தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேந்தர் மூவிஸ் மதன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார்.
கிட்டதட்ட ஒரு மாதமாகியும் அவரும் பிடிபடவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.
இதனிடையில் எஸ்ஆர்எம் குழுமம் சார்பாக மதன் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 2 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.
மதன் பற்றிய பல்வேறு கேள்விகளை போலீஸ் அதிகாரிகள் அவரிடம் கேட்டுள்ளனர்.
விரைவில் இதுகுறித்த முழுமையான தகவல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.