், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் செயலாளர் மருதாச்சலாம் உள்ளிட்ட பலர் இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

இந்த நிலையில் அஜித்துக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்…

“தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! https://t.co/ZPfbY08uzJ

Deputy CM Ops wishes to Actor Ajith

ஸ்டாலினை எதிர்க்க முடியாமல் தொகுதியை மாற்றிய சீமான்.; அடித்த பல்டிக்கு அதிரடி விளக்கம்

ஸ்டாலினை எதிர்க்க முடியாமல் தொகுதியை மாற்றிய சீமான்.; அடித்த பல்டிக்கு அதிரடி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.

கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்தி இருந்தார்.

அதன்படி நேற்று நாம் தமிழர் கட்சி தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்தது.

234 வேட்பாளர்களையும் சென்னை YMCA மைதானத்தில் ஒரே மேடையில் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களும் இருந்தனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே சட்டமன்ற தேர்தலிலும் 50 சதவீத பெண் வாக்காளர்களை சீமான் களமிறக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என பிரச்சாரம் செய்தார் சீமான்.

திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்.

எனவே சீமானும் அங்கு தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

இந்த தொகுதி மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார் சீமான்.

“கொளத்தூரில் போட்டியிடலாம் என இருந்தேன். ஆனால் மக்கள் நலன் தான் முக்கியம்.

ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் முக்கியம்.” என விளக்கம் கொடுத்துள்ளார்.

Naam Tamilar leader Seeman to contest in thiruvottiyur assembly constituency

கவர்ச்சியில் இருந்து காக்கி-கிக்கு மாறிய யாஷிகா ஆனந்த்.; வில்லனாகும் இசையமைப்பாளர்

கவர்ச்சியில் இருந்து காக்கி-கிக்கு மாறிய யாஷிகா ஆனந்த்.; வில்லனாகும் இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yashika Aannand (1)முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் ” யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.

மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார்.

ஒளிப்பதிவு – இனியன் ஜே ஹாரிஸ். இவர் கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர்.

இசை – சித்தார்த் விபின்

எடிட்டிங் – எலிசா

கலை – பழனி

ஸ்டில்ஸ் – சக்தி பிரியன்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் யாஷிகா அனந்த் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னையில் ஓர் காவல் நிலையத்தில் SI ஆக பணியாற்றுகிறார் நாயகி பாரதி.

அங்கே எதிர்பாராத விதமாக ஏற்படும் சிக்கலால் பணியிடை மாற்றம் பெற நேரிடுகிறது.

தான் மிகவும் நேசித்த crime department-ல் இருந்து காவல்துறைக்கட்டுபாட்டு அறைக்கு பணி மாற்றமாகிறார்.

தன் திறமைக்கு இங்கே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என அவள் நினைத்து சாதாரணமாக தன் வேலையை தொடர்கையில், ஒருநாள் மாலை கட்டுபாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வருகிறது.

எதிர்முனையில் பேசும் பெண் தான் இன்னும் சில மணி நேரங்களில் இறந்துவிடுவேன், என்னை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என சொல்ல, ஆரம்பத்தில் அந்த கால் frank என பாரதி நினைக்க, பின்புதான் பாரதிக்கு அந்த வழக்கின் தீவிரம் புரிகிறது.

பின் அந்த வழக்கை பாரதி எப்படி எதிர்கொண்டாள் என்பதை “ஆக்‌ஷன்-திரில்லர்” கலந்த்து திரைக்கதை வடிவமைக்க பட்டிருக்கிறது.

Yaashika Anand’s new film starts with pooja

மகளிருக்காக புதிய அவதாரம் எடுத்த பாடலாசிரியர் அருண்பாரதி

மகளிருக்காக புதிய அவதாரம் எடுத்த பாடலாசிரியர் அருண்பாரதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது.

வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார்.

இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி2, திமிருபுடிச்சவன், கொலைகாரன் களவாணி2, கபடதாரி, உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் பாடலுக்கு பின்னால் பணியாற்றிய நான், முதன் முறையாக பாடலுக்கு முன்னால் தோன்றி முகம் காட்டியிருக்கிறேன் என்றும் தொடர்ந்து சமூகத்திற்கு பயன்படும் நல்ல படைப்புகளை கொடுப்பது என் கடமை என்றும் கூறினார்.

இப்பாடலுக்கு அபுபக்கர் இசையமைக்க P.T தினேஷ் மற்றும் தமிழ்செல்வன் இரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து இப்பாடலை எழுதியுள்ளனர்.

https://t.co/nr2xZMc2qQ

Title : பெண்
Actors: Arunbharathi &Tamil selvi& Santhosh & Seetharaman& varadhan
Music: Abubakkar
Lyrics: P.T.Dinesh &Tamilselvan
Cinematography& Editing DIRECTION : P.T.DINESH

Lyricist Arun Bharathi turns hero for women’s day

More Articles
Follows