சுதந்திர தின ஸ்பெஷலாக வரும் அரசியல் படம் •அண்ணனுக்கு ஜே•

சுதந்திர தின ஸ்பெஷலாக வரும் அரசியல் படம் •அண்ணனுக்கு ஜே•

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vetrimaaran Dinesh combo movie Annanukku Jai releasing on 17th Augustஇயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் Grass Root Film Company-ம், 20th Century Fox நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் அண்ணனுக்கு ஜே.

தற்கால அரசியலை நையாண்டி (political satire) செய்யும் இந்த திரைப்படத்தில், அட்டக்கத்தி தினேஷ் நாயகானாக நடித்துள்ளார்.

மஹிமா நம்பியார் கதா நாயகியாக நடிக்கிறார். மேலும், ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – அரோல் கொரேலி, ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத்தொகுப்பு – G.B.வெங்கடேஷ்.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார்.

இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். இத்திரைப்படம் ஆகஸ்டு 17 வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Vetrimaaran Dinesh combo movie Annanukku Jai releasing on 17th August

Vetrimaaran Dinesh combo movie Annanukku Jai releasing on 17th August

டிராஃபிக் ராமசாமி பட இயக்குனரின் உழைப்பால் மனம் மாறிய எஸ்ஏசி

டிராஃபிக் ராமசாமி பட இயக்குனரின் உழைப்பால் மனம் மாறிய எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Traffic Ramaswamy movie release and SAC reaction toward director Vickyசமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழக்கை வரலாறை மையமாக வைத்து டிராஃபிக் ராமசாமி என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

எஸ்ஏ. சந்திரசேகர் நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார்.

இவரிடம் ஐந்து வருடங்களுக்கு மேலாக உதவியாளராக பணிபுரிந்த விக்கி என்ற இளைஞர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

டிராஃபிக் ராமசாமி மனைவியாக ரோகினி நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய வேடங்களில் குஷ்பூ, சீமான், பிரகாஷ்ராஜ், ஆர்கே சுரேஷ், விஜய் ஆண்டனி, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

இந்த படத்திற்கு, ‘ஹர ஹர மாகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

‘கிரீன் சிக்னல்’ என்ற படநிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது.

இப்படத்தின் டைட்டிலில் டைரக்ஷன் மேற்பார்வை என தன்னுடைய பெயரை போட்டுக்கொள்ள முதலில் நினைத்தாராம் எஸ்.ஏ.சி.

ஆனால் இயக்குனர் விக்கியின் அசராத உழைப்பைப் பார்த்த பிறகு அவர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Traffic Ramaswamy movie release and SAC reaction toward director Vicky

சிவாஜி-முத்துராமன் பேரன் வரிசையில் நாகேஷ் பேரன் நடிக்கும் படம்

சிவாஜி-முத்துராமன் பேரன் வரிசையில் நாகேஷ் பேரன் நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nagesh grandson and Aanandbabu son Ghajesh Nagesh starring School Campusசிவாஜி கணேசனை தொடர்ந்து அவரது மகன் பிரபுவும், இவரை தொடர்ந்து இவரது மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

இவர்களைப் போல் முத்துராமன் மகன் கார்த்திக்கும், அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

தற்போது 3வது தலைமுறை வாரிசுகள் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர்.

இந்த வரிசையில் நாகேஷ் பேரனும் சினிமாவுக்கு வந்துள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு..

எம்என் குளோபல் குரூப் குழுவானது, ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி “ஸ்கூல் கேம்பஸ்” என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது.

ஏ.எம்.என் குளோபல் குரூப் மேனேஜிங் டைரக்டர் டாக்டர்.ஆர்.ஜே.ராம நாராயணா இந்த படத்தினை இயக்கி, தயாரிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஸ்ரீ சந்தோஷ் குமார் மால் IAS (மாவட்ட ஆட்சியர்) அவர்களால் டெல்லி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியக் கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் மற்றும் படத்தொகுப்பாளராக ராஜேஷ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

தேவா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் பிரபல பாடகர்கலான ஆஷா போஷ்லே, பி.சுசிலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்த படத்தில் பாடியுள்ளனர்.

படத்தின் நாயகர்களாக நடித்துள்ள ராஜ்கமல், கஜேஷ் நாகேஷ் ஆகியோர்களுக்கு ஜோடியாக கீர்த்தி மற்றும் காயத்ரி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் டெல்லி கணேஷ், மதன் பாப், ரிந்து ரவி மற்றும் ராதிகா மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

Nagesh grandson and Aanandbabu son Ghajesh Nagesh starring School Campus

school campus poster 26 correction size changes

 

ஜாக்கிசான்-ரஜினி ஸ்டைலில் குழந்தைகளை கவர அஜித் திட்டம்

ஜாக்கிசான்-ரஜினி ஸ்டைலில் குழந்தைகளை கவர அஜித் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala Ajith fight scenes in Viswasam movieஜாக்கிசான் மற்றும் ரஜினி ஆகிய இருவருக்கும் உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் இவர்களின் பைட் காட்சிகளில் காமெடி கலந்திருக்கும்.

இதனால் இவர்களுக்கு சின்ன சின்ன குழந்தைகளும் ரசிகர்களாக உள்ளனர்.

தற்போது அதுபோல ஒரு பைட் சீன் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தில் உள்ளதாம்.

திலீப் சுப்பராயன் இந்த சண்டையை வடிவமைத்துள்ளார். அண்மையில் இந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.

இத்துடன் மேலும் 4 அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் அவை அனல் பறக்கும் அதிரடி ஆக்சனாக இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

இரண்டு பாடல்கள் ஏற்கெனவே படமாக்கப்பட்டுவிட்டன. வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட் செய்கிறார்.

‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Thala Ajith fight scenes in Viswasam movie

ஜிவி.பிரகாஷ் வழியில் சமூக சேவையில் ஈடுபட்ட குப்பத்து ராஜா-க்கள்

ஜிவி.பிரகாஷ் வழியில் சமூக சேவையில் ஈடுபட்ட குப்பத்து ராஜா-க்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை கடற்பகுதிகளில் 60% பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. அது மீன்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது” என்கிறார் குப்பத்து ராஜா படத்தின் தயாரிப்பாளர் சரவணன்.

“நடிகர் ஜி.வி.பிரகாஷ், பல சமூக நடவடிக்கைகளில் தலைமை தாங்கி நடத்தி வருவதோடு,தலைசிறந்த சமூகத்தின் நலனில் அக்கறை உடைய நடிகராக பெயரை பெற்று வருகிறார்.

சமூக செயல்கள் செய்யும் அவரது நல்ல பழக்கமும், வழக்கமும் அவரது தயாரிப்பாளர்களையும் பின்பற்ற வைத்திருக்கிறது.

அவரது ஹீரோவின் பாத சுவடுகளை பின்பற்றி சமூக செயற்பாடுகளில் இறங்கியுள்ளார் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் “குப்பத்து ராஜா” படத்தின் தயாரிப்பாளர் சரவணன்.

“ஒரு நாட்டின் முன்னேற்றம் விவசாய நிலங்களில் செய்யும் அறுவடையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, கடல் வாழ்வையும் சார்ந்திருக்கிறது.

சமீப காலங்களில், மீன் சார்ந்த தொழில்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திந்திருக்கிறது, அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் இது வளர்ந்து வருகிறது.

குப்பத்து ராஜா தயாரிப்பாளர் சரவணன் இதை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை நம் முன் வைக்கிறார்.

“இரண்டு மாதங்களுக்கு முன், பெசன்ட் நகரில் படகு பந்தயம் நடத்துவதற்கு ஸ்பான்சர்ஷிப் பெறுவதற்காக பெருங்கடல் விழிப்புணர்வு குழுவை சார்ந்த சில நபர்கள் எங்களை சந்தித்தனர்.

விரிவான கலந்துரையாடல் மூலம், கடந்த 4-5 ஆண்டுகளாக கழிவுப் பொருட்கள் அதிக அளவில் கடலில் கலப்பது தெரிய வந்தது. அங்கு மீன் பிடிக்கும் மீனவர்களின் வலையில் சுமார் 60% பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்தது தெரிய வந்தது.

டால்பினின் தொண்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் சிக்கியிருக்கும் வீடியோக்களை காணும்போது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. படிப்படியாக இத்தகைய கழிவு பொருட்கள் அதிகரிப்பது, அந்த பகுதிகளில் மீன் இனப்பெருக்கத்தை பெருமளவில் குறைக்கும்.

பொதுமக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த உறுப்பினர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மராத்தான் ஏற்பாடு செய்தனர். ஆனால் அது வெற்றி பெறவில்லை.

எனவே அவர்கள் படகு போட்டி நடத்த முடிவு செய்தனர். அவர்கள் எல்லியட் கடற்கரை தேர்ந்தெடுக்கப்பட முக்கிய காரணம், வட சென்னை என அவர்கள் தங்களை அறிமுகப்படுத்தும் போதெல்லாம், அவர்கள் ரவுடிகள் என தரக்குறைவாக பார்க்கப்பட்டனர்.

எனவே, இந்த ‘படகுப் பந்தயத்திற்காக’ எங்களால் செய்ய முடிந்த சிறப்பான பங்களிப்பை செய்ய முடிவு செய்தோம். ஐ ட்ரீம்ஸ் தியேட்டர் உரிமையாளர் மூர்த்தி செய்த உதவி மிகப்பெரியது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இந்த நிகழ்வில் பங்கு பெற்றதோடு, மேலும் இத்தகைய நடவடிக்கைகளை அடுத்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் கூறும்போது, “பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் கவர்களை தவிர்ப்பது என்பது எளிதான விஷயம் அல்ல.

கடைகளில் ஒரு புத்தகம் வாங்கினால் கூட அதை ஒரு பிளாஸ்டிக் கவர் மூடியிருக்கும். நாம் அதை சாலைகளில் தூக்கி வீசக்கூடாது, அதை குப்பை தொட்டிகளில் போடலாம், அல்லது வீட்டிற்கு கொண்டு சென்று அவற்றை அகற்றலாம்” என்றார்.

Kuppathu Raja movie team set the norms of cleaning the shores

Kuppathu Raja movie team set the norms of cleaning the shores

Kuppathu Raja movie team set the norms of cleaning the shores 2

 

பர்ஸ்ட் சபாஷ் நாயுடு; நெக்ஸ்ட் தான் இந்தியன்-2… கமல் முடிவு

பர்ஸ்ட் சபாஷ் நாயுடு; நெக்ஸ்ட் தான் இந்தியன்-2… கமல் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhaasan decided to complete Sabash Naidu before Indian 2அண்மையில் கமல் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் வெளியானது.

இப்படத்தின் ரிலீசின் போது பிரச்சினைகள் வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் என கமல் கூறியிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தை கையில் எடுத்துள்ளார் கமல்.

இதில் கமல் ‘ரா’ ஏஜெண்ட்டாக நடித்துள்ளார்.

இப்படத்தில் மீதமுள்ள சில காட்சிகளை படமாக்கிவிட்டுதான் அடுத்த படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறாராம்.

அதாவது இப்படத்தை முடித்துவிட்டுதான் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் உலகநாயகன்.

Kamalhaasan decided to complete Sabash Naidu before Indian 2

More Articles
Follows