என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress sonaநல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளன..

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகிறார்கள். ஒரு பிரபல தமிழ் நாளிதழ் கூட “ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்” என்பது போன்ற செய்தியை வெளியீட்டுள்ளது. மேலும் இப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்தப் பச்சை மாங்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது,

“பச்சமாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரைலரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப்படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்” என்றார்

நடிகர் விஜய்யிடம் விலை போனதா ஹலோ ஆப்.? நெட்டிசன்கள் டென்சன்

நடிகர் விஜய்யிடம் விலை போனதா ஹலோ ஆப்.? நெட்டிசன்கள் டென்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayஇணையங்களில் தினம் தினம் ஒவ்வொரு ஆப் வந்துக் கொண்டிருக்கின்றன.

பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம், ஸ்கைப், வாட்ஸ் அப், டிக் டாக், ஸ்ம்யூல் உள்ளிட்ட பல ஆப் (APP) வந்த வண்ணம் உள்ளன.

இதில் பல செய்திகள் தினம் தினம் டிரெண்டாகின்றன.

இந்த நிலையில் புதிதாக வந்துள்ள ஹலோ ஆப் நிறுவனம் நிறைய டிரெண்ட்டுக்களை தினம் தினம் அறிமுகம் செய்து வருகிறது.

இதற்காக இந்த நிறுவன ஊழியர்கள் வாட்ஸ் அப் குரூப்புகள் உருவாக்கியுள்னர்.

சம்பளத்தில் ரஜினியை முந்துகிறாரா விஜய்.? நெட்டிசன்கள் காமெடி

அதில் இன்றைய ஸ்பெஷல் என்ன? என்ன டிரெண்ட்ங்கில் உள்ளது என பதிவிடுவார்கள்.

முக்கியமாக நடிகர்கள் பற்றிய தகவல்கள் அடிக்கடி பதிவிடுவதை பார்க்க முடியும்.

இதில் பணிபுரிபகர்கள் நிறைய பேர் தளபதி விஜய் ரசிகர்கள் இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை.

நடிகர்கள் ரஜினி, அஜித் உள்ளிட்டோர்களின் பட செய்திகளோ அவர்களை பற்றிய செய்திகளே வந்தால் அன்றைய தினத்தில் சம்பந்தமில்லாமல் தளபதி விஜய் பற்றிய ஏதாவது ஒன்றை டிரெண்ட் செய்ய நினைக்கின்றனர்.

அதாவது விஜய் நடனம், விஜய் பாடல்கள் என்று புதிய டிரெண்ட் அலட்ர் செய்வார்கள்.

இதனால் ஹலோ ஆப் விஜய்யின் சொந்த நிறுவனமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவர்கள் விஜய்யின் ரசிகர்களாவே இருக்கட்டும். அதற்காக பொதுமக்கள் பயன்படுத்தும் இது போன்ற ஆப்களில் தங்களை ஆசைகளை திணிக்கலாமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

அண்மையில் கூட ஒரு பத்திரிகையாளர் இதனை கேட்க சம்பந்தப்பட்ட நிறுவன நபர்கள் மழுப்பலாக பதில் சொல்லியுள்ளனர்.

உதயநிதி நடித்த சைக்கோ படத்தை யார் எல்லாம் பார்க்க கூடாது?

உதயநிதி நடித்த சைக்கோ படத்தை யார் எல்லாம் பார்க்க கூடாது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Psycho posterமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் ‛சைக்கோ’.

நாயகிகளாக அதிதி ராவ், நித்யா மேனன் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் நாளை மறுநாள் ஜனவரி 24ல் வெளியாகவுள்ளது.

மாறன் இயக்கத்தில் உதயநிதி-ஆத்மிகா இணையும் ‘கண்ணை நம்பாதே’

இந்த நிலையில் இந்த படக்குழுவினர் இந்த படம் குறித்து கூறியதாவது…

சைக்கோ படம் பாருங்கள். ஆனால் கண்டிப்பாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் பார்க்க வேண்டாம்.

கொலைக்களமான படம் என்பதால் குழந்தைகள் மனதளவில் பயப்படுவார்கள்.

ஆனால் 18 வயது நிரம்பியவர்கள் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மன்னிப்பு கேட்காத ரஜினி; நடிகர்கள் ஆதரவு… கட்சிகள் எதிர்ப்பு

மன்னிப்பு கேட்காத ரஜினி; நடிகர்கள் ஆதரவு… கட்சிகள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthதுக்ளக் 50 ஆண்டு விழாவில் தந்தை பெரியார் மற்றும் கடவுள் ராமர் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

இது தமிழக அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரும்பாலான கட்சிகள் ரஜினிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ரஜினி மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீடு முற்றுகை இடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் தெரிவித்து இருந்தது.

ரஜினி வீடு முற்றுகை: பாதுகாப்பு அரண் அமைக்க ரசிகர்கள் திட்டம்

ஆனால் பத்திரிகை செய்தியை நான் படித்தேன் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

இதனால் அரசியல் களம் சூடானது. பல டிவிக்கள் இதை வைத்தே 3 நாட்கள் விவாதங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக நடிகை குஷ்பூ, ஒளிப்பதிவாளர் நடிகர் நட்ராஜ், இயக்குனர் நடிகர் பேரரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ரஜினியின் பேச்சுக்கு திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அஜித் ஓகே… ரஜினி-விஜய்யை நம்பி பயனில்லை.; நயன்தாரா அப்செட்

அஜித் ஓகே… ரஜினி-விஜய்யை நம்பி பயனில்லை.; நயன்தாரா அப்செட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayantharaஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா நடித்து வந்தாலும் அவ்வப்போது டாப் ஹீரோஸ் படங்களிலும் தலை காட்டி வருகிறார்.

இதற்காக ரூ. 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளமும் பெற்று வருகிறார்.

அண்மையில் ரஜினியின் தர்பார், விஜய்யின் பிகில், அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதில் விஸ்வாசம் படத்தில் மட்டும்தான் நயன்தாராவுக்கு பெயர் கிடைத்துள்ளது. சிறப்பான நடிப்பை கொடுத்துத்திருந்தார்.

இறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” !

ஆனால் தர்பார் மற்றும் பிகில் படங்களில் நயன்தாராவுக்கு பெயர் கிடைக்கவில்லை. அவருக்கான காட்சிகளும் குறைவு.

விமர்சனங்களிலும் நயன்தாரா பெயர் பெரிதாக இடம் பெறவில்லை.

இதனால் நயன்தாராவும் அவரது ரசிகர்களும் கடும் அப்செட்டில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

டி. ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படத்தில் ஜோடியாக நமீதா

டி. ராஜேந்தர் இயக்கி நடிக்கும் படத்தில் ஜோடியாக நமீதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TR and Namithaதயாரிப்பு, ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு, இசை, பாடல்கள், வசனம், விநியோகம், கலை இயக்குனர் என அனைத்திலும் கலக்கும் சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர்.

ஒரே படத்திலேயே இத்தனையும் அவர் செய்துவிடுவார்.

சமீபகாலமாக அவர் படங்களை இயக்குவது இல்லை. அவர் இயக்கிய வீராசாமி படம் வந்து கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஹிட்லருக்கு பட்லராக கூட லாயக்கில்லாதவர் விஷால்… : டிஆர் ஆவேசம்

அண்மையில் கவண் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய படத்தில் இசை கலைஞராக நடித்து அந்த படத்தை தயாரிக்கிறாராம்.

இவருக்கு ஜோடியாக நமீதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows