தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இரண்டு வாரங்களுக்கு முன்பு, தான் கங்கையில் சமாதி ஆக போகிறேன் என கூறி மாயமானவர் வேந்தர் மூவிஸ் மதன்.
இந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் கூறியிருந்தார்.
இதனையடுத்து, மதன் தாயார் மற்றும் மதனின் இரு மனைவிகளும் சரமாரியாக புகார்களைக் கூறி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் வாரணாசியில் (காசி) பகுதியில் மதனை தேடி வந்தனர்.
அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பாபத்பூர் விமான நிலையத்திற்கு மதன் வரவிருப்பதை அறிந்த போலீசார் விமான நிலையத்தை சுற்றி வளைத்தனர்.
இதனையறிந்த மதன் விமான நிலையத்தின் வேறு வாயில் வழியாக தப்பிச்சென்று விட்டாராம்.
மாயமான மதனை பிடித்துவிட்டால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.