2.0 படத்தில் எமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியது சவாலான விஷயம்..: ரவீணா ரவி

2.0 படத்தில் எமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியது சவாலான விஷயம்..: ரவீணா ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amy jacksonசினிமாவில் அழகான மற்றும் இனிமையான குரல் எப்போதுமே ஒரு நடிகைக்கு முக்கியமான அங்கமாக இருக்கிறது. தன்னுடைய தனித்துவமான உச்சரிப்புகளால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்த ரவீணா ரவி, தற்போது நடிகையாகவும் மாறியிருக்கிறார். இனிமையான குரல் மட்டுமல்லாமல், அதை எப்படி சிறப்பாக பேசுவது என்பதில் ரவீணா ஒரு மாஸ்டர். அவர் கூறும்போது, “படங்களுக்கு டப்பிங் செய்வதில் சில சவால்கள் உள்ளன. நாம் டப்பிங் பேசும் பெண் கதாபாத்திரங்களின் இயல்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எந்த காட்சிக்கு எப்படி பேச வேண்டும் என்பது நமக்கு கச்சிதமாக தெரியும். 2.0 படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் செய்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. காரணம், நான் டப்பிங் பேசும்போது, அது முழுக்க க்ரீன்மேட் காட்சிகளாக இருந்தது. அதன் சூழலை கற்பனை செய்து சரியான உணர்வை கொடுக்க நிறைய சிரமப்பட்டேன்” என்றார்.

டப்பிங்கில் தனது பல சவால்களை பற்றி பேசிய ரவீணா, காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்த சவாலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். “என் முதல் படமான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கதாநாயகனின் மனைவியாக, வேலைக்கு போகும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். என் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது. உண்மையாக என் வாழ்க்கையில் அத்தகைய சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டதில்லை. அதனால் நடிப்பு பயிற்சி மூலம் என்னை தயார் செய்ய வேண்டியிருந்தது” என்றார் ரவீணா.

இந்த படத்தில் ஒரு நாயகன் சுரேஷ் ரவிக்கும், ரவீணாவுக்கும் இடையே ஒரு அழகான காதல் பாடல் உள்ளது. அவர்களின் கெமிஸ்ட்ரியை பற்றி மொத்த படக்குழுவே பாராட்டி வருகிறது.

“சமகால உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து காவல்துறை உங்கள் நண்பன் படம் பேசுகிறது. ஆனாலும், ஒரு சாதாரண மனிதனுக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையேயான பிணைப்பு படத்தின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக இருக்கும்.

சுரேஷ் ரவி மற்றும் ரவீணா ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஆர்.டி.எம் படத்தை இயக்கியிருக்கிறார். மைம் கோபி, கல்லூரி வினோத் மற்றும் சில பிரபல நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பி.ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் வைட் மூன் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. ஆதித்யா சூர்யா (இசை), விஷ்ணு ஸ்ரீ (ஒளிப்பதிவு), வடிவேல், விமல்ராஜ் (எடிட்டர்) மற்றும் ராஜேஷ் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

*கூர்கா* யோகிபாபுக்கு ஜோடியாக கனடா மாடல் எலிஸ்ஸா

*கூர்கா* யோகிபாபுக்கு ஜோடியாக கனடா மாடல் எலிஸ்ஸா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gurkhaயோகிபாபுவின் கூர்கா படத்துக்குள் புதுப்புது ஆட்கள் வந்தவாறு இருக்கிறார்கள். சமீபத்தில் நவநாகரீக விஷயம் ஒன்றும் நடந்திருக்கிறது. ஆம், சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா படத்தில் வெளிநாட்டு நடிகை நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஒரு செய்தி இருந்தது. தற்போது அது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கனடா மாடல் எலிஸ்ஸா, அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, இறுதியாக எலிஸ்ஸா தான் சரியான தேர்வு என்று அவரை தேர்வு செய்திருக்கிறார்.

இது குறித்து சாம் ஆண்டன் கூறும்போது, “கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்த பட வாய்ப்பை தன் வசப்படுத்தி இருக்கிறார். எல்லோரும் நினைப்பது போல, அவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கவில்லை” என்றார்.

டிசம்பரில் தொடங்கும் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் இருக்கிறது. நாய் ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு, வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த கடத்தல் டிராமா.

அதர்வா முரளி நடித்துள்ள ‘100’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் சாம் ஆண்டன்.

4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில், சில முக்கிய நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பணிபுரிகிறார்கள். கிருஷ்ணன் வசந்த் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (எடிட்டிங்) ஆகியோரும் பணிபுரிகிறார்கள். மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சுந்தர் சி – சிம்பு கூட்டணியில் ரோபோ சங்கர்

சுந்தர் சி – சிம்பு கூட்டணியில் ரோபோ சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu robo shankar‘அத்தாரின்டிக்கி தாரெடி’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

சிம்பு நாயகனாக நடிக்க இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

கேத்ரின் தெரஸா & மேகா ஆகாஷ் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

யோகி பாபு & மஹத்தும் ஆகியோரும் நடிக்கின்றனர்.

சிம்புவின் மாமியராக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

தற்போது ரோபோ சங்கரும் இணைந்துள்ளார்.

ஜார்ஜியாவில் இதன் சூட்டிங் அண்மையில் நடைபெற்றது.

தற்போது ஹைதராபாத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
Attachments area

கென்னடி கிளப்-பில் இணையும் சுசீந்திரன் – சசிகுமார் – பாரதிராஜா

கென்னடி கிளப்-பில் இணையும் சுசீந்திரன் – சசிகுமார் – பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Untitled-1சுசீந்திரன் தற்போது ஜீனியஸ் , ஏஞ்சலினா , சாம்பியன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

ஜீனியஸ் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் சசிகுமார் மற்றும் இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் “ கென்னடி கிளப் “ என்ற படத்தை இயக்குகிறார்.

சூரி , முனீஸ்காந்த் , மீனாட்சி , காயத்ரி , நீது , சௌமியா , ஸிம்ரிதி , சௌந்தர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்துக்காக பாலிவுட் வில்லனை தேடிவருகிறார் சுசீந்திரன்.

பாண்டியநாடு , பாயும் புலி மற்றும் மாவீரன் கிட்டு படத்துக்கு பின் D. இமான் , இயக்குனர் சுசீந்திரன் கூட்டணி இப்படத்தில் இணைகிறது.

ஒளிப்பதிவு குருதேவ். கலை சேகர்.B. நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தாய் சரவணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

பழனியை கதைக்களமாக வைத்து உருவாகவுள்ள இப்படம். வருகிற தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகவுள்ளது.

இயக்குனர் சுசீந்திரனின் தந்தை புகழ்பெற்ற கபடிக்குழுவின் நிறுவனர். அவர் 40 வருடமாக அந்த கபடி குழுவை நடத்தி பயிற்சியளித்து வருகிறார்.

அவரிடம் பயிற்சி பெற்ற பலர் தேசிய மற்றும் உலகளாவிய போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்கள் வென்றுள்ளனர். படத்தில் நிஜ பெண் கபடி வீராங்கனைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் படத்தில் நடிக்கும் நடிகர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

*என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா* பட மூலம் சித்ரா ரீ- எண்டரீ

*என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா* பட மூலம் சித்ரா ரீ- எண்டரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chitra delhi ganeshஎஸ்.எச்.மீடியா டிரீம் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’.

அறிமுக இயக்குநர் நவீன் மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக
நடிக்க, மதுமிதா ஹீரோயினாக நடிக்கிறார்.

இவர்களுடன் விஜய் டிவி ராமர், அம்பானி சங்கர், ராகுல் தாத்தா,
டெல்லி கணேஷ், நாஞ்சில் விஜயன், நெல்லை சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும், 22 ஆண்டுகளுக்கு
பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் சித்ரா, இப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாகிறார்.

குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து வெட்டியாக பொழுதை கழிக்கும் இளைஞர்களும், வாய்ப்பு வந்தால்
வாழ்க்கையில் சாதிப்பார்கள், என்ற கருவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம், கலர்புல்லான
காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் சித்ராவும், டெல்லி கணேஷும் ஹீரோவின் பெற்றோர்களாக நடித்திருந்தாலும், அவர்களது
பிளாஷ் பேக் காதல் காட்சிகள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்கும் விதத்தில் வந்திருக்கிறது.

மேலும்,
இவர்களுடன், ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அன்லிமிடேட்
காமெடியை கொடுத்திருக்கிறார்கள்.

இசை – லோகேஷ், ஸ்டண்ட் – ராக்கி ராஜேஷ், பாடல்கள் – கவி கார்கோ, எடிட்டிங் – சாஜித், நடனம் – பவர்
சிவா, மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்.

முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில்
நடைபெற உள்ளது.

அதை தொடர்ந்து படமும் விரைவில் வெளியாக உள்ளது.

*காலா* போன்ற படங்களை ரஞ்சித்தால் மட்டுமே கொடுக்க முடியும்.. விஜய் சேதுபதி

*காலா* போன்ற படங்களை ரஞ்சித்தால் மட்டுமே கொடுக்க முடியும்.. விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஇயக்குநர் பா.இரஞ்சித்தின் “கூகை திரைப்பட இயக்கம்” ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் வசந்தபாலன் எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா, பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், நடிகர்கள் பகவதி பெருமாள், ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி,

“இங்கு நிறைய உதவி இயக்குநர்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்.

ஒருவரிடத்தில் நீங்கள் கதை சொல்வது மிகவும் முக்கியம். கேட்கும் நபருக்கு புரியாவிட்டாலும் கூட, அவர்களுக்கு புரியும் படியாக நீங்கள் கதை சொல்ல வேண்டும். இந்த “96” திரைப்படத்திற்குள் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவும் வருவதற்குக் காரணம் இயக்குநர் பிரேம் எங்களிடம் கதை சொன்ன விதம் தான்.

அதே போல நமக்கு ஒரு விசயம் கிடைக்காமல் போனால், அடுத்தவர் மீது பழிபோடுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் நினைத்ததை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். “செக்கச் சிவந்த வானம்” படத்தில் நடிக்கும் போது, மணி சாரிடம் இந்த பண்பை நான் பார்த்து வியந்தேன்” என்று பேசினார்.

மேலும், இயக்குநர் பா.இரஞ்சித்துடன் எப்போது இணைவீர்கள்? என்ற கேள்விக்கு,

“ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். நட்பு வேறு தொழில் வேறு. இருவருக்குமே அதற்கான நேரம் அமைய வேண்டும்.

“காலா” பார்த்துவிட்டு அன்றே அவரிடம் பேசினேன். அவரால் மட்டும் தான் அப்படி படம் எடுக்க முடியும். அதே போல “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டினேன்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் நானும் ஜாதி ஒழிப்பு பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

More Articles
Follows