விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் “தேரும் போரும்”

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தினேஷ் நடிக்கும் “தேரும் போரும்”

Vikram sukumaranமதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழகத்தின் வாழ்வியல் மற்றும் உறவுமுறைகளை மிக அழுத்தமாக பதிவு செய்து தமிழ்திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். அவர் அடுத்ததாக இயக்கும் திரைப்படம் “தேரும் போரும்”

இதில் கதாநாயகனாக அட்டக்கத்தியில் அறிமுகமாகி குக்கூ,விசாரணை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தான் நடித்த அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது முழுமையான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்திய தினேஷ் நடிக்கிறார்.

மைனா,கும்கி, பைரவா,ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும் லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகிறனர். மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

இந்த படத்திற்காக ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடலாசிரியர் ஏகாதசி எழுதி அனைத்து பாடல்களும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

மிகுந்த பொருட்செலவில் முன்னனி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்குபெரும் “தேரும் போரும்” படத்திற்கு இப்போதே சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் முதல்வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் துவங்க இருக்கிறது. “தேரும் போரும்” திரைப்படத்தை வில்அம்பு, கென்னடி கிளப் படங்களை தயாரித்த தாய் சரவணனின் நல்லுசாமி பிக்ஸர்’ஸ் சார்பாக நடிகர் அருள்தாஸ் மற்றும் கார்த்திக்துரை இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்குகின்றனர்.

உலக தாய்மொழி தினத்தில் ‘கிளிக்கி’ மொழியை இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

உலக தாய்மொழி தினத்தில் ‘கிளிக்கி’ மொழியை இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

Director SS Rajamouliஇயக்குநர் SS ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழி உலகெங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த மொழி அத்திரைப்படத்துக்காக மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்ட ஒரு மொழியாகும். அந்த மொழியை உலக தாய்மொழிதினத்தன்று இயக்குநர் SS ராஜமௌலி அறிமுகம் செய்தார்.

கிளிக்கி மொழிக்காக மதன் கார்க்கி வடிவமைத்த எழுத்துக்கள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபோ நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தளத்தை இயக்குநர் SS ராஜமௌலி வெளியிட்டார். கற்பதற்கு உலகின் மிக எளிமையான மொழி என்ற அடைமொழியோடு கிளிக்கியின் தளம் வெளியிடப்படுகிறது. மூவாயிரம் சொற்களோடு ஆங்கில-கிளிக்கி-ஆங்கில ஒலி அகராதியும், தங்கள் பெயரைக் கிளிக்கியில் எழுதிப்பார்க்கும் கருவியும், மொழியைப் பயில காணொளிகளும், கணினித்திரையில் தட்டச்சுச் செய்ய மூன்று எழுத்துருக்களும்(fonts), சொற்களைக் கற்பதற்கான சொல் விளையாட்டுக்களும், பிற மொழிகளில் இருந்து கிளிக்கி மொழிக்கு ஒலிமாற்றும் கருவியும் இந்தத் தளத்தில் கிடைக்கும்.

உலக மொழிகளின் எழுத்து வடிவங்களையும் அவற்றைக் கற்பதில் உள்ள சிரமங்களையும் ஆராய்ந்து கிளிக்கி மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியின் எண்களை இரண்டு நிமிடத்தில் கற்க முடியும். ஒரு மணிநேரக் கற்றலின் மூலம் இந்த மொழியை எழுத மற்றும் படிக்கக் கற்றுக்கொள்ளலாம். ஆங்கிலம் கற்க 52 குறியீடுகளை ஒருவர் அறிய வேண்டும். கிளிக்கி மொழியை கற்க 22 குறியீடுகளை அறிந்தால் போதும். கிளிக்கி மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் மற்றும் சிறப்பு சொடுக்கொலிகளை(clicks) எப்படி உச்சரிக்க வேண்டும் எழுத வேண்டும் என்பது காணொளி மூலம் இந்தத் தளத்தில் கற்பிக்கப்படுகிறது.

கிளிக்கி மொழியில் பாடல்களும், கதைகளும், இலக்கண நூல்களும் விரைவில் வெளிவரும். கிளிக்கி மொழி பயில்வோருக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுவரும் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், சாதி, மதம், இனம், நாடு போன்ற எல்லைகளின்றி விரிந்து உலகை இணைக்கும் ஒரு மொழியாக கிளிக்கி மொழி இருக்கும் என்று நம்புகிறது. கிளிக்கி மொழியை பயில விரும்புவோர் www.kiliki.in என்ற இணைய தளத்தில் விலையின்றிக் கற்கலாம்.

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அறிக்கை

TR press meetஇன்று (21.02.2020) சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள், செயலாளர் திரு. மன்னன் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
நேற்று 20.02.2020 சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர் அவர்கள், செயலாளர் திரு. மன்னன் அவர்கள் மற்றும் நிர்வாகிகளும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் இரு தரப்பினர் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

1. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் இரு தரப்பினரும் இணைந்து மேற்படி வரியினை (8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிப்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

2. தர்பார் திரைப்படத்தினை விநியோகம் செய்த வகையில் எழுந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதத்தில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இணைந்து தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் அந்த திரைப்படத்தில் பங்குபெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் அவர்களிடம் தார்மீக ரீதியில் அணுகி மேற்படி பிரச்சனை குறித்து பேசி சுமூக தீர்வு காண்பது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

3. புதிய திரைப்படம் வெளியாகி 8-வார காலத்திற்கு முன்பு Digital Platform என்று அழைக்கப்படும் Amazon, Netflix போன்றவற்றில் வெளியிட கூடாது என்றும், தற்போது பாலிவுட்டில் பின்பற்றப்படும் நடைமுறை போலவே இங்கு தமிழகத்திலும் பின்பற்றபட வேண்டும் என தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

4. புதிய திரைப்படம் வெளியாகி 100-நாட்களுக்கு முன்பாக எந்த ஒரு Satellite Channel-களிலும் அந்த திரைப்படம் ஒளிபரப்ப கூடாது என்று தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

5. திரையரங்குகளில் வசூலிக்கப்படும் நுழைவுக்கட்டணம், மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் கட்டண விகிதாச்சாரத்தியும் (Terms) சரிசெய்ய தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து 9-நபர்கள் ஆக மொத்தம் 18-நபர்கள் என கொண்ட குழு அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதனை இனிவரும் காலங்களில் முறைப்படுத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

6. இனிவரும் காலங்களில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை MG/Outrate அடிப்படையில் விநியோகம் செய்யும் சூழ்நிலை வரும் நிலையில் படத்தினை திரையிட்டு பார்க்காமல் (Preview Show) வியாபாரம் செய்வது இல்லை என்று இரு தரப்பினரும் ஒரு மனதாக முடிவு செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

யோகிபாபுவை நினைத்து சோக கீதம் பாடும் துணை நடிகை சுஜி

யோகிபாபுவை நினைத்து சோக கீதம் பாடும் துணை நடிகை சுஜி

suji pradeepa yogi babuரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட ஹீரோக்களில் படங்களின் முக்கியமான நடிகராகி விட்டார் யோகிபாபு.

ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இவருக்கு பல வருடங்களாக பெண் தேடிய நிலையில் அண்மையில் தான் பார்கவி என்ற பெண்ணை மணந்தார் யோகிபாபு.

இந்த நிலையில் இவரை நினைத்து இவரை ஒருதலையாக காதலித்த துணை நடிகை சுஜி பிரதீபா என்பவர் அவருக்கு திருமணமான நாள் முதல் டிக்டாக்கில் சோககீதங்களை பாடி வருகிறார்.

யோகிபாபுக்கு திருமணம் ஆகும் முன்பே இவர் இதுபோல செய்து வந்தாராம்.

தற்போது யோகிபாபுவின் திருமண போட்டோவை வைத்தும் பாடி வருகிறார்.

இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சட்டமன்றத்துல என்னைவிட நல்லாவே நடிக்கிறாங்க.. – கருணாஸ்

சட்டமன்றத்துல என்னைவிட நல்லாவே நடிக்கிறாங்க.. – கருணாஸ்

Karunasமணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “சங்கத்தலைவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட நடிகர் கருணாஸ் பேசுகையில்,

“இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்.

மேலும் அவர் பேசுகையில்…

“யாரோ கொடுத்த குரல் என்னோட குரல்னு சொல்றாங்க. வாட்ஸ் ஆப்பில் வருவதெல்லாம் உண்மைன்னு நினைச்சிக்கிறாங்க.

சட்டமன்றத்துல என்னைவிட எல்லாரும் பயங்கரமாக நடிக்கிறாங்க. அதனால மறுபடியும் நடிக்கவே வந்துவிட்டேன்.

தேனப்பனும் நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் இரவில் ஒன்றாக இருப்போம், அதனை மெரினா கடற்கரை அறியும்“ என்று பேசினார் கருணாஸ்.

தனுஷின் ‘கர்ணன்’ பட காட்சி லீக்; இயக்குனரை கைது செய்ய கருணாஸ் மனு

தனுஷின் ‘கர்ணன்’ பட காட்சி லீக்; இயக்குனரை கைது செய்ய கருணாஸ் மனு

Karunas demands ban on Karnan and Mari Selvaraj to be arrestedகலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன்.

பரியேறும் பெருமாள் படத்தை அடுத்து இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங்கில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் லீக்காகி வைரல் ஆகி வருகிறது.

அந்த காட்சியில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல் நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பாக காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளரும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பவானி வேல்முருகன், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது….

“1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்

தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது.

குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Karunas demands ban on Karnan and Mari Selvaraj to be arrested

Karunas demands ban on Karnan and Mari Selvaraj to be arrested

More Articles
Follows