கல்யாணம் பண்ணாம தப்பு பண்ணிட்டேன்.; சுயசரிதையை இயக்கி நடிக்கும் சோனா

கல்யாணம் பண்ணாம தப்பு பண்ணிட்டேன்.; சுயசரிதையை இயக்கி நடிக்கும் சோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனா.

தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லாமல், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தபோது திறமையை வெளிப்படுத்துபவராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார் சோனா.

பத்து வருடங்களுக்கு முன்பே ‘கனிமொழி’ என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறிய சோனா, தற்போது ஸ்மோக் (Smoke) என்கிற வெப்சீரிஸை இயக்குவதன் மூலம் இயக்குநர் தொப்பியையும் அணிந்துள்ளார்.

ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) நிறுவனத்துடன் இணைந்து தனது யுனிக் புரொடக்சன் (Uniq Production ) மூலமாக ஒரு தயாரிப்பாளராகவும் இந்த வெப்சீரிஸை தயாரித்து நடிக்கும் சோனா இதற்கான கதையையும் தானே எழுதியுள்ளார்.

இந்த வெப்சீரிஸ் குறித்த அறிமுக நிகழ்வில் இதுவரையிலான தனது திரையுலக பயணம், தான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் இந்த வெப்சீரிஸுக்கான கதை உருவான விதம் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார் சோனா.

“2000-ல் என்னுடைய பயணம் தமிழில் தொடங்கியது. அதன்பிறகு 2003-ல் தெலுங்கிலும் நுழைந்தேன். அங்கேயும் என்னுடைய பயணம் நல்லபடியாக சென்றது. பிறகு கொஞ்சநாள் கழித்து சில காரணங்களால் நடிப்பை விட்டு ஒதுங்கி மலேசியா சென்றேன்.

பின்னர் மீண்டும் சிவப்பதிகாரம் படம் மூலம் திரும்பி வந்தேன். அதன்பிறகு மலையாளம். கன்னடம் என மற்ற மொழிகளிலும் அழைப்பு வந்தது.

சில படங்களில் நடித்த பிறகு மீண்டும் ஒரு இடைவெளி.. அதன் பிறகு மீண்டும் சினிமா தான் என முடிவு செய்து தொடர்ந்து பயணித்து வருகிறேன்.

சிவப்பதிகாரம் படத்தில் மன்னார்குடி பளபளக்க என்கிற பாடலுக்கு ஆடிவிட்டு வந்தபோது எனக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. ஆனால் அதுதான் என் வாழ்க்கையையே மாற்றப் போகிறது என அப்போது தெரியவில்லை.

அதன்பிறகு 4 வருடங்கள் கழித்து தான் அதன் பாதிப்பை உணர்ந்தேன். என்னால் திருமணம் கூட பண்ண முடியவில்லை. நாம் ஏதோ தப்பு பண்ணி விட்டோமே என்று நினைக்க ஆரம்பித்தேன்.

சோனா

என்னை ஒரு கவர்ச்சி நடிகையாகவே தான் பார்க்கிறார்கள்.. அது என்னுடைய தவறுதான். ஆனால் நானும் ஒரு சராசரி பெண் தான்.. என் வீட்டு வேலைகளை நான் தான் செய்கிறேன்.. என்னை கவர்ச்சி நடிகை என சொல்வது ஒரு கட்டத்திற்கு மேல் பிடிக்காமல் போனது. அதனால் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை தேடினேன்.

ஒரு கட்டத்தில் என் மீதான கவர்ச்சி நடிகை என்கிற இமேஜை மாற்றுவதற்காக சின்னத்திரை சீரியல்களில் அம்மா வேடங்களில் கூட நடித்தேன். ஆனாலும் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

நான் ஏதோ ஒன்றை ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டே இருந்திருக்கிறேன்.. சினிமாவைப் பொறுத்தவரை நான் நினைக்காத அளவுக்கு நன்றாகவே வாழ்ந்திருக்கிறேன். எல்லாமே எனக்கு கேட்காமலேயே கிடைத்தது. வாழ்க்கையில் எனக்கு வந்த சில பிரச்சனைகள் தானாகவே சரியாகின. சில பிரச்சனைகளை நான் சிரமப்பட்டு போராடி சரி செய்ய வேண்டி இருந்தது.

சில தப்புகளை நாம் பண்ணி இருப்போம். சில தப்புகளை நாம் பண்ணியிருக்க மாட்டோம். ஆனால் இந்த இரண்டினாலும் ஏற்படும் பிரச்சனைகளை நாம் தான் அனுபவிப்போம்.. இத்தனை வருட அனுபவத்தில் தான் உணர்ந்து கொண்ட விஷயங்களில் முக்கியமானது யாரையும் இவர் இப்படித்தான் என எளிதாக கணித்து விடாதீர்கள். யாரையும் கெட்டவன் என உடனடியாக கூறி விடாதீர்கள் அன்றைக்கு அவர்களது சூழல் வேறு மாதிரி இருந்திருக்கலாம். அது அவர்கள் பேச்சிலோ செயலிலோ வெளிப்பட்டிருக்கலாம்.

நானே கூட சிலரை அப்படி தப்பாக நினைத்திருக்கிறேன். 10 வருடத்திற்கு முன்பு சில விஷயங்களுக்காக நான் ஆவேசமாக நடந்து கொண்டதை இப்போது நினைத்து பார்த்தால் அந்த விஷயங்களை இன்னும் கொஞ்சம் மென்மையாக கையாண்டிருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது. திரை உலகில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் தான் என்றாலும் இவ்வளவு ஆண்கள் இல்லை என்றால் நிச்சயமாக இந்த திரை உலகில் என்னால் போராடி நின்று இருக்க முடியாது.

பலரும் எனக்கு பின்புலத்தில் ஆதரவாகவே இருந்திருக்கிறார்கள். அரசியலை தொடர்ந்து கவனித்து வந்தாலும் அதில் ஈடுபடும் அளவிற்கு ஆர்வமில்லை. சில நேரங்களில் ஏன் தான் சினிமாவுக்கு வந்தோமோ என்று நினைப்பேன். ஆனால் சினிமா என்பது ஒரு மாயை.. நம்மை மீண்டும் உள்ளே இழுத்து வந்துவிடும்..

2010ல் குமுதம் இதழுக்காக தேவி மணி சார் ஒரு கவர் ஸ்டோரி செய்தார். அது ஆரம்பித்து அது கிட்டத்தட்ட 20 வாரத்திற்கு மேல் சென்று வரவேற்பு பெற்றது. அப்போதுதான் பத்திரிகையாளர் தேவி மணி இதையே நீங்கள் திரைப்படமாக உருவாக்கினால் என்ன என கேட்டார். அந்த கவர் ஸ்டோரியை புத்தகமாக உருவாக்கியபோது தான், நான் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேனா என ஆச்சரியப்பட்டேன்.

அதன்பின்னர் இந்த கதையை நேரம் கிடைக்கும்போது எல்லாம் டைரியில் எழுத துவங்கினேன். 2017-ல் டைரக்சன் கோர்ஸில் சேர்ந்து ஒளிப்பதிவு உள்ளிட்ட சில நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டேன்.

எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களிடம் இந்த கதையை சொன்னதுமே எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். அவர்களது ரியாக்ஷனை பார்த்து என்னை கிண்டல் செய்கிறார்களோ எனது தான் நினைத்தேன். ஆனால் அவர்களோ இது ஒரு நடிகையின் கதை மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணும் தங்களுடன் தொடர்பு படுத்தி பார்க்கக்கூடிய படம் என்று பாராட்டி ஊக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தான் எனக்கென ஒரு டைரக்ஷன் குழுவை உருவாக்கினேன்.

சோனா

எனக்கு நன்கு அறிமுகமான சில இயக்குநர்கள், ஒளிப்பதிவார்களிடம் இதுபற்றி கலந்து விவாதித்தேன். கதை ராவாக இருக்கிறதே என்று சொன்னார்களே தவிர யாரிடமும் இருந்து எந்த எதிர்மறை கருத்துக்களும் வரவில்லை.

இதை எழுதி முடித்ததும் இதை படமாக்க யாரை அணுகுவது என நினைத்த சமயத்தில் தான் எனக்கு ஒரு பெரிய தூணாக ஷார்ட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கை கொடுத்தது. இது ஒரு இயக்குநராக கிடைத்த வாய்ப்பு என்பது சொல்வதைவிட என்னுடைய கனவை, கதையை சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்றே சொல்வேன்.

இத்தனை வருடங்களில் நான்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அத்தனை பட இயக்குநர்களுக்கும் இந்த வெப்சீரிஸை அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக நான் அடுத்த கட்டத்திற்கு வளர தொடர்ந்து ஆதரவு தந்த நீங்கள் ஒரு இயக்குனராக வளரவும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்.

இந்த வெப்சீரிஸை பல சீசன்களாக எடுக்கும் திட்டம் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளை கதையாக உருவாக்கி இருக்கிறேன் இந்த முதல் சீசனில் எத்தனை எபிசோடுகள் எடுக்கப் போகிறேன் என திட்டமிடவில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் நடிகைகளின் கதைகளை யாராவது ஒருவர் படமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் என் கதையை அப்படி வேறு யாரும் சொல்லக்கூடாது என்பதால் நானே சொல்லி விடுகிறேன். ஆனால் இதில் 99 சதவீதம் உண்மையைத்தான் பேசப்போகிறேன். அதற்காக நீங்கள் அதற்காக என்னை கழுவி ஊற்றினாலும் பரவாயில்லை. இதில் நிஜமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவற்றின் பெயர்களை எல்லாமே மாற்றி இருக்கிறேன்.

இன்னும் ஒரு ஹைலைட் என்னவென்றால் இந்த படத்தில் சனா என்கிற என்னுடைய கதாபாத்திரத்தின் பல்வேறு காலகட்ட தோற்றங்களில் நடிப்பதற்காக ஒவ்வொரு வயதிலும் என்னைப் போன்ற தோற்றம் போன்ற ஐந்து சனாக்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறேன்.

இந்த கதை ஒரு உணர்ச்சிகரமான பயணமாக இருக்கும்.. இதை திரைப்படமாக எடுக்கலாமே என பலர் கேட்கின்றனர். இது நல்ல கதையாக இருந்தாலும் ராவாக இருப்பதால் சில பேருக்கு பிடிக்காது. ஆனால் ஓடிடியில் இதை சுதந்திரமாக உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது. என்னுடைய படத்திற்கு நானே சான்றிதழ் கொடுப்பது என்றால் யு/ஏ சான்றிதழ் தரும் அளவிற்கு இந்த தொடர் இருக்கும்.

இந்த வெப்சீரிஸ் வெளியாகும்போது ‘தி பிகினிங் ஆப் எண்ட்’ (The Begining Of End) என ஒரு டேக்லைனை சேர்க்க இருக்கிறேன். அதாவது ஒரு கவர்ச்சி நடிகையின் முடிவு என்பதுதான் அதற்கு அர்த்தம். நாளை பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. சென்னை மற்றும் கேரளாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஷார்ட்ஃபிலிக்ஸ் துணையுடன் இதை நானே தயாரிக்கிறேன்.

மலையாளத்திலும் எனக்கு வரவேற்பு இருப்பதால் அங்கே மொழிமாற்றம் செய்து வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. படத்தை இயக்கிக்கொண்டே நடிப்பது கடினம் போலத்தான் தெரியும். கூடுதலாக எனக்கு தயாரிப்பு சுமையும் சேர்ந்து இருக்கிறது. ஆனாலும் நீங்கள் நினைப்பது போல இது எனக்கு கடினமாக இல்லை.

இந்த வெப்சீரிஸில் கதாநாயகனாக முகேஷ் கண்ணா நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக கபில் ராய் மற்றும் கலை இயக்குனராக பாலா ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர் ஒருவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த உள்ளேன். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரம் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்” என்று கூறினார் சோனா.

சோனா

ACTRESS SONA HEIDEN SMOKE MOVIE biopic

SET – 1 https://sendgb.com/ySk2f3g8n0V

SET – 2 https://sendgb.com/OsSp8GrKTUy

ஜெயிலரை தொடர்ந்து லியோ-வுக்கும் எதிர்பார்ப்பு.; தமிழகத்தை தாண்டி ஓடும் ரசிகர்கள்

ஜெயிலரை தொடர்ந்து லியோ-வுக்கும் எதிர்பார்ப்பு.; தமிழகத்தை தாண்டி ஓடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கேரளா ஆந்திரா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் ரசிகர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

அந்த மாநிலங்களில் அதிக அளவு புக்கிங் நடைபெறுவதால் பல தியேட்டர்களில் கூடுதல் சிறப்பு காட்சிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கும் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே மற்ற மாநிலங்களுக்கு ரஜினி ரசிகர்கள் சென்று அதிகாலை காட்சிகளை பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் அதிரடியான விமர்சனங்களை பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Like Jailer movie Leo shows got increased on other States

டெவில் அரசியல்வாதியான மாளவிகா.; பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டுடன் கூட்டணி

டெவில் அரசியல்வாதியான மாளவிகா.; பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர்.

தற்போது மிக சுவாரஸ்யமான ஒரு படத்தோடு ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். நாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் “டெவில்” எனப் பெயரிடப்பட்ட இப்படம், பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் என்ற டேக்லைனுடன் வருகிறது.

இந்தப் படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் நவம்பர் 24, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை, தயாரிப்பாளர்கள் இந்த படத்திலிருந்து சக்திவாய்ந்த அரசியல்வாதி வேடத்தில் நடிக்கும் கதாநாயகி மாளவிகா நாயரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிட்டனர்.

இப்படத்தில் மணிமேகலா எனும் கேரக்டரில் மாளவிகா நாயர் நடிக்கிறார். இவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் அரசியல்வாதியாக தோன்றும் இவரது கதாப்பாத்திர பின்னணியில் , அமைதியை வெளிப்படுத்தும் புறாக்கள் போஸ்டரில் காணப்படுகின்றன.

‘டெவில்’ படத்தில் நந்தமுரி கல்யாண் ராம், மிகவும் கடினமான ஒரு ரகசியத்தைத் கண்டுபிடிக்கும் பிரிட்டிஷ் ரகசிய ஏஜென்டாக ரசிகர்களை வசீகரிக்கவுள்ளார்.

குறிப்பிடத்தக்க மெகா ஹிட் படங்களை தந்த அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனம் “டெவில்” படத்தை வழங்குகிறது.

தயாரிப்பு வடிவமைப்பாளரான காந்தி நதிக்குடிகர் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தை உருவாக்க விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளார்.

சௌந்தர் ராஜன்.S ஒளிப்பதிவும், தம்மிராஜின் படத்தொகுப்பும் வெள்ளித்திரையில் கதைக்கு உயிர் கொடுத்துள்ளது.

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஸ்ரீகாந்த் விசாவின் திறமையான குழு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை அழகாக வடிவமைத்துள்ளது.

இந்த ஸ்பை த்ரில்லர் படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

அபிஷேக் பிக்சர்ஸ் இப்படத்தை வழங்குகிறார்கள்

நடிகர்கள்: நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா மற்றும் பலர்

பேனர்: அபிஷேக் பிக்சர்ஸ்
வழங்குபவர்: தேவன்ஷ் நாமா
தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்: அபிஷேக் நாமா
கதை, திரைக்கதை, வசனம்: ஸ்ரீகாந்த் விசா
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன்.எஸ்
இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: காந்தி நதிக்குடிகர்
எடிட்டர்: தம்மிராஜு
தலைமை நிர்வாக அதிகாரி: பொதினி வாசு
கதை உதவி : பிரசாந்த் பரடி
இணை இயக்குநர்: சலசனி ராமராவ்
ஆடை வடிவமைப்பாளர்: விஜய் ரத்தினம் MPSE
ரீ ரெக்கார்டிங் மிக்ஸ் : ஏ எம் ரஹ்மத்துல்லா ஏ. எம். ரஹ்மத்துல்லா
சண்டைக்காட்சி: வெங்கட் மாஸ்டர்
போஸ்டர் வடிவமைப்பு: கன்னி ஸ்டுடியோஸ்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: வால்ஸ் & டிரெண்ட்ஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஆடை வடிவமைப்பு: அஸ்வின் ராஜேஷ்

Devil

Malvika Nair as politician in spy thriller Devil

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஐஸ்வர்யா

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது.

இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது. நாம் மனது வைத்தால் உணவில்லாமல் தவிப்பவர்கள் நிலையை மாற்ற முடியும்.

இந்நிறுவனத்தின் சார்பில் உலக உணவு தினத்தன்று வருடா வருடம் ஒரு நிகழ்வு நடத்தப்படுகின்றது.

உணவளிக்கும் திட்டம்

இந்த நிகழ்வில் 5,000 க்கு பேருக்கு பிரியாணி உணவு சமைத்து காஞ்சிபுரம், செங்கல் பட்டு, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில், 150க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவன செயல்பாட்டாளர்கள் வாகனங்கள் மூலம் நேரில் சென்று உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நடத்திய இந்த வருட நிகழ்வினில்.. ஜெர்மனியி அரசு ஆலோசகர் ஜெனரல் மைக்கேலா குச்லர், காவல் உதவி ஆணையர் (அடையாறு வட்டம்) – திரு. நெல்சன், துணை ஆட்சியர் – திருமதி ப்ரீத்தி பார்கவி, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் நடிகை சனம் ஷெட்டி ஆகியோருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துக் கொண்டு, கொடியசைத்து இந்நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வினில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

உணவளிக்கும் திட்டம்

ஆலனை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும், ஆரம்பத்தில் சில விசயங்களை இணையத்தில் பகிரச்சொல்லி கேட்பார். பின்னர் அவர் செய்யும் விசயங்கள் பார்த்து பிரமித்தேன்.

அதன் பின் நானாகவே எனக்கு தெரிந்தவர்களிடம் ஆலனின் ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிதேன். இன்றைய சமூகத்தில் நமக்கு 35 ரூபாய் என்பது வெகு சாதாரணமான பணம் அது 35 ஆயிரம் கோடியாக தேவைப்படுபவர்களுக்கு சென்று சேர்வது ஆச்சர்யம்.

ஆனால் அந்த ஆச்சர்யம் நிகழ வேண்டுமெனில் அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். 100, 200 ரூபாய் கூட இல்லை வெறும் 35 ரூபாய் தான் நாம் கொடுக்கப்போகிறோம்.

இந்த நல்ல விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதால் தான் இதில் கலந்துகொள்ள சம்மதித்தேன். இன்று மொய் விருந்து நடைபெறுகிறது. மிக எளிமையானவர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் இந்த மாபெரும் செயல்பாட்டில் ஆலன் பல காலமாக இயங்கி வருகிறார். அவரது இந்த சமூகச்செயல்பாட்டை அனைவரும் பாராட்ட வேண்டும், அவர் என் நண்பர் என்பது பெருமையாக உள்ளது. எல்லோருக்கும் உணவளிக்கும் இந்த மிகப்பெரிய செயல்பாட்டில் நாம் அனைவரும் நம்மால் முடிந்த ஆதரவைத் தர வேண்டும். நான் என்றும் ஆலனுக்கு துணையாக இருப்பேன் அனைவருக்கும் நன்றி.

உணவளிக்கும் திட்டம்

World food day Aishwarya Rajesh news updates

இவர் காமெடியன் அல்ல ரியல் ஹீரோ.. 4வது ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா

இவர் காமெடியன் அல்ல ரியல் ஹீரோ.. 4வது ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலா. இவர் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் செய்த காமெடிகள் இவரை பிரபலம் ஆக்கியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மேலும் சில படங்களிலும் இவர் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘தில்லு இருந்தா போராடு’ என்ற படத்தில் வனிதா விஜயகுமாருடன் இவர் நடித்திருந்தார்.

ஏழ்மை நிலையில் இருந்து வந்து பாலா வறுமையின் நிலை உணர்ந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

நிறைய ஏழை மாணவர்களை படிக்க வைத்து உதவி செய்கிறார். மேலும் வசதி இல்லாத மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் உதவியும் செய்து வருகிறார்.

இந்த செய்திகளை நாம் ஏற்கனவே நம் FILMISTREET தளத்தில் பார்த்து இருந்தோம்.

இந்த சூழ்நிலையில் சென்னை கோயம்பேட்டிலுள்ள உணர்வுகள் அறக்கட்டளைக்கு, தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸை வழங்கினார் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகருமான பாலா.

தொண்டு அமைப்புக்கு இவர் ஆம்புலன்ஸ் வழங்குவது இது 4-ம் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா

Comedy Actor Kpy Bala donated Ambulance to Trust

விஜய் படத்துக்கு காம்போ ஆஃபர்.; ‘லியோ’ டிக்கெட் கட்டணம் மீது நடவடிக்கை வருமா.?

விஜய் படத்துக்கு காம்போ ஆஃபர்.; ‘லியோ’ டிக்கெட் கட்டணம் மீது நடவடிக்கை வருமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் ரசிகர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சினிமாஸ் என்ற திரையரங்கில் ‘லியோ’ டிக்கெட் விலை 450 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு டிக்கெட் விலை 200 ரூபாய் என்றாலும் பாப்கார்ன் மற்றும் குளிர்பானங்கள் சேர்த்து 450 க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதை ரசிகர்கள் தட்டி கேட்ட போது.. இஷ்டம் இருந்தால் வாங்குங்க என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கான டிக்கெட் விலையை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என அரசுகள் அறிவித்துள்ள நிலையில் தற்போது இதுபோன்ற நடவடிக்கைகளில் சில திரையரங்குகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த கோம்போ ஆஃபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leo Tickets combo offer makes issue

More Articles
Follows