விதார்த் & ரம்யா நம்பீசன் நடித்த ‘என்றாவது ஒருநாள்’ சிறந்த படமாக தேர்வு

விதார்த் & ரம்யா நம்பீசன் நடித்த ‘என்றாவது ஒருநாள்’ சிறந்த படமாக தேர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

endravathu oru naalசென்னையில் நடைபெற்ற 18-வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று சிறந்த படங்கள் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் இம்முறை திரையிட்ட படங்களில் சிறந்த படமாக என்றாவது ஒருநாள் படம் தேர்வாகி தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்தது.

ஏற்கெனவே இப்படம் 33 சர்வதேச விருதுகளை வாங்கி இருக்கிறது. என்றாவது ஒருநாள் படத்தை மிக கச்சிதமாக எழுதி இயக்கி தயாரித்திருந்தார் வெற்றி துரைசாமி.

இப்படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர்.

விழாவில் இயக்குநர் வெற்றி துரைசாமிக்கு விருதும் சான்றும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது. நமது தமிழ்படங்கள் இப்படியான அங்கீகாரத்தைப் பெறுவதென்பது இனிவரும் கலைஞர்களுக்கு பெரும் படைப்பூக்கத்தை கொடுக்கும் என்பதில் மாற்றமில்லை.

விழாவில் வழங்கிய விருதை ஏற்றுக்கொண்டு, என்றாவது ஒருநாள் படத்தை இயக்கி தயாரித்திருந்த வெற்றி துரைசாமி பேசும்போது,…

“இந்தப்படம் சிறந்தபடம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை என வெவ்வேறு கேட்டகிரியில் இதுவரை 33 விருதுகளைப் பெற்றிருக்கிறது.

இப்படி உலகத் திரைப்பட விழாக்களில் 33 சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும் நம்ம சென்னையில் நடைபெற்ற திரைப்படவிழாவில் விருது பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இதுவொரு நல்ல மோட்டிவேசன். நல்லபடங்களை தொடர்ந்து எடுப்பதற்கு இந்தவிருது பெரும் முனைப்பாக இருக்கும். அனைவருக்கும் நன்றி” என்றார்

மேலும் என்றாவது ஒருநாள் படத்தின் கேமராமேன் சண்முக சுந்தரத்திற்கு ஸ்பெசல் ஜுரி அவார்ட் கிடைத்தது.

இந்த விருது கிடைத்த மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொள்ளும் போது,

“இந்தப்படத்தின் கதையோட்டத்தை கெடுக்காத அளவில் கேமராவொர்க் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தப்படத்தின் இயக்குநர் வெற்றி துரைசாமி சார் காணுயிர் ஒளிப்படக் கலைஞர் (wildlife photographer) இருந்ததால் ஒளியின் மொழி அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்தார். அந்த வகையில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்

Vidharth – Ramya Nambeesan film gets recognition in film festival

கலைமாமணி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் விருது

கலைமாமணி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறந்த நடிகை என்ற அந்தஸ்த்தை எப்போதோ பெற்றுவிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்படவிழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

சென்னை சர்வதேச 18-ஆவது திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று சிறந்த படங்கள் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை க/பெ ரணசிங்கம் படத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த விருதை வழங்கினார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்திருந்த க/பெ ரணசிங்கம் படத்தை விருமாண்டி எழுதி இயக்கி இருந்தார்.

ஜீதிரையில் இப்படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது.

இந்த விருதுபெற்றதை குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும்போது,

“உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த டீமிற்கு என் அன்பான நன்றி.

மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். நல்லநடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெருநன்றியும்” என்றார்

Actress Aishwarya Rajesh gets one more award for her talent

யுவன் இசையமைத்த ‘டாப் டக்கர்’ செம டக்கராம்.; ஹிந்தி சான்ஸ் இனியாவது கிடைக்குமா..?

யுவன் இசையமைத்த ‘டாப் டக்கர்’ செம டக்கராம்.; ஹிந்தி சான்ஸ் இனியாவது கிடைக்குமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘வலிமை, சிம்புவின் ‘மாநாடு’ & தனுஷின் ‘நானே வருவேன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன்.

இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இவர் இசையமைத்த ‘டாப் டக்கர்’ என்ற ஹிந்திப் பாடல் யூடியுபில் வெளியானது.

அந்தப் பாடல் ரசிகர்களின் பேராதரவுடன் 5 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

இதற்கு முன் 2014ம் ஆண்டு வெளியான ‘ராஜா நட்வர்லால்’ என்ற ஒரே ஒரு ஹிந்திப் படத்திற்கு மட்டுமே இசையமைத்துள்ளார்.

தற்போது ‘டாப் டக்கர்’ பாடல் சூப்பர் ஹிட்டானதால் அவருக்கு மீண்டும் ஹிந்திப் பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Will Yuvan get chance again in bollywood ?

தமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் லிமிடெட் தலைவரானார் விடியல் ராஜூ..; தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து

தமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் லிமிடெட் தலைவரானார் விடியல் ராஜூ..; தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் விடியல் ராஜூ. இவர் பல படங்களை தயாரித்துள்ளார்.

தமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவராக விடியல் ராஜூ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது விடியல் ராஜூ மற்றும் திரு பெஸ்லி அவர்கள் தமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விடியல் ராஜூ மற்றும் பெஸ்லி அவர்களுக்கு இந்த பதவி கிடைத்ததையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Tamil Film Producers Housing Cooperative Board Producer Vidiyal Raju has been chosen as it’s President

Vidiyal Raju

BREAKING தமிழகம் புதுச்சேரி கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நாள் அறிவிப்பு.; வேட்பாளர் ரூ.38 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி

BREAKING தமிழகம் புதுச்சேரி கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நாள் அறிவிப்பு.; வேட்பாளர் ரூ.38 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn election 2021 (2)தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அறிவித்தனர்..

மேற்கு வங்கத்தில் 294 இடங்களுக்கும், தமிழ்நாட்டில் 234 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அஸ்ஸாம்- 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல். முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27. 2-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 1. 3-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 6.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல்.

8 கட்டங்களாக மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு- மார்ச் 27, 2-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 1, 3-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 6, 4-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 10, 5-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 17, 6-ம் கட்ட வாக்குப் பதிவு- ஏப்ரல் 22, 7-ம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 26, 8-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29.

கேரளாவில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனுக்கள் பரிசீலனை – மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் – மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.

புதுச்சேரியில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – மார்ச் 19; வேட்பு மனுக்கள் பரிசீலனை – மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் – மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.

புதுச்சேரியில் வேட்பாளர் செலவினம் அதிகபட்சம் ரூ. 22 லட்சம். புதுச்சேரி தவிர இதர மாநிலங்களில் வேட்பாளர்கள் அதிக பட்ச செலவு ரூ. 38 லட்சம்.

தமிழகத்தில் மார்ச் 12-ல் வேட்பு மனு தாக்கல்; வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – மார்ச் 19; வேட்பு மனுக்கள் பரிசீலனை – மார்ச் 20; வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க கடைசி நாள் – மார்ச் 22; வாக்குப் பதிவு நாள்- ஏப்ரல் 6; வாக்கு எண்ணிக்கை- மே 2.

தமிழகம்…:

*வேட்புமனு தாக்கல் தொடக்கம் – 10.03.21*

*வேட்புமனு தாக்கல் நிறைவு – 19.03.21*

*வேட்புமனு பரிசீலனை – 20.03.21*

*வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் – 22.03. 21*

*தேர்தல் நாள் : 06.04.21*

*வாக்கு எண்ணிக்கை : 02.05.21*

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன் பாலகிருஷ்ணன் நியமனம்.

தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.

#TNAssemblyElection2021

Election Commission announces dates for Assembly polls for 5 states

ஆஸ்கர் பட்டியலில் 3 விருதுகளுக்கான பிரிவில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

ஆஸ்கர் பட்டியலில் 3 விருதுகளுக்கான பிரிவில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து ஓடிடியில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’.

இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இதனை அடுத்து ஆஸ்கர் விருது பட்டியலுக்கு ‘சூரரைப் போற்று’ படம் அனுப்பப்பட்டது.

இதில் பொதுப்பிரிவில் சிறந்த திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் போட்டியிட்டது.

போட்டிக்கு அனுப்பப்பட்ட படங்களை பார்த்த பின்னர் இறுதிப்பட்டியலை ஆஸ்கர் தேர்வு குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆக மொத்தம் 365 படங்கள் இதில் உள்ளன.

இந்தப் பட்டியலில் ‘சூரரைப் போற்று’ படமும் இடம் பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இடம் பிடித்துள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள படங்களை வாக்குப் பதிவின் மூலம் தேர்வு செய்வர்.

இதுவே எங்களுக்கு ஆஸ்கர் விருது… அதாவது அந்த பட்டியலில் படப்பெயர் இடம் பெற்றதே, பெரிய அங்கீகாரம் என ‘சூரரைப் போற்று’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆஸ்கர் படங்களின் பட்டியல் இங்கே லிங்க் தரப்பட்டுள்ளது:

https://www.oscars.org/news/366-feature-films-contention-2020-best-picture-oscarr

Actor Suriya’s Soorarai Pottru joins OSCARS

More Articles
Follows